அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 117
‘சைவ சித்தாந்தம் – வேகவைத்த இரும்புக் கடலை’
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலைத் தலைவர் திரு. எம்.ஆர். முதலி அவர்களின் வாழ்த்துச் செய்தி தொடர்ச்சி…
“Finally it is my pleasure to accord special thanks to the present members of the committee who have been pillars of strength, displaying at all times enthusiasm, zeal and dedication in the execution of their duties.
These qualities in them have won my admiration and love.
Their sense of dedication and their sincerity are attributes which are worthy of emulation by others in our community.
With great humility, I offer thanks to the “Paramathma” for the opportunity granted to me to serve the community.
I am thankful for the rich, varied and edifying experience that this has afforded me.
I have derived a deep sense of fulfilment and satisfaction.
Our Hindu philosophy teaches us that “Service to man, is service to God”.
Man is born for a purpose to contribute his mite towards a better world, to work towards amelioration of his fellow beings and in the process to evolve to higher levels and perfection.
It is not only the individual who has to aspire towards perfection, but also the family, the community and the nation.
I am satisfied that to a very large extent, the Society has basically fulfilled some of its goals.
These achievements are mainly due to the co-operation and collective effort of the present members of the Society.
Thus far I am happy to state that we have acquired some expertise in running our institution.
The Merebank Tamil School Society is in a position to share its experience with other organisations so that there may be better understanding and peaceful co-existence among all races of our beloved country.
Surely, all of us want to live and enjoy our short stay on this Mother earth, and therefore, in conclusion, I pray that the day will dawn when all of us, together, shall help to build a strong, united country based on sound judgement and better understanding.
May all of us who live in this lovely country enjoy its fruits and riches, sharing and sharing alike and promoting love, contentment and peace.”
மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலை சபையின் செயலாளர் திரு. எஸ்.டி. முதலி அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“That the MTSS is celebrating its Golden Jubilee gives me great joy and I have pleasure in offering this message.
For the last 50 years the Society has kept the spark of Tamil language and culture alive by dedication and hard work.
Great credit must be accorded to those pioneer members, (some who have passed on) for their unflinching faith in the Society and the belief that success will be realised one day.
For any organisation to achieve its ultimate aims and objects it must have totally dedicated members and strong leadership.
As the Secretary for the last few years I can confidently vouch for the “Captain and the crew” of the MTSS.
For the future I hope and pray that the Society will be the seat from where the Tamil language will be rigorously propagated.
A community without its God-given language and culture is like a ship without its rudder and propeller in rough seas.
The Tamil community is proud of the work being carried out by the Merebank Tamil School Society.
The ultimate aim should be that the Tamil language be spoken in every Tamil household.
My fervent prayer is that the Golden Jubilee will be very successful in all aspects.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (41)
சித்தாந்தக் கடலுள் மூழ்கி முத்துக்குளிக்கும் ஆற்றல் படைத்த ஒளவையவர்களின் அவையடக்கம்:
“சிவஞான போதத்தின் சிறப்பையும் சிற்றுரை மாண்பையும் நோக்குமிடத்து எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது.
எனினும் எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற்கொண்டு அவரது அருள் ஞானத்தை நன்கு பெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரை கருவியாகவும், திருஞானசம்பந்தர் முதலிய சிவஞானப் பெருந்தலைவர்களின் செம்மொழிகள் முதலாகவும் கொண்டு, ஒருவாறு இயன்ற அளவு செய்துள்ளேன்”
தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை 65ஆம் ஆண்டுவிழா
தலைமையுரையில் மேலை அறிஞரின் கருத்துக்களைச் சைவசித்தாந்தக் கருத்தோடு ஒப்பிட்டுச் சித்தாந்தத்தின் சீர்மையை நிலைநாட்டுகின்றனர்:
“வந்தவாறு எங்ஙனே போமாறேதோ மாயமாம் பெருவாழ்வு” என்றார் நாவரசர்.
இதன் முதற் பகுதி குறை கூறுவோர் போல மக்கள் உயிர் உலகிற்கு வந்த வாற்றை விண்மீன் வீழ்ச்சியும் ஞாயிற்றுத் தெறிப்பும் நிலவுலகின் தோற்றமும் விரியக் கூறி இந் நிலவுலகிற்கு மக்களுயிர் வந்தது தற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது என்று சர் சேம்சுசீன்சு உரைத்தார்.
“தற்செயல்’ ‘விளக்கம் இல்லாத சொல்லாதலின் ”வந்தவாறு” காண்டற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறது என்பது தெளிவாகும்.
பின்பு அவர் ஐன்ஸ்டீன் கீசம்பர்க் திராக் இலமேத்தர் லூயி..
தே புரெக்சி முதலாயினார் கண்ட பௌதிக உலகை விளக்கிக் கூறி முடிவில் தத்துவ ஞானம் என்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார்.
பிரபஞ்சம் கட சக்கர எந்திரம் எனச் சுழல்வது (காஞ்சிப்புராணம் காப்பு) முடிவில் இதுவும் படைக்கப்பட்டதே” என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும், இதனைப் படைத்தோன், ஓவியம் வல்லான் ஒருவன் தான் தீட்டும் ஓவியக் கிழிக்கிப் புறம்பே நின்று ஓவியத்தை எழுதுவது போல, காலம் இடம் முதலியன கடந்து நின்றே படைத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்துகிறது” என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார்.
முடிவில் அற்புதப் பிரபஞ்சம் என்ற நூலை எழுதி முடித்தார் சை. சேம்சு சீன்சு”
கடவுள் உண்மையை எப்போது மக்கள் உணர்கிறார்கள்?
தத்துவ ஞானத் துறையில் பெரும் புலமை கொண்டு விளங்கிய பேராசிரியர் பீட்டர்சன் என்பார் “சிவமாகிய செம்பொருள் தனது உண்மையினை உலகியல் வாழ்வில் சில காலங்களில் நமக்கு உணர்த்துகின்றது” என்று கூறுகின்றார்.
“ஒருவன் இடுக்கண்கள் வரும்காலத்துக் கடவுள் உண்மை அவன் உணர்வில் காட்சியளிக்கின்றது;
அவன் தன்னந்தனியனாய் இருக்கும் காலம், ஆழ்கடலின் ஆழமும் மால் வரையின் மாண்பும் வேனிற் காலத்து நள்ளிரவில் விசும்பிடை வழங்கும் விண்மீன் கூட்டத்தைக் காணும் காலம், தன் வாழ்நாள் தனக்குரிய எல்லையை நெருங்கும் காலம் ஆகிய காலங்களில் செம்பொருள் ஆகிய கடவுள் உண்மை அவன் உணர்வில் தோன்றுகின்றது” என்று கூறுகின்றார்.
தூத்துக்குடி இருபத்தைந்தாம் ஆண்டுவிழாவில் சிவஞானபோதம் பற்றி:
சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் சைவசித்தாந்தம் பற்றி ரத்தினச் சுருக்கம்.
தத்துவ ஞானமும் சமயம் ஞானமும் ஒன்றுக்கொன்று படிமுறையில் இருப்பது கண்டே மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்தில் முன் ஆறு சூத்திரங்களால் ‘தத்துவ ஞானமும்’ பின் ஆறு சூத்திரங்களால் ‘சமயம் ஞானமும்’ வழங்கியுள்ளார்…..
நம் தமிழ்நாட்டில் திருமூலர் காலமுதலே இரண்டும் ஒன்றாய்ப் பிரிப்பறப் பிணைந்து வந்திருக்கின்றன.
இடைக்காலத்தில் சமய ஞானமும் பின்னர்த் தத்துவ ஞானமும் சிறப்பு நிலைபெற்றன.
ஞானசம்பந்தர் முதலிய சமயக்குரவர் காலத்தில் சமய ஞானமும், மெய்கண்டார் முதலிய சந்தான குரவர் காலத்தில் தத்துவ ஞானமும் சிறப்புற்று நின்றன என்பது வரலாறு அறிந்த செய்தியாகும்.’
சிவஞானபோதம்- சைவ சித்தாந்தத் தத்துவத்தின் பிழிவு:
“இறைவன், உயிர், உலகிற்கு முதற் காரணமாகிய மாயை என்ற மூன்றும் அனாதி நித்தியப் பொருள்கள் எனவும், இறைவனாகிய சிவன் தன் சத்தி சம்பந்தத்தால் மாயையைக் கலக்கி, உடல், கருவி, உலகுகளாகச் செய்வது ‘படைப்பு’ எனவும், உயிர்கள் அனாதியே மலத்தொடக்கு உடையவை எனவும், மலத்தின் மறைப்பு நீங்குதற் பொருட்டு உடல் கருவிகள் படைக்கப்படுகின்றன எனவும், ‘உயிர்கள் பல’ எனவும், எனவே உயிர்கள் ஒன்றினொன்று வேறுபாடுடையவெனவும், வேறுபாட்டுக்கு ஏற்பப் பிறப்பு வேறுபடுகின்றன எனவும், உயிர்கட்கு அறிவு, விருப்பு, தொழில் என்ற மூன்று ஆற்றல் உண்டெனவும், அவற்றைத் தொழிற்படுத்தி உண்மை ஞானம் எய்துதற் பொருட்டே உலகத் தொடர்பு உயிர்கட்கு உண்டாகிறதெனவும், இங்ஙனம் உயிர்கட்கு உதவும் வகையில் சிவபரம்பொருள் உயிரோடு உடனாய் இருக்கின்றது எனவும் நம் சைவ சித்தாந்தம் கூறுகிறது”
இறையுணர்வு
நூல் முன்னுரையில் இறை உணர்வை புலப்படுத்தும் பாடல் அமையும்.
“அறிவு செயல் வகைகளில் ஒரு பொருளாகாத எளியேனாகிய என்னை இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி, இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து, எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழி மெய்களால் பரவுகின்றேன்.”
(சிவஞானபோதச்சிற்றுரை. குறிப்புரை)
ஞானாமிர்தம்
சைவ சித்தாந்தப் பெருமன்றச் செயலாளர் மா. பாலசுப்பிரமணிய முதலியார் வேண்டுகோளின்படி குன்றக்குடியில் சிவக்கவிமணி சி கே சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ஞானாமிர்தம் என்ற தலைப்பில் உரையாற்றினார் உரைவேந்தர்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த சித்தாந்த சரபம் பழனி ஈசான சிவாசாரியார் ‘இரும்பு கடலையைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்’ என்று பாராட்டினார்.
பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சிவக்கவிமணியார் ஞானாமிர்தத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு கூறினர்.
கடவுள் வழிபாட்டில் தமிழ் இல்லை
“வைதிக நூல்களும் சைவ நூல்கள் செய்துகொண்ட பூசலால் சிவ வழிபாடு சீரழிந்தது.
புறச் சமயங்கள் தோன்றித் தொண்டை நாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே அவரது சமயம் போல அரசியலைக் கைப்பற்றியது ஆரியம் எனப்படும் வடமொழி சமய நிலையங்களிலும் அரசர் உள்ளத்திலும் இடம்பெற்றது. தொண்டை நாட்டில் பல்லவர்களின் அரசியல் மேலோங்கியிருந்த மையம் காஞ்சி, மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் பல கடிகைகள் / கல்லூரிகள் தோன்றின.
இதனால் மக்கள் பேசும் தமிழ் மொழி கடவுள் வழிபாட்டிலும் அரசர் செல்வாக்கிலும் போதிய இடம்பெறாது ஒழிந்தது.
இதன் விளைவாகத் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களிடையே சமய உணர்வும் சமய ஒழுக்கமும் குன்றின. வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு மக்கள் வழங்கும் தமிழ் மொழியைப் பேணாதொழிந்தமையால், வைதிகநெறியும், பௌத்த சமண நெறியும் வேரூன்றாது வறிதே நின்றன.”
(சிவஞானபோதச் சிற்றுரை)
வரலாற்று வல்லுநர்
தமிழ் நாடு, மொழி, இனம்; புலவர், மன்னர், மக்கள் பெயர், ஊர், அமைவிடம், அரசியல், சமுதாயம், மாட்சிகள், வீழ்ச்சிகள், அவற்றிற்கான காரணங்கள், அற்றை இற்றைகள் முதலியவற்றைக் கல்வெட்டுகள், பிற சான்றுகள், ஆதாரங்கள் காட்டி விளக்கும் போது, தாம் ஒரு தமிழாசிரியர் மட்டுமல்லர், வரலாற்று வல்லுநர் என்றும் நிலைநாட்டுகின்றார்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment