POST: 2022-07-09T11:25:32+05:30

பேரம்பலம் மறைவு !
(25.10.1927 to 5.7.2022 )

பேரறிஞராகத் திகழ்ந்த பெருந்தகை பேரம்பலம் தன் பழுத்த வயதில் அமெரிக்காவில் மறைந்தார் என்ற செய்தி பேரவலாகும்…………..

தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல் அரிய வரலாற்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Budget என்பதை வரவு செலவுத்திட்டம் என்பதை விட பாதீடு என்ற புறப்பொருள் வெண்பாச்சொல்லை நீங்கள் புகுத்தலாகாதா என்று என்னை கேட்டது நினைவில் உள்ளது.

கடந்த திங்களில் கூடத் திருவள்ளுவரும் – கன்பூசியசும் எழுதி வருகிறேன் என்றார் .

அருளின் மீது பேரன்பைப் பொழிந்த பேரம்பலம் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

பேரம்பலம் எழுதிய திருக்குறள்
(The path of purpose)உரை ஒப்பற்றது .

கனடா , இங்கிலாந்து தமிழகம் ஆகிய நாடுகளில் தான் சென்று திருக்குறள் ஆங்கில உரை வெளியிட்டார் .

95 வயதிலும் எழுத அவருக்குப் பரிவு காட்டிய அம்மாவுக்கு இடைவிடாமல் அவர் எழுதிச் சென்ற ஏடுகளை பதிப்பிக்க வேண்டும் .

நேற்றிருந்தார் இன்றில்லை ! இதுதான் வாழ்வு போலும் .

வருத்தத்துடன்
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *