மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் 15.7.1932-14.8.2020
தொண்ணூறு தொட மறந்தாய் !
கண்ணேறு படுமென்றே
எங்கள் கண்ணே வாழ்வரசி நீயே !
தொண்ணூறு வயதைத் தொட
மாட்டேன்
என்று தூமொழி நீ உரைத்ததே
உண்மை !
மண்ணூறி நான் இன்னும்
மடியாமல் இருப்பதை எவர் அறிவார் !
பண்னேறு மொழியடியார் பலர்
வணங்க !
பரிமளம் நீ எங்குச் சென்றாய் !
அழுது புலம்பும்
ஒளவை நடராசன்

Add a Comment