POST: 2022-03-19T09:39:36+05:30

தென்குமரித்திலகம் வாழ்க !

பெருந்தலைவரின் அருமந்த சீடராகவும் – காங்கிரசுப் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராகவும் ,

என்றும் ஓய்வறியாத உயரிய தொண்டராகவும் –

மக்கள் நலனுக்காகப் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட இலக்கியச் செல்வராகவும் ,
மேடை மன்னராகவும் –
இலக்கியக் கடலாகவும்
எவரோடும் பகைகொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிரும் இலக்கியச் செம்மல் குமரி அனந்தன் அவர்கள் 90 ஆம் அகவையைத் தொடுகிறார்கள் .

நாடாளுமன்றத்தில் தமிழுக்காக முழங்கியதும் – தமிழகத்தில் பனை வளம் பெருக முழங்கியதும் என்றும் ஒப்பில்லாதவையாகும் .

புகழ் பொலியும் திருமகளார் இரு மாநிலங்களின் மேதகு ஆளுநர் அவர்கள் தம் தந்தையார் தன்னை வளர்த்த தகைமையைப் பாராட்டிக் கூறியுள்ளார் .

சிந்தையிலும் – சென்னியிலும் பெருந்தலைவரையே நிலைநிறுத்திய கொள்கைக்குன்று குமரிஅனந்தன் பல்லாண்டு வாழ்க !

எண்ணிப் பத்தாண்டுகள் அவர் தாண்டுவதைத் தமிழகம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறது .

அண்மையில் தமிழக அரசு தகுதிமிக்க இத்தமிழ்ப் பெருந்தகைக்கு மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கிச் சிறப்பித்தது பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போல் இருந்தது .

வாழ்க ! வாழ்க !!

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *