பி எம் மருத்துவமனை தந்த மன உருக்கம் !
சென்னை நங்கைநல்லூர்
B.M. மருத்துவமனை
40 – ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா
‘ 2022 ஆம் ஆண்டு,
மார்ச்சு திங்கள் 13 ஆம் நாள்
( 13 – 03 – 2022 )
ஞாயிற்றுக்கிழமை
தகுதியுரை பெறுபவர் :
டாக்டர். ஔவை நடராசன்
நாடறிந்த நற்றமிழர்,
ஈடற்ற தமிழறிஞர்,
பட்டிமன்றத் திலகம்,
கடல் கடந்தும் தமிழ் மணம் பரப்பி வந்துள்ளவர்,
உலகெங்கும் தமிழ் இலக்கியச் செல்வத்தை வாரி வாரி வழங்கியவர்,
இராமலிங்கர் பணிமன்றத்தில் தம்மை தோய்த்துக் கொண்டவர்,
தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறையின் அரசு செயலராக அமர்த்தப்பட்ட, ( IAS அல்லாத ஒரே ) பேரறிஞர்,
மேனாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
பத்மஸ்ரீ விருதாளர் என்பதோடு இன்னும் பல விருதுகளைப் பெற்றவர்.
மனிதநேயச் செம்மல்,
சாதி, மத, இன, மொழி கடந்து அனைத்துத் தரப்பு மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
இவர் முழங்காத இலக்கிய மேடைகள் உலகில் இல்லையென அறுதியிட்டுக் கூறலாம்.!!
1982 ஆம் ஆண்டு எங்களால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு இவரும், இவர் துணைவியார் தெய்வத்திரு.டாக்டர்.தாரா அம்மையாரும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.
இவரது ஆதரவும்,சீரிய ஆலோசனைகளும் இன்றளவும் தொடர்ந்து வருவது நாங்கள் பெற்ற பேறு,
எங்களது மிகச்சிறந்த குடும்ப நண்பராகவும், பி எம் மருத்துவமனை தந்த மன உருக்கம் ! விளங்கி வரும் இப்பெருமகனாராகிய
ஔவை நடராசன் அவர்களுக்கு எங்கள் மருத்துவமனையின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிச் சிறப்பித்து நாங்கள் தனிப் பெருமை கொள்கிறோம்.
Dr V.தியாகராஜன்
(B M HOSPITAL DIRECTOR)
Dr வசுந்தரா தியாகராஜன்
( B M HOSPITAL DIRECTOR )

Add a Comment