தென்னாப்பிரிக்கத் திலகத்தின் மறைவு !
தர்பன் மாநகரில் மியர்பாங்க் தமிழ் மாமன்றத்தின் தூணாக மிளிர்ந்தவர்கள் பண்பாளர் திரு முதலியும் , அறச் செம்மல் ஆதிமூலம் நடேசன் (6.11.1922-20.3.2022) அவர்களுமாவார் .
அன்பு ,அடக்கம் , பண்பு ,பரிவு ,ஆர்வம் ,மனிதநேயம் ,
எங்கும் எதற்கும் தன் பெயர் சொல்லாத கொடைத் தகைமை இத்தனை பண்பு நலங்களையும் மொத்தமாகச் சேர்த்தால் திரு ஆதிமூலம் நடேசன் அவர்கள் தான் நினைவில் நிற்பார் .
உயர்ந்த திருவிளக்காக அமைந்த துணைவியார், ஒப்பற்ற புதல்வர்கள் என்று புகழ் பூத்துக் குலுங்கிய பூஞ்சோலையாக அந்தக் குடும்பம் ஒளிவீசுகிறது .
என்னை மறந்தாலும் என் மகன் பரதன் மீது அளப்பரிய பாசம் காட்டிவரும் செம்மல் மார்கனைப் பற்றிப் பரதன் பாராட்டாத நாளில்லை .
மார்கன் என் உயிர் காத்த உறவுகொண்டவர் .
என் மகன் பரதன்- நிசா திருமணத்திற்காக டர்பன். மாநகரிலிருந்து திரு நடேசன் குடும்பத்தோடு வந்து வாழ்த்தியதை நினைவு கூர்கிறேன்.
எங்கள் குடும்பத்தை மதித்த நிகழ்ச்சியாக அம்மா அடிக்கடி நெகிழ்ந்து குறிப்பிடுவார்கள்.
முதுமை கனிந்த 99 ஆவது வயதில்தான் திரு ஆதிமூலம் நடேசன் மறைந்தார் இருந்தாலும் இந்தப்பிரிவு பெரும்பிரிவு .
பண்பாட்டின் திலகமாக வாழ்ந்த திரு ஆதிமூலம் நடேசன் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறி அமைதி பெறுகிறேன் .
என் மனம் இன்றும் 1986 இல் நான் பங்குகொண்ட மியார்பேங்க் மாமன்றத்திலேயே தேங்கித் ததும்புகிறது .
வாழ்க மார்கன் குடும்பம் !
வளர்க நடேசனாரின் புகழ் !
வெல்க இந்திய – தென்னாப்பிரிக்க நல்லுறவு !
Mr Morgan nadesan is a Bright Jewel of the family
and his Administration and Affection
are Unattainable,
I Rememnber his Generosity
and Life Saving Magnanimity,
I Wish all the Best for Your Family .
With Remorseful Feelings
Dr Avvai Natarajan

Add a Comment