POST: 2022-05-05T08:41:40+05:30

செய்திப்பரல்கள்

1.தினசெய்தி பக்கம் எண் : 8

சென்னை மே1

தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநர் ஒளவை ந அருள் 27-4-2022 அன்று , தமிழ்நாடு முதலமைச்சரின் அரசால் தமிழ்வளர்ச்சித் துறையின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியமும் – சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியமும் , பேராசிரியர் வ ஜெயதேவன் வழிகாட்டுதலில் அன்றாட வழக்கில்
அயற்மொழிச்சொற்கள் என்ற தலைப்பில் – இளநிலை ஆய்வியல் பட்டம் பெற்று – புதுதில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக்கவிஞர் சேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார் .

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நேர்முக நியமனமாக
27 – 10 – 2009 ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் .

2010 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் – தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகச் செவ்வனே பணியாற்றினார்.

தமிழ் – ஆங்கிலம் , இரண்டிலும் வல்லமையும் – கணினி மற்றும் ஆய்வுத்திறமையும் பெற்ற முனைவர் ந அருள் பன்னிரெண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றித் தமிழ் வளர்ச்சித்துறைக்குப் புதிய இயக்குநராகவும் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராகவும் தொடர்ந்து மொழிபெயர்ப்புத்துறையின் பொறுப்பு இயக்குநராகவும் நியமனம் செய்யப் பெற்றுள்ளது தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும்.

2.மக்கள் குரல் பக்கம் எண் : 11

தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநர் ஒளவை ந அருள் 27-4-2022 அன்று , தமிழ்நாடு முதலமைச்சரின் அரசால் தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியமும் – சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியமும் , பேராசிரியர் வ ஜெயதேவன் வழிகாட்டுதலில் அன்றாட வழக்கில்
அயற்மொழிச்சொற்கள் என்ற தலைப்பில் – இளநிலை ஆய்வியல் பட்டம் பெற்று – புதுதில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக்கவிஞர் சேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார் .

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நேர்முக நியமனமாக 27 – 10 – 2009 ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் .

2010 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் – தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகச் செவ்வனே பணியாற்றினார்.

தமிழ் – ஆங்கிலம் , இரண்டிலும் வல்லமையும் – கணினி மற்றும் ஆய்வுத்திறமையும் பெற்ற முனைவர் ந அருள் பன்னிரெண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றித் தமிழ் வளர்ச்சித்துறைக்குப் புதிய இயக்குநராகவும் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராகவும் தொடர்ந்து மொழிபெயர்ப்புத்துறையின் பொறுப்பு இயக் குநராகவும் நியமனம் செய்யப் பெற்றுள்ளது தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும்.

3.முரசொலி பக்கம் எண் : 2

தமிழ்நாடு அரசின்மொழிபெயர்ப் புத்துறையின் இயக்குநர் ஒளவை ந அருள் 27-4-2022 அன்று , தமிழ்நாடு முதலமைச்சரின் அரசால் தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியமும் – சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியமும் , பேராசிரியர் வ ஜெயதேவன் வழிகாட்டுதலில் அன்றாட வழக்கில்
அயற்மொழிச்சொற்கள் என்ற தலைப்பில் – இளநிலை ஆய்வியல் பட்டம் பெற்று – புதுதில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக்கவிஞர் சேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார் .

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நேர்முக நியமனமாக 27 – 10 – 2009 ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் .

2010 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் – தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகச் செவ்வனே பணியாற்றினார்.

தமிழ் – ஆங்கிலம் , இரண்டிலும் வல்லமையும் – கணினி மற்றும் ஆய்வுத்திறமையும் பெற்ற முனைவர் ந அருள் பன்னிரெண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றித் தமிழ் வளர்ச்சித்துறைக்குப் புதிய இயக்குநராகவும் – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராகவும் தொடர்ந்து மொழிபெயர்ப்புத்துறையின் பொறுப்பு இயக்குநராகவும் நியமனம் செய்யப் பெற்றுள்ளார் .

4.தினத்தந்தி பக்கம் எண் : 7

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக அருள் பொறுப்பேற்பு

சென்னை , மே.1

கடந்த 2009 – ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டவர் ந.அருள். இவர் தஞ்சை தமிழ்
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனின் மகன் ஆவார்.

அருள் தற்போது தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான அறிவிப்பினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனராக அருள் பொறுப்பேற்றார்.

5.தினமலர் பக்கம் எண் : 4

தமிழ் வளர்ச்சி இயக்குனராக அருள் நியமனம்

சென்னை , மே 1

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக பொறுப்பு வகித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரவணன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மொழிபெயர்ப்பு இயக்குனராக உள்ள அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மொழிபெயர்ப்பு பிரிவு இயக்குனர்
ஆகிய பதவிகளுக்கும், முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

6.இந்து தமிழ் திசை பக்கம் எண் : 2

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக அவ்வை ந.அருள் பொறுப்பேற்பு

சென்னை

தமிழ் வளர்ச்சித்துறை புதிய இயக்குநராக அவ்வை ந.அருள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் மகனான இவர், இதுவரை தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போது தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ந.அருள், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராகவும், மொழி பெயர்ப்புத் துறை பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றுவார் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது.

7.தினமணி பக்கம் எண் : 5

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக ந.அருள் நியமனம்

சென்னை , ஏப். 30 :

தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன் பிறப்பித்துள்ள ஆணை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் மொழிபெயர்ப்பு இயக்குநராகப் பணியாற்றி வரும் ந.அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்கு ந.அருள் பணியிடத்துக்கும், மொழிபெயர்ப்பு இயக்குநர் பணியிடத்துக்கும் முழுக் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்தும் ஆணையிடப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ந.அருள் மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் மகன் ஆவார்.

புதுதில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2009 – ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2010 – இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட் டில் தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பொறுப்பை இதற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி செ.சரவணன் வகித்து வந்தார்.

8.தினமணி – கலாரசிகன் பகுதி – பக்கம் எண் : 6

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அவர் பதவி ஏற்றுக்கொண்ட உடனேயே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் சிறந்த நூல்களுக்கான விருதுகள், பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அமைச்சராக தங்கம் தென்னரசும் , இயக்குநராக ந. அருளும் இணையும் போது, தமிழ் புதிய பரிமாணத்தை நோக்கி விரையும் என்று எதிர்பார்க்கலாம்.

2017 ,2016 – ஆம் ஆண்டுகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களுக்கான ஆசிரியர், அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் என 14 பேருக்கு பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விருது பெற்றவர்களில் நண்பர்கள் ஜனனி ரமேஷம், கவிஞர் ராசி அழகப்பனும் இடம்பெற்றிருத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

2017 – ஆம் ஆண்டுக்கான விருதுகள், ஐந்து ஆண்டு காலதாமதமாக 2022 – இல் வழங்கப்படுவது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்த ஆதங்கத்தைப் போக்கும் விதத்தில் வரும் ஆண்டுகளில் சிறந்த நூல்களுக்கான விருதுகள் அந்தந்த ஆண்டிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொள்ளும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார் .

அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டதுபோல, தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 33
தலைப்புகளில் பல தலைப்புகளுக்கான சிறந்த நூல்கள் வெளிவரவில்லை . வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது காரணமா, இல்லை அந்தத் தலைப்புகளில் புது நூல்கள் படைக்க எழுத்தாளர்கள் முன்வராதது காரணமா என்கிற கேள்வி எழுகிறது.

அந்தக் குறையை அமைச்சர் தங்கம் தென்னரசின் கீழ் இயங்கும் ந. அருளின் தலைமையிலான தமிழ் வளர்ச்சித்துறை களையும் என்று நம்பலாம்.

2019, 2020, 2021 – ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை விரைந்து வழங்க வேண்டும். கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் மிக அதிக அளவில் படைப்புகள் உருவாகி, உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் விடிவுகாலம் வர வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *