தினமணி
25.6.2022 சனிக்கிழமை
பக்கம் எண் : 4
மாணவர்களுக்குப் பரிசு…
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள்.
தினசெய்தி
25.6.2022 சனிக்கிழமை
பக்கம் எண் : 8
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டி
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந அருள் பரிசுகளை வழங்கினார் .
சென்னை ,
ஜூன். 25
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனர் ந.அருள் பரிசுகளை வழங்கினார் .
தமிழ்நாடு சட்டசபையில், தமிழ் வளர்ச்சித்துறைக்கான 2021 – 2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “ நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் “ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 03.06.2022 அன்று
.
குறளோவியம் படைத்த குரலோவியமே.
சமூக நீதி நாயகர் கலைஞர்.
மாற்றுத் திறனாளிகளின் நலன் காத்த கலைஞர்.
தமிழ் நாட்டை உருமாற்றிய தலைவர் கலைஞர்.
திராவிட இயக்கத் தூண் கலைஞர்.
சட்டமன்ற வரலாற்று நாயகர் கலைஞர்.
கல்லக்குடி முதல் கோட்டை வரை.
இதழியலில் முத்திரை பதித்த இன்றமிழ் அறிஞர் கலைஞர்.
திரைத்துறையில் புதுமை படைத்த கலைஞர்.
பெரியாரியப்
பெருஞ்சாத னையாளர் கலைஞர்.
பல்கலை வல்லார் பைந்தமிழ்க் கலைஞர்.
அன்றும் இன்றும் என்றும் அருந்தமிழ்க் கலைஞர்
ஆகிய 12 தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000 /-
இரண்டாம் பரிசு ரூ.3,000 /-
மூன்றாம் பரிசு ரூ.2000 /-
என்ற வகையில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் பாராட்டுச் சான்றும் பரிசுகளுடன் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றும் பரிசும் வழங்கப்பட்டன

Add a Comment