அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 112
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் பொன்விழா எழிலேட்டுப் பரல்கள்
முனைவர் ஔவை அருள்,
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலை சபை அழைப்பிதழில் தங்களின் பேரவாவினைத் தமிழ் மொழியில் சொல்லிக் காட்டியது மட்டுமல்லாது, எந்தையார் கற்றறிந்த ஆங்கில மொழி வாயிலாகவும் எழுதிக் காட்டிய குறிப்பு பின்வருமாறு:-
“All Expenses including full travelling costs and board and lodging will be met by the MereBank Tamil School Society.
As for as we are concerned, we will have no problem to obtain a visa from our government for you to visit South Africa.
Please let us know what your feelings and thoughts are in this matter.
The various procedures that we will have to follow and complete in making the full arrangements will involve time and the sooner we start these procedures, the better, so that all arrangements may be finalized well before October 1986.
Therefore, sir your considered reply is most urgent and will be appreciated.
Our Respects are kind regards,
Yours very sincerely,
Sd/-
(S.T. Moodley)
Hon. Secretary.
P.S.: May we ask you a very kind favour please.
We are desperately in need to study the syllabi for B.A., and M.A., Degree courses of the Madras University.
We will be extremely grateful if it is possible for you to very kindly send us copies most urgently.
Further please be so kind enough to request the Saiva Sithantha Sangam Publishers in Madras to forward their latest up-to-date complete catalogue/s of books prescribed for The Madras Universitys’ B.A. and M.A. Courses.
Much Obliged.”
1936-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தங்கள் சங்கத்தினைப் பற்றி வனப்பான எழிலேட்டை வெளியிட்டிருந்தார்கள்.
அவ்வெழிலேட்டின் தொடக்கத்தில் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கது.
“கனவு, தோற்றம், தாழ்ந்த ஆரம்பம் (A Dream, A Vision, A Humble Beginning)”
“A “thought-seed” sown in the fertile soil of a rich and creative mind has great potency.
The purity, sincerity, love and good intentions of that mind act as nutrients to help that “thought-seed” to germinate, grow and flourish.
With love and consistent care that plant will grow in stature.
From this mature plant will bloom beautiful flowers to herald the expectant fruit.
And fruit, as we all know is for the enjoyment of everyone.
The above analogy serves to illustrate the story of the origin and development of the Merebank Tamil School Society.
Its humble beginnings germinated in the loving hearts of a band of community-conscious and dedicated individuals who are the pioneers of this organisation which has seen 50 years of hard work, perseverance and determination resulting in 50 years of real progress.
Trials and tribulations there were naturally. But the march forward towards their goal was never abandoned because of hurdles.
Hurdles were slowly but surely surmounted.
There was a remarkable cohesive spirit and a deep sense of loyalty and unity among these early stalwarts.
Many of these marvellous pioneers have, sadly, passed on to the beyond.
A few are fortunately, still with us.
They have served and are serving with not the least bit of diminishing ardour or dedication.
This is indeed a unique band of men.
The present grand edifice, the MTSS Hall and all its facilities stand as a glowing reflection of the spirit and devotion of all those great personalities who created, nurtured diligently and brought to fruition this esteemed organisation.
But the birth, the teething phase and the process of growing up in themselves make an interesting segment in the whole historic saga of the MTSS.
With a tremendous measure of love, loyalty, trust, faith and mutual respect, these early adventurers started out with hope and vision, on behalf of their community.
A man’s true worth is measured in terms of the contribution and service he gives to his community.
Leadership of a high calibre based on truth and honesty, supported by loyally, unity and devotion among members provided the energy, strength and thrust to achieve their objectives.
Totally unselfish motives and sheer dedication to their ideals governed their efforts
All of them who were able to realise the true value of the cause to their people, responded when the call for financial assistance was made.
They all pledged their contributions with altruistic motives, unconcerned about any unforeseen or adverse consequences.
The initial finance required to build was raised from this band of benefactors on a three-year interest free loan basis.
Happily and thanks to Providential grace, all loans have been repaid with extreme gratitude to those noble individuals
And now the Society is in a position to launch out on a new phase of cultural and educational development for the community at large augurs.
There is no doubt that this possibility for our people at a most crucial time of our lives.
It is hoped with faith that the younger generation of all these noble pioneers and stalwarts who wrote the 50 year history of this great organisation, will loyally and faithfully hold aloft and carry forward into the future, the high ideals and objectives on which this Society was founded.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (36)
கொல்லிப் பாவை – ஔவையும் நாராயணசாமி ஐயரும்
இன்று தருமபுரி என வழங்கும் பண்டைய தகடூரைத் தலைநகராகக் கொண்டு விளங்கிற்று.
மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் கரும்பு பயிர்செய்தலை முதற்கண் ஏற்படுத்தியவர் இந்த அதியமான்களே.
ஒளவையார்க்குப் பெறற்கரிய கருநெல்லிக்கனி யீந்தகொல்லிமலை முதல்கள் பொறையனக்குரியதாய் புலவரால் பாடப்பெற்ற தெனக் கோடல் வேண்டும்.
இதன் கீழ்ப்பகுதி வல்வில் ஓரி என்பானுக்கும், தென்பகுதி 185 “நிலைமாண் பாவை”- பொருள்கோள் இதனைக் காணாமையால் அரசியற் கல்வெட்டுத் துறையினர் அதியர் சேர்ந்தவ ரல்லர் எனக் கூறினர்.
அதியமான்களின் ஆட்சி சேலம் மாவட்டம் முழுவதும் பரந்து மழவர்க்கும் உரியன.
கொல்லிமலை நாற்றிசையிலும் சுவர் வைத்ததுபோல் மலைமுகடு கொண்டிருப்பது பற்றிப் பிற்காலத்தார் சதுரகிரி என வழங்குவாராயினர்.
அதன்கண் உள்ள அறப்பள்ளியீச்சுரர் கோயில் சிறப்புப் பெற்றது.
இதன் மேல்பகுதியிலுள்ள கொல்லியம்மன் கோயிலிற் காணப்படும் தேவியுருவைக் கொல்லிப்பாவையெனக் கருதுபவரும் உண்டு.
கொல்லிப்பாவை பூதத்தால் புதுவது புணர்த்த பெண்வடிவம் என்றும், இதன் நிலைபேறுடையைமைக் கொல்லிக் குடவரையகத்துக் “கால் பொருது இடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன்று எறியினும், ஊறு பலதோன்றினும், பெருநிலங் கிளறினும் திருநல வுருவின், மாயாவியற்கைப் பாவை” என்றும் இவ்வாசிரியரே கூறுதல் காண்க.
அதனால் பாவையை ஈண்டு நிலைமாண்பாவை யென்றார் என அறிக.
தமிழகத்திலுள்ள செல்வாக்குடைய கோயில்களுக்கும் மூதூர்களுக்கும் வடமொழிவாணர் புராணம் புனைந்து புணர்த்தபோது கொல்லிப்பாவைக்கும் புராணம் புனைந்துள்ளனர்.
கொல்லிமலையிலுள்ள ‘தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும், அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும்படி தேவதச்சன் ஆக்கிவைத்த பெண் வடிவம் அவுணரும் அரக்கரும் போதருகாலை அவர் வாடை பட்டவுடன் நகைசெய்யுமாறு பொறி உள்வைக்கப்பட்டது;
அது நகைத்துக் கொல்லும் என்பதனைத் “திரிபுரத்தச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்கக் கற்றதெல்லாம் இந்த நகை கண்டேயோ என்றதனாலுமறிக” எனப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் கூறுவர்.
உரிமையுரை
இதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் திருமதி இராதா தியாகராசன் அம்மையார் அவர்கள் எங்கள் கல்லூரி நிறுவிய அருந்தமிழ்ப் பெரும்புலமைக் கலைத்தந்தை கருமுத்து தியாகராசன் செட்டியார் அவர்களின் அருமந்த வாழ்க்கைத் துணைவியாவர்
ஆங்கிலம், கேரளம், தீந்தமிழ் ஆகிய மும்மை மொழியிலும் செவ்விய புலமைசான்ற செம்புலத் திருமகள்.
அவர் என்னுடைய தமிழ் மாணவர் என்றாலும், அவர்களை என் உள்ளம் என்னைப் பெற்ற தாயினும் பெருமைமிக்க அன்னையாகவே கருதிப் போற்றுகிறது.
பசித்த போதெல்லாம் குறிப்பறித்து உண்டி கொடுத்தும், உடை பல நல்கியும், என் உள்ளமும் உடலும் ஓய்ந்து அயராவாறு உறு பொருள் நல்கியும் பேணிப்புரக்கும் பெருந்தகைப் பெருமகள்;
ஏழையெளியவர்க்குந் தாழ்விலாது அளித்து அவரது இன்முகம் காணும் செம்மனச் செல்வி;
இன்ப அன்புருவாய் அறம் புரிந்தொழுகும் திருமதி இராதா அம்மையார்க்கும், அவரது அருமைப் பெருங்கணவரான பெருங் கலைத்தந்தை உயர்திரு கருமுத்து தியாகராசனார்க்கும் இவ்வுரை நூலை உரிமை செய்கின்றேன்.”
ஔவையின் சங்க இலக்கிய உரைகள்
சங்கப்புலவர்கள் தொகை 473; அவர்கள் பாடிய பாடல்களின் தொகை 2381.
எட்டுத் தொகையில் நான்கு நூல்கள்; ஐங்குறுநூறு 500;
புறநானூறு, இரண்டு போக எஞ்சிய 398-இல் 266-க்கு உரைவிளக்கம்;
132-க்குப் புத்துரை;
பதிற்றுப்பத்து, கிடைக்காத இரு பத்தும் நீங்க, எஞ்சியிருக்கும் 8 பத்து – 80க்கள்;
நற்றிணை 400 + கடவுள் வாழ்த்து 1; ஆக 1,390 பாக்களுக்கு உரை, உரை விளக்கம், புத்துரை வரைந்து, சங்கப் பாடல்களில் செம்பாதிக்கும் மேல் உரைவேந்தர் விளக்கமளித்து ஒளிரச் செய்த பெருமகனார் ஔவை துரைசாமியார் அவர்களே!
‘இவ்வகையில் புலமை வாழ்வில் யான் மேற்கொண்ட குறிக்கோள் விரும்பியவாறு நிறைவுற்று எனது உள்ளம் மகிழ்வு கொள்ள அருள்புரிந்த மதுரை அங்கயற்கண்ணி உடனமர்ந்த ஆலவாயண்ணல் திருவடிகளை வாழ்த்தி வணங்குகிறேன்’.
உரைவேந்தர் ஒளவையவர்கள் புலமை வாழ்க்கையின் குறிக்கோள் நற்றிணை உரையுடன் நிறைவெய்திற்று எனக் கூறினாலும், காற்றிற்கும், கடலலைக்கும் ஏது ஓய்வு?
இதற்குப் பின்னரே உரைவேந்தரின் மணிமகுடத்தில் மாணிக்கக்கல்லாக ஒளிவீசும் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கும் பேருரை வரைந்தார்கள்.
“நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு.”
– பாவேந்தர் பாரதிதாசன்
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment