POST: 2022-04-10T12:41:08+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 104

ஆன்றோர் போற்றும் ஔவை

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மழலையர் மருத்துவ மாமணி எங்கள் அம்மா;

மலைப்பூட்டும் தமிழ் மாமலை எங்கள் அப்பா.

பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே பேரன்பு செலுத்தியவர் எங்கள் அம்மா.

அண்ணா நகரில் எங்கள் வீடு தாயின் பெயர் கொண்ட தண்ணிலவு பொலியும் ‘தாரகை’ இல்லமாகும்.

அப்பா அடிக்கடி சொல்வது, ‘தாராவின் கையால்தான் தடைபடா வளர்ச்சியில் எங்கள் குடும்பம் தழைத்தது’ என்று.

நொடிக்கொரு முறை எங்களைத் தன் மருத்துவப் பணியிலிருந்தபடி அடிக்கடி காத்த உருக்கம் எங்கள் தாயின் கருணையின் பெருக்காகும்.

எங்கள் வீட்டில் எந்த நிலையிலும் எங்கள் அம்மா ஆட்சிதான் அருமையான அரசாட்சியாகும்.

அம்மா அன்பைப் பொழியும் அறிவுப் பல்கலைக்கழகமாவார்.

நான் பிறப்பதற்கு முன்பே, அம்மா மிக நேர்த்தியாக எந்தையார் கல்லூரிக் காலத்தில் வென்ற பேச்சுப் போட்டிகளின் சான்றிதழ்களையும்
பெரும் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான, பேரறிஞர் மு.வ., பேராசிரியர் இலக்குவனார், வள்ளல் கருமுத்துத் தியாகராசச் செட்டியார் போன்றோரிடம் பெற்ற பாராட்டுக் கடிதங்களையும் கோப்பில் திரட்டி வைத்திருந்தார்.

அவற்றை படிக்கும் பொழுது மலைப்பாகவுள்ளது.

தமிழ்ப்பயிலும் இளைய தலைமுறையினருக்கு இக்கடிதக் கருவூலங்கள் பொன்னேடுகளாகும்.

சென்னை பச்சையப்பா கல்லூரி, தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. வ. தன் கைப்பட வரைந்த (12.07.1957) வாழ்த்து மடல்:-

“Thiru D. Natarajan is a student of this college in the final B.A. (Hons.) Tamil Class.

He is one of the earnest and enthusiastic students of the honours class and I have always found him very much interested in his studies.

I am glad to state that he is a refined speaker in Tamil and that will make himself very useful to the academic world through his critical faculty.

He bears an excellent character and conduct and deserves all encouragement”

மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ம. இராசமாணிக்கனார் வரைந்த (01.05.1958) பாராட்டு மடல்:-

“This is to certify that Thiru Avvai D. Natarajan, who was my student in the intermediate class is known to me for a period of five years.

His talents in oratory and essay writing need special mention.

His outlook is artistic and posses histrionic talents.

He is sincere and loyal in all his undertakings and his aptitude in literary and cultural matters is apt to catch the hearts of the people around him.

He bears winsome manners and his character and conduct are exemplary. I wish him success in all walks of life.”

‘தமிழ் நாடு’ இதழின் பதிப்பாசிரியர் கருமுத்து தியாகராசர் தீட்டிய (01.06.1959) பாராட்டுக் கடிதம்:-

“This is to certify that Sri D. Natarajan, S/o Prof. Avvai S. Doraisamy Pillai, has served as Sub-Editor in our Tamil Nadu Tamil Daily for a period of 6 months.

During the period, he had contributed number of interesting essays.

He had to leave the service in order to prosecute his further studies in Tamil Literature Honours.

His behaviour and conduct were excellent.

He is a hard-working young man and I wish him all success in his career.”

தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் சேஷாச்சலம் (30.01.1960) வரைந்த பாராட்டுக் கடிதம்:-

“I know intimately Shri D. Natarajan, of the Tamil Department for the past two years.

He hails from a respectable family.

He is a perfect gentle man and he is always courteous to his juniors and obliging to his colleagues.

He is a young man having a robust constitution.

He has a peculiar winsomeness of manners.

He can be entrusted with any kind of work requiring indefatigable assiduity, unremitting labour, breath of outlook and honesty of purpose.

I wish him godspeed in his endeavours.”

தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி விரிவுரையாளர் திரு. வி. கோபால ஐயங்கார் வரைந்த (30.01.1960) வாழ்த்து மடல்:-

“Shri D. Natarajan has been my colleague on the staff of the Raja Serfoji College, Tanjore for about 2 years.

His impressive eloquence, his scholarly outlook and his zest for learning are bound to earn for him the appreciation of all those who know him.

He has a sweetness of temper and suavity of manners which have endeared him to his colleagues.

I have no doubt that he will acquit himself creditably in any responsible post in which intelligence and integrity are alike required.”

தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. ஜி. வெங்கடாசலம் தீட்டிய (30.01.1960) பாராட்டுக் கடிதம்:-

“Sri D. Natarajan, B.A. (Hons) was here as my colleague for about two years.

He is an intelligent young man of deep and intensive learning, of sweet temper and of pleasing manners.

He is an expert in the art of exposition he is endowed with a powerful voice – a rare gift.

I wish him success and prosperity”

தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி முதல்வர் திரு. டி. முருகையன் வரைந்த (01.02.1960) வாழ்த்து மடல்

“Sri D. Natarajan, B.A. (Hons) is known to me for the last two years when he was a tutor in Tamil in this college.

Natarajan, coming of a reputed Tamil scholars is himself quite at home in the language.

A smart young man of very amiable temper and pleasant manners, no wonder he endeared himself to all his colleagues and students alike and he was a popular teacher and a finished speaker.

He is bound to make a success in any walk of life which requires contacts and dealings with respectable people.

He bears an exemplary conduct and character, I wish him all success.”

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (28)

பதிற்றுப்பத்து மூலமும் உரையும் 1950

– உரைவேந்தர் ஔவை சு. துசைமிப்பிள்ளை அவர்கள்
இந்நூலை சைவ சித்தாந்ததம் பதிப்புக் கழகம் வெளியிட்டது.

இந்நூலாய்வுக்கு இரண்டு படியங்கள் உதவின; அவை பற்றிய பிற விவரம் தெரியவில்லை.

அவற்றை உ.வே.சா. பதிப்புடன் ஒப்பிட்டு ஆய்ந்தபோது சில பாட வேறுபாடுகள் காணப்பட்டன.

சில பாடல்களில் தோன்றிய ஐயங்களுக்கு விளக்கங்களும் கிடைத்தன.

பேராசிரியர்கள் க. வெள்ளைவாரணர் உரைநலமும், தி.வை. சதாசிவப்பண்டாரத்தார் பதிகங்கள் ஆய்வுரையும், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆங்கிலத்தில் அணிந்துரையும் எழுதியுள்ளார்கள்.

பழைய உரை ஒன்று பதிற்றுப்பத்துக்கு உண்டு.

அது பதவுரைபோல் விரிவாகவோ பொழிப்புரைபோல் சுருக்கமாகவோ இல்லை.

தேவைப்படும் இடங்களில் சில இன்றியமையாத குறிப்புரைகளையும் சிறு விளக்கங்களையும் கொண்டுள்ளது.

இவ்வுரை இல்லையாயின், இந்நூற்பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளல் மிக அரிது” (உ.வே.சா.)

உரை தேவைப்படுதல்
“புறநானூற்று உரையைப்போன்று பதவுரையாக அமையாமையின், தமிழ் மாணாக்கர்களுக்கு இந்தப் (பழைய) உரை மாத்திரம் போதியதன்று.

சரித்திரச் செய்திகள் நிரம்பிய பதிகங்களுக்கு விளக்கமான உரை எழுதாமையால் அச்செய்திகளைத் தெளிவாக உணரும் வாய்ப்பு இவருக்குக் கிட்டிலதென்று தோன்றுகின்றது.”
(உ.வே.சா. முகவுரை, ப.vii)

“பதிற்றுப்பத்தின் மூலத்தைக்கருத்தூன்றி யுணர்தற்கு வேண்டும்

நூற்பயிற்சியுடையவர்களே பழையயுரையின் நுட்பத்தினை யுணர்ந்துரைக்கும் திட்பமுடையோராவர்.

இப்பழையவுரையின் துணைகொண்டு பதிற்றுப்பத்தினைப் படித்துணரும் வன்மையில்லாதார் இந்நூற்பொருளை யாராயத் தொடங்கித் தம் மனம் போனவாறு எழுதிய பிழையுரைகள் பலவாம்.

இத்தகைய பிழைபாடுகளுக்கெல்லாம் காரணம், சங்க இலக்கியங்களின் பொருள்நலங்களை இக்காலத்தில் சாதாரண நூற்பயிற்சியுடையாரும் தெளிந்து கொள்ளும் முறையில் அமைந்த விரிவுரையில்லாத குறையேயாகும்.”

(க.வெள்ளைவாரணர்)

மேற்சுட்டிய குறைபாடு / பிழைபாடு முதலிவற்றைக் களைந்து உரியவாறு பொருளுணர்தற்கு ஔவையவர்களின் உரை பெரிதும் உதவுகிறது.

ஒளவையின் உரை வரலாறு

“சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வுக்குச் செல்வோர் சிலருக்குப் பதிற்றுப்பத்தினைக் கற்பிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டாயிற்று.

அக்காலத்தே அவருக்கு இதனைக் கற்பித்து வருகையில், இதற்கு ஒரு விரிவுரை யிருப்பின் நலமாகும் எனும் எண்ணம் உண்டாக, என் நண்பர் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்தின் ஏடுகள் இரண்டு பெற்றுப் படியையும் அவற்றையும் ஒப்பு நோக்குவது முதற்கண் செயற்பாலதென உணர்ந்து செய்ததில், சில பாட வேறுபாடுகளும் சில பாடல்களில் காணப்பட்ட ஐயங்கட்குத் தெளிவும் கிடைத்தன.

பாட்டும் உரையும் கொண்ட ஏடொன்றில், ஒன்பதாம் பத்தின் இறுதியில், “பதிற்றுப்பத்து மூலமும் உரையும் முடிந்தது; சுபமஸ்து” என்று காணப்படுகிறது.

பின்னர் இவ்வுரைப் பணியை மேற்கொண்டு செய்துவருங்கால், திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியரும் என் வணக்கத்திற்குரிய ஆசிரியருமாகிய கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தாம் எழுதி வைத்திருந்த உரையையும் தந்து உதவினார்கள்.

யான் எழுதி வைத்திருந்த உரையை நாவலர் திரு நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பார்வையிட்டு இப்போது வெளியாகியிருக்கும் இந்த முறையைக்காட்டி இவ்வகையில் இவ்வுரையை அமைக்குமாறு தெரிவித்தார்கள்.

இதன் பதிகங்கள் ஆராய்ச்சிக்கு இடமாக வுள்ளனவாதலால் அவற்றிற்கு உரை வேண்டாவெனப் பணித்தமையின் இந்நூற்கண் பதிகங்கட்டு உரை எழுதப்படவில்லை.

மேலும் இதன் முதற்பத்து கிடைக்காமையின், இதற்கு முன்னணியில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று இருந்திருக்கு மென்றும் “எரியெள்ளு வன்ன நிறத்தன்” எனத் தொடங்குவதும் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் உரைகாரராற் காட்டப் படுவதுமாகிய பாட்டை இப்பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரை எழுதுமாறு அவர்கள் உரைத்தார்கள்.

உரைமுழுதும் அச்சாகி வெளிவரும் இந்நாளில் அவர்கள் இல்லாமை என் மனத்தை வருத்துகிறது.”

(ஒளவை, முன்னுரை.பக்.10-11)

“கற்றோருக்கும் உணர்வதற்கு அரிதாய்க் குறிப்புக்களோடு இருந்த பதிற்றுப்பத்து விளக்க உரை இல்லாமை ஒரு குறையாக இருந்தது.

ஆர்வங்கொண்ட புலவர்களுக்கும் மாணவர்களுக்கும் அந்நிலை பெரிய இடர்பாடு உழந்தது.

அதனால் அதற்கு ஒரு விளக்க உரையும் அதன்கண் காணப்படும் சேரமன்னர் வரலாறும் வேறுவேறாக எழுதித் தமிழன்னைக்கு என்னாலியன்ற பணியினைச் செய்தேன்.”

(ஒளவை)

சில திருத்தங்கள்

6 ஆம்பத்து: 1. வடுவடு நுண்ணுயிர் – உ.வே.சாவின் “நாடுடன் கமழ” (18) என்பது, ஒளவையில் “நாகுடன் கமழ” என்றானது.

&ஆம்பத்து: 5.தீஞ்சேற்றி யாணர் – இதில் “அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்து” (9) என்பது, “மருபுல வினைஞர் புலவிகல் படுத்து” எனத் திருத்தம் பெற்றது.

பழைய – புதிய உரை, ஓர் ஒப்பீடு.
(எ-டு)
1. புண்ணுமிழ் குருதி (2ஆம் பத்து),
“வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு” (1-6)

பழைய உரை

அடி: 1. பிசிருடைய வென்றது பிசிராக உடைய என்றவாறு;
2. கமஞ்சூல் – நிறைந்த நீர், சூல் போறலாற் சூலெனப்பட்டது;

5. சூருடை முழுமுதலென்றது சூரவன்மாத் தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென்றவாறு;
பழையவுரை மேற்கூறிய பாடலில், ஒருசிலவற்றுக்கு மட்டும் சொற்பொருள், இலக்கணக்குறிப்பு, முடிபுகளைக் காட்டுகிறது.

இதே பாடலுக்கு
ஒளவை உரை :

“வரை மருள் புணரி – மலை போல் எழும் அலைகள்; வான் பிசிர் உடைய – சிறு துளிகளாக வுடையுமாறு; வளி பாய்ந்து அட்ட – காற்றுப் போந்து அலைக்கப்பட்ட; துளங்கு இரும் கமம் சூல் – ஓலிட்டலையும் நிறைந்த நீரும்; நளி இரும் பரப்பின் – மிக்க பெரிய இடப்பரப்புமுடைய; மாக்கடல் முன்னி – கரிய கடற்குள் சென்று; அணங்குடை அவுணர் – பிறரை வருத்துதலை இயல்பாக வுடைய அவுணர்கள்; ஏமம் புணர்க்கும்- அரணாக நின்று பாதுகாவலைச் செய்யும்; சூரு முழுமுதல் தடிந்த – சூரவன்மாவினுடைய மாமரத்தினை வேருடன் வெட்டிக் குறைத்த; பேரிசை கடுஞ்சின விறல் வேள் – மிக்க புகழும் கடிய சினமும் விறலுமுடைய செவ்வேள்; களிறு ஊர்ந்தாங்கு பிணிமுகமென்னும் யானையிவர்ந்து சிறப்பயர்ந்தது போல என்றவாறு.”
“பிசிருடைய – பிசிர் உடைய வென்றவா” றென்பர் பழையவுரைகாரர்.”

ஒளவை உரை மேல் எடுத்துக்காட்டிய 6 அடிகளில் உள்ள 33 சொற்கள் அனைத்திற்கும் பொருள் தருகிறது; ஆனால் பழையவுரையில் 6 சொற்களுக்கே பொருளுண்டு.”

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *