மீளாத கரந்தை மேலோர் !
கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பெருந்தகை செந்தமிழ்வேளிர்
ச இராமநாதன் அவர்களின் மறைவுச்செய்தி எதிர்பாராதது .
ஆற்ற முடியாத அவலம் தருவது .
கரந்தைக் கல்லூரியை – கலை அறிவியற் கல்லூரியாக நாளுக்கு நாள் புகழேற்றி மாற்றிய பெருமை அவரைச் சாரும் .
எண்ணற்ற தமிழ் விழாக்களை ஆர்வத்தோடு நடத்தினார் .
தலைமைச் செயலகம் வரும்போதெல்லாம் என் இல்லத்துக்கு வந்து என்னிடம் பரிவோடு பேசினார் .
பெருமிதமாக வாழ்ந்த அவரை மக்கட் செல்வங்கள் மருத்துவத் திலகங்களாகவும் வளர்ந்து அவர் வாழ்வுக்கு மேலும் புகழ் சேர்த்தனர் .
நலிவுக்கு யாரும் தப்ப முடியாது போலும் !
பெருந்தகையின் நினைவு கரந்தையை என்றும் வழிநடத்தும்
குடும்பத்தாருக்கு என் ஆறுதல்
கலங்கிய மனத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment