POST: 2022-03-18T09:43:22+05:30

என்றும் வாழும் ஆசிரியர் எல்லப்பன் !

திருக்குறள் நெறிபரப்பும் நோக்கத்தில் தமிழக அரசும் –
தமிழ் வளர்ச்சித்துறையும் பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றுகின்றன .

சிறார்களுக்கு 1330 குறட்பாக்களையும் விரல் சொடுக்கோடு – கலை நயத்தோடு ஆயிரக் கணக்கானச் சிறுவர்களுக்கு மனனம் செய்யும் உயர்ந்த பயிற்சியை ஊட்டி வளர்த்தவர் ஆசிரியர் திலகம் எல்லப்பன் .

பெருமைக்குரிய எல்லப்பன் மறைந்தார் என்ற செய்தி மாத்துயரை அளித்தது .

எளிமையும் பெருமையும் பூண்ட அவர் இன்றில்லை என்ற திருக்குறள் நெறியிலேயே கலந்தார் .

என் அருமைத் திருமகள் ஆதிரைக்கு ஐந்து வயதிருக்கும் போதே ஐம்பதுக்கு மேலான திருக்குறட்பாக்களை இனிமையாகக் கற்றுக் கொடுத்ததை இப்போதும் நினைவு கூர்கிறேன் .

மழலையர் நாவில் திருக்குறளைத் தவழச் செய்த ஆசிரியர் எல்லப்பன் புகழ் என்றும் நிலவி நிற்பதாகும் .

துயரத்தோடு
ஒளவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *