சிங்கப்பூர் இந்திரா மறைவு !
சிங்கப்பூர் இன்மொழித்திலகம் திருமதி இந்திரா கிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து மனம் கலங்கினேன் .
பள்ளி ஆசிரியராகப் பல்லாண்டுகள் அரும்பணியாற்றியதோடு தமிழ் மாநாடுகளில் ஆர்வத்தோடு பங்காற்றி வந்தார் .
சிங்கப்பூரில் நண்பர் கிருஷ்ணனுடன் இணைந்து இல்லற நல்லறத்தில் தமிழ் வளர்ச்சிப்பணிகளைப் பல நிலைகளில் ஆற்றினார்கள் .
நானும் என் துணைவியாரும் சிங்கப்பூர் சென்றபோதெல்லாம் விமான நிலையத்துக்கு வந்து கிருஷ்ணன் இந்திரா காட்டிய பரிவுக்கு நிகரில்லை .
ஆடல் அரசியாகத் திருமகள் கவிதா வளர்ந்து புகழரசியாக உலக நாடுகள் வலம் வருகிறார்.
தன் மகளின் புகழுக்காகக் கிருஷ்ணனும் இந்திராவும் பல நாடுகள் சென்று பாராட்டுப் பெற்றவர்கள் .
1991 ஆம் ஆண்டில் என் மகன் அருளைத் தன் மகன் போல் நெஞ்சாரப் போற்றியதோடு சிங்கப்பூரில் நண்பர் சாந்தகுமாரையும் ஒரு திங்கள் அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தனர்.
ஏறத்தாழ அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளிலும் இருவரும் கட்டுரைகள் வழங்கியதோடு
உரையுமாற்றினார்கள் .
திருமதி கவிதாவின் சிங்கை இல்லத்தில் நீத்தார் சடங்கு நிகழ்வதை அறிந்து பெருந்துயரடைந்தோம் .
இந்திராவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது
.நண்பர் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் தாரகை கவிதாவுக்கும் எங்கள் ஆறுதல் .
ஆற்றொணாத் துயரத்தோடு
ஒளவை குடும்பம் .

Add a Comment