POST: 2022-06-12T10:18:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 113

தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்ப சரித்திரம்

முனைவர் ஔவை அருள்,

1936-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற “ஆரம்ப சரித்திரம் (The Story of the Beginning)” என்ற பகுதி வருமாறு:-

“Unwavering conviction and unshakeable faith were the two main characteristics among other positive attitudes of the founders who established and developed the Merebank Tamil School Society.

Their tenacity in the face of set-backs and problems in the earlier years and their unrelenting determination to achieve their goal, ultimately led to success.

Those pioneers who cherished only noble and unselfish Ideals deserve great admiration.

About seven years after the organisation was founded, the late S.T. Nadasen Odayar, a lover and patron of Tamil culture and a philanthropist, donated a plot of land in Lake Road.

This was in 1943. The dream to build a Tamil School was realised on this land.

Parents proudly sent their children to their own Tamil School.

The building was quite substantial and reasonably well-appointed.

The need for a constant flow of funds for the running of the school, equipment, maintenance, teachers’ remunerations and other incidental and important expenses had to be met.

Many fund-raising projects were undertaken. Many well-wishers helped.

School pupils also helped in collecting at public functions and festivals.

Education of our children was the constant concern of the founders. Not only Tamil education but secular education as well.

The Merebank State Aided School was situated adjacent to the Tamil School.

When an attempt by the Tamil School Society to conduct a separate Girls’ School failed with the Education authorities, the building was annexed to the State Aided School.

But Tamil classes were conducted in the afternoons and a great deal of progress in Tamil Education was recorded.

As time went by, in the mid sixties a great deal of environmental changes took place in Merebank.

The Southern Freeway was planned to pass through the area, new large State schools were being built for the new housing complex and an all round transformation was being effected to the landscape.

So in 1965 the property of the Merebank Tamil School Society was expropriated by the Natal Provincial Administration.

The Merebank Tamil School Society then negotiated with the Durban Corporation for an alternate site at the corner of Himalaya and Dacca Roads (adjoining the Merebank Shri Parasathie Temple).

This the Society bought for R2 400,00 and was registered in the name of the Society.

The Society was on the verge of commencing building operations when the re-routing of the Southern Freeway affected this property.

Plans had to be abandoned and the property was acquired by the Corporation.

Fresh negotiations had to be initiated with the corporation for another site and the Society finally settled for the site in Burdwan Road after protracted negotiations over about eight years.

Mean while the Tamil School was still conducted in the original building in Lake Road, until it was destroyed by fire in 1967.

The Education Department kindly came to our rescue and accommodated our Tamil classes at the nearby Alipore Road State School.

For this the Society will always be grateful.

On registration of the Burdwan Road property in the name of the Society, building had to start within two years.

The Society was able to comply with this requirement.

On the completion of our present buildings the Tamil classes from Alipore Road State School were transferred here.”

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (37)

பிற உரைகள்

மணிமேகலைக்கு உரை காணுதல்

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் மணிமேகலையில் முதல் 26 காதைகளுக்கு. உரையெழுதி வருகையில், நோய் கடுமையாகி உரை முற்றுப் பெறுவதன் முன்பே இயற்கையெய்தினார்.

அவர் உயிருடனிருக்கும்போதே, யசோதரகாவியத்திற்கு ஒளவை எழுதிய உரையைக் கண்ணுற்றிருந்த நாவலர் தம்மால் எழுதப்படாதுள்ள 4 காதைகளுக்கு ஔவை உரையெழுதி விடுபட்ட நிறைவு செய்ய வேண்டுமென விரும்பினார்.

மணிமேகலை பதிப்புக் குறிப்பு

“சிலப்பதிகாரத்திற்கும் சீவகசிந்தாமணிக்கும் பண்டே சான்றோரால் உரை காணப்பட்டுள்ளன.

அவ்வுரைகளையே கடுநடையும் அரும்பொருள் ஆழமும் உடையவென வுரைப்போர் பலராகிய இந்நாளில் இந்நூலுக்கு உரை இல்லாதிருப்பது பெரும் குறையாகவே இருந்தது.

இதற்கு ஓர் எளிய நடையில் அமைந்த உரை ஒன்று வேண்டியிருந்த நிலை அறிந்த நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அவ்வண்ணமே உரை எழுதத் தொடங்கினார்கள்.

தளைவுறு மூப்பும், தடுப்பரும் நோயும் எய்திய வழியும், சிவபரம்பொருளின் பாலும் தொண்டின்பாலும் தளராத ஊக்கம் படைத்த யவர்கள் இந்நூன் முழுதும் உரையெழுதி முடித்தற்குள் அவரது மெலிந்த உடம்பு அவரது உயிரைத் தாங்கியிருக்க மாட்டாது தளர்ந்து நீங்குவதாயிற்று.

ஆகவே இந்நூலின் இறுதி நான்கு காதைகள் உரையெழுதப்படாது நின்று எம்மை வருத்துவதாயிற்று.

அக்குறையை முடித்தற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சிப் பகுதி ஆசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் முன்வந்து உரையெழுதி யுதவினார்கள்.

இவ்வுரைக்காக அவர்கள் செய்துள்ள முயற்சி, அருமை பெருமைகளை அவர் உரையைக் காண்போர் இனிதறிவர்.”
(காசிவிசுவநாதன், பதிப்புரை)

மணிமேகலை உரை பற்றி ஒளவை

“சிலம்பும் மேகலையும் என்ற காப்பியம் இரண்டனுள் மணிமேகலையின் பிற்பகுதியில் காணப்படும் பௌத்த தத்துவ கூறுகள் விளங்கவில்லை எனக் கைவிடப்பட்டிருந்தது.

அப்போது திருமலை திருப்பதி திருவேங்கடத்தான் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிகையில் வடமொழிப் புலவர்களான திரு. பிரபாகரன் சாத்திரி, பாலிமொழிப் புலவர் திரு. ஐயாசாமி சாத்திரி ஆகிய இருவருடைய துணையும் ஆதரவும் பெற்றுப் பௌத்த நூல்களை ஆராய்ந்து விடுபட்டிருந்த அப்பகுதிக்கு விரிவான ஆராய்ச்சி விளக்கமும் எழுதினேன்.” …..

“நூலின் பிற்பகுதியில் புத்தசமய தத்துவங்களும் வேறு பலசமயங்களில் மாறுபடும் கோட்பாடுகளும் நுட்பங்களும் அடங்கியதாக இருத்தலின் அதற்குப் பொருள் அளவை கண்டுபிடிப்பது எளிதாக இல்லை.

எனவே அதனை முடிக்க யாரும் முன்வரவில்லை.

செயற்கரிய செய்யும் ஒளவையவர்கள் அப்பகுதிக்கு உரையெழுத உறுதி பூண்டு புத்த சமய நூல்களையும் பிற சமய நூல்களையும் முயன்று பெற்று, சமயங்கள் பற்றி வடமொழி, பாலி மொழிவாணர்களின் உதவியுடன் நூல்களை முறையாக ஆராய்ந்து தெளிந்து, உரையெழுதினார்கள்.”

அடிக்குறிப்புக்கள் சிலவற்றைக் காணும் போது, உரையெழுதுவது எவ்வளவு கடினம் என்பது தானே புலப்படும்.

கிருத கோடி வரலாறு இதுகாறும் ஆராய்ச்சிக்கு நன்கு விளங்கவில்லை.; கௌடில்யர் தந்திர உத்திகளில் ஒன்று (414):

‘இதனை’ முதலியோர் திருஷ்டி சுத்தி என இருவகைப்படுத்துவர் சாங்கிய வாதம், சாங்கிய காரிகை -17, வர்த்தகத்திலும் அனுமதி -96 107; நியாயத்திரத்தத்திலும் இரட்சகருடைய தத்துவ சங்கிரகம் ஸ்வீவீ 370-லும் காணப்படுகிறது (531); பிரசாந்த் பாதர்… (ப.247); தர்மகீர்த்தி நியாயப் இந்து 166 -7 2, (ப.236). தீய சாதனமானது பக்கப்போலி, அந்த போலி நியாய பிரவேசம் என்பது. திருஷ்டாந்தம் பாஷா நாம், வசதி சாதனா பாசம் என்பது காண்க …

no destruction, no protection, no discontinuance, no permanence, no continuance, no disappearance,

இக்கருத்தையே நாகார்ஜூனர் எட்டு வகையாகக் கூறுகிறார்ப. (ப.565).

“நாட்டார்ஐ யா அவர்கள் நல்லுரையின்
குறைநிரப்பும் நலம்செ றிந்த
ஆட்டா ன்நீர் ஒருவரெனின் அரிய நின்
புகழ் நலன்யாம் அளப்ப தெங்ஙன்?”
– ந.ரா.முருகவேள்.

நிறைவுரை:

கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் கைவரப்பெற்ற ஒளவையவர்களை இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி, வருங்காலத்தும் நிலைநிறுத்துவன, சங்க இலக்கியங்கள், இராமலிங்க வள்ளலார் திருவருட்பா, மணிமேகலை காப்பியக் காதைகள், யசோதரா காவியம் முதலியவற்றிற்கு அவர்கள் வரைந்த உரைவளங்களே!

‘இணையில்லா உரைவேந்தர்’ என அவர்களை இளஞ்சுட்டி அவர்தம் பரந்துவிரிந்த பன்முக ஆளுமையையும், வீறார்ந்த தனித்தன்மையையும், செம்மாந்த புலமைச் சிறப்பினையும் அவை பறைசாற்றுகின்றன.

ஔவையியம் –

ஔவை ஆய்வு நெறி

உரைவேந்தர் ஔவையவர்களின் ஆய்வு நெறி தனித் தமிழியத்தை அடித்தளமாகக் கொண்டது.

உரை கூறும் திறம்

இலக்கியங்களுக்கு உரை காணும் முயற்சியில் பெரும் புலவர் அவர்கள் தமக்கே உரிய தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு செய்யுளுக்கும் முன்னுரை, உரை, உரை விளக்கம் என்னும் மூன்று பகுதிகள் உள்ளன.

முன்னுரை

முன்னுரைப் பகுதி படிப்பவர் மனத்தில் பாட்டு செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் பாடப்பட்டவர் வரலாறு என்னும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைத்திருக்கிறது.

இந்த முன்னுரைப் பகுதி புறநானூறு, நற்றிணை இரண்டிலும் இடம்பெறுகின்றது;

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து இரண்டிலும் இல்லை.

கண்ணழித்துப்பொருள்கூறுதல்
பழைய உரைகள் பொழிப்புரைகளாகவும், நீண்ட தொடர்களாகவும் அமைந்துள்ளன.

அவற்றை எளிதில் மனம் கொள்வது அரிய முயற்சியாகும்.

எனவே, பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து அவ்வவற்றிக்குரிய பழைய உரைப் பகுதிகளைப் பொருத்திப் பாட்டுப் பொருளை எளிதாக மனம் பற்றுமாறு செய்கிறார்.

இவ்வாறு ஔவையவர்கள் உரை பரிமேலழகர், நச்சினார்க்கினியர் ஆகிய பண்டை உரையாசிரியர்களை நினைவுகூரச் செய்கிறது.

(எ-டு)

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகள் ஆயலன் பிறரும்
சான்றோர் சென்ற தெறியென்
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே” (புறம்134)

பழைய உரை:

“இப்பிறப்பின்கட் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவும் என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; அமைந்தோர் பிறரும் போயவழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை.”

இப்பழைய உரையை ஒளவையவர்கள் பின்வருமாறு கண்ணழித்துப் பொருள் கூறியுள்ளனர்:

“இம்மைச் செய்தது – இப்பிறப்பின்கட் செய்ததொன்று; மறுமைக்காம் – மறுபிறப்பிற் குதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் – என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறம்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் சென்ற நெறி என அமைந்தோர் – போயவழியென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை – அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்ணம்.’

உரை விளக்கம்:
இப்பகுதியில் பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினைமுடிபுகளைச் சுட்டி, பொருளின் திட்பத்தையும் நுட்பத்தையும் உணர்த்துதல், அருஞ்சொற்களுக்குப் பொருளகூறுதல், நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், வரன்ற்றுச் செய்திகளைத் தொடர்புபடுத்தல் முதலிய அரியசெய்திகள் பலவும் அமைந்துள்ளன.

பழைய உரையில் பொருந்தாததை மறுத்தல்
“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் சுவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம்
கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்”
– (பதிற்றுப்பத்து 11, 21-23 )

என்னும் அடிகளில் பழையவுரைகாரர்

“ஆரியரது ஆணையினால் பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிக் கவரிமான் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தம் புல்லைக் கனவில் கண்டு மகிழும்” என்று பொருள் கொண்டார்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *