தினமணி
28.6.22
செவ்வாய்க்கிழமை
பக்கம் எண் : 2
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ஆய்வு நூல்கள் விற்பனை
சென்னை, ஜூன் 27:
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள்
அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நூல் விற்பனை நிலையம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கக வளாகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் நூல் நிலையைத்தைத் தொடக்கி வைத்தார்.
இதில் தொல்லியல் துறை ஆணையர் இரா.சிவானந்தம், தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் எழிலரசு, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தொல்லியல் துறைப் பேராசிரியர் ப.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
இந்த அலுவலகத்தின் தரைத் தளத்தில் நூல் விற்பனை நிலையம் செயல்படும்.
தினசெய்தி
28.6.22 செவ்வாய்க்கிழமை
பக்கம் எண் : 8
தமிழ் வளர்ச்சி வளாகத்தில்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையம்
இயக்குநர் ந அருள் தொடங்கி வைத்தார்
சென்னை ஜூன் 28
சென்னை , தரமணி, உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நூல் விற்பனை நிலையம் எழுமூரில் உள்ள தமிழ்ச் சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி
வளாகத்தின் தரைத் தளத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந. அருள் நூல் நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் தொல்லியல் துறை ஆணையர் ( மு. கூ.பொ. )
முனைவர் இரா. சிவானந்தம்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் கூ.வ. எழிலரசு,
சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தொல்லியல் துறைப் பேராசிரியர் ப.சண்முகம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
5.7.2022
தினமலர் – திருச்சிப் பதிப்பு
பக்கம் எண் : 3
ஆய்வு நூல்கள் விற்பனை
சென்னை, ஜூலை 5
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஆய்வு நுால்கள் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கக வளாகத்தில் ‘ நுால் விற்பனை நிலையம் ‘ தொடங்கப்பட்டுள்ளது.
நுால் விற்பனை நிலையத்தை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள், தொடங்கி வைத்தார்.
இங்கே, ‘
1 கங்கை கொண்டானுக்கு கங்கை நீராட்டு ‘, ‘
2 உலகத் தமிழர் வணிகமும், தொன்மையும் ‘, ‘
3இராமானுச மாமுனிவர் காவியம் ‘, ‘
4 சங்க இலக்கியத்தில் நெய்தல் மகளிர் ‘, ‘
5 தமிழ்ச் சுருக்கெழுத்து நூல் ‘, ‘
6 மீனவர் சமுதாய நாட்டுப்புற பாடல்கள் ஆய்வும், பதிப்பும் ‘
உட்பட பல்வேறு நூல்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆய்வு நூல்கள் பெயர் மற்றும் விலை பட்டியல் அடங்கிய தொகுப்பு, இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள புத்தக ஆர்வலர்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு நுால்களை பெறலாம்.
விற்பனை நிலையம் தொடக்க நிகழ்ச்சியில், தொல்லியத்துறை கமிஷனர் சிவானந்தம்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் எழிலரசு,
சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள் விற்பனை நிலையம் தொடக்க நிகழ்ச்சியில்,
தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், தொல்லியத்துறை கமிஷனர் சிவானந்தத்துக்கு புத்தகம் வழங்கினார்.

Add a Comment