அருமைத் திருமகள் வாணிக்கு நலமுண்டாகுக !
நூல் வந்தது .
கட்டுரைகளைப் படிக்கிறேன் .
புதியன தேடும் தங்கள் புலமைத்திறம் வெல்க !
மாமா தலைமை தாங்கியபோது நூன்மரபு பற்றி வினவியபோது
நுவல் என்ற சொல் நூல் என்றாயிற்று என்றேன் .
துகள் – தூள் ,
பகல் – பால்
என்று மாறியது போல
நுவல் மரபு நூல் மரபாயிற்று .
எண்ணிப்பார்க்கலாம் .
பெரும்பாலும் கரிய மணிகளைக் காலில் அணிவதில்லை ,
கழுத்தில் நீலமணியும் – கையில் நீலக்கல்லும்
இருப்பது போல நினைத்தேன் .
அருமைத்தங்கை தாயம்மாளுக்கு என் வாழ்த்து.
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment