POST: 2022-06-17T07:15:37+05:30

அமுதசுரபி ஜூன் மாத இதழ் – பக்கம் எண் : 43

சிங்கம் போல் முழங்கிய பாரத சி வீ சேஷாத்ரி

– கலியன் சம்பத்து

டாக்டர். ஔவை நடராசன் இவர் பேச்சை விரும்பிக் கேட்பார்.

சேஷாத்ரி மறைவு குறித்து அவ்வையிடம் செல்பேசியில் சொன்னதும், ஒளவை சொன்னார்

” ஆழ்ந்த புலமையுடன்,
அளவற்ற சமயச் செய்திகளை அருமையாக எழுத்துரையாகவும், பேச்சுரையாகவும் பரப்பி வந்த அறிஞர்.’

என்று கூறிக் கண்கலங்கினார்.

சேஷாத்ரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இவரின் பன்மொழிப்புலமையும், திறமையும் அறிந்த கல்வித் துறையினர், இவரை, இயக்குநர் – ஆரம்பக்கல்வித் திட்டத்தில் ( டிபிஇபி ) பேராசிரியராக நியமித்தனர்.

இப்பணியில், இவர் நற்றமிழைப் புகுத்தினார்.

எடுத்துக்காட்டாக, ‘ சிங்கம் கர்ஜிக்கும் ‘ என்பதை, ‘

சிங்கம் முழங்கும் ‘ என்று மாற்றியதைப் பலரும் பாராட்டினர்.

பழைய இலக்கியப் பாடல்களின் நயங்களையும், ஆழ்பொருள்களையும் ‘ அமுதசுரபி ‘ இதழில் எழுதி வந்த பாரத சி.வீ. சேஷாத்ரி, 87 ஆம் வயதில், கடந்த மே ஏழாம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *