அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 119
தமிழிசையும் பண்ணாராய்ச்சியும்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க கவுன்சிலர் திருமதி சிபில் ஹாட்ஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“Congratulations on your Golden Jubilee – a most important milestone in your history.
The work of the Society has played an important part in the cultural development of the community and I am sure you will continue to go from strength to strength in the next fifty years.”
‘நடால் தமிழ் வேதிக் சொசைட்டி’ அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.எஸ். படையாச்சி அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“I have great pleasure in acceding to your request to contribute a message to be included in your brochure on the occasion of your Golden Jubilee Celebrations.
Ours is also one of the oldest Cultural and Educational Societies in South Africa and we are proud that your Society is doing so much in this branch of human endeavours to ensure that our children will not forget our rich heritage.
I am aware that only a handful of devoted and public spirited persons constitute your important society.
Through hard work and determination you rose from humble and modest beginnings to your present affluent position.
Our country in general and the Tamils in particular are indeed fortunate in having such selfless people in our midst.
We salute you and congratulate you on your great achievement and invoke God’s blessings on your society.
We pray for its continued growth and success.”
தென்னாப்பிரிக்க இந்து மகா சபையின் பொதுச் செயலாளர் திரு. பி.டி. பிரசாத் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“I have great pleasure in acceding to your request to contribute a message to be included in your brochure on the occasion of your Golden Jubilee Celebrations.
Ours is also one of the oldest Cultural and Educational Societies in South Africa and we are proud that your Society is doing so much in this branch of human endeavours to ensure that our children will not forget our rich heritage.
I am aware that only a handful of devoted and public spirited persons constitute your important society.
Through hard work and determination you rose from humble and modest beginnings to your present affluent position.
Our country in general and the Tamils in particular are indeed fortunate in having such selfless people in our midst.
We salute you and congratulate you on your great achievement and invoke God’s blessings on your society.
We pray for its continued growth and success.”
தென்னாப்பிரிக்க ஆந்திர மகாசபையின் தலைவர் திரு. எஸ். ரெட்டி அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“It gives me great pleasure to send you a message for inclusion in your Special Brochure to commemorate the Golden Jubilee.
To celebrate 50 years of existence is Indeed a proud record for the Officials and Members of the Merebank Tamil School Society, and take this opportunity of sending the Hindu Maha Sabha’s congratulations and good wishes on the achievement of your “Golden Jubilee.”
It is noted that during these fifty years you have done your utmost in promoting and preserving culture.
You have dedicated yourselves to propagating your culture and spiritual activity through various channels.
You have no doubt played a great role in educating the youth and have sown the seeds on fertile ground to propagate and preserve what is rightfully ours.
I am certain that your Society has pursued its aims and objects with great visions for future generations.
That your organisation may grow from strength to strength, and be endowed with greater energy and resources to continue your noble work is our fervent prayer.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (43)
வரலாற்றுச் செய்திகள் சில : (தொடர்ச்சி…)
பழங்காலத்தில் அயல்நாட்டு வாணிகம் செய்தவர் தமிழர்: ஆரியர் அல்லர்; வரலாற்றாசிரியர் கென்னடி குறிப்பிடுதல்.
எங்கள் ஊர்க்குரிய முதல்வியாகிய ஒளவையார் அதிகனைப் பாடும்போது ‘அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்’ என்று கூறுகின்றார்.
அதியன் விண்ணுலகினின்றும் கரும்பு கொணர்ந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.
அன்றைய உம்பற்காடு இன்று நும்பலக்காடு, அன்றைய பாயல் நாடு இன்று வயனாடு;
அன்றைய குமட்டூர் இன்று உமட்டூர், அன்றைய ராஜபுரம் இன்று தாராசுரம்,
அன்றைய எழில்மலை இன்று எலிமலை,
அன்றைய இடும்பில்
இன்று உடுப்பி,
அன்றைய குண்டுகட்பாலி,
இன்று பாலிக்குன்னு,
அன்றைய எருமையூர்
இன்று மைசூர் முதலியன.
பதிற்றுப்பத்து உரைகாரர் –
திருவனந்தபுரம் – திருமால் என்று கூறுவது தவறு; நார்முடிச் சேரல் காலத்தது வழிபட்டது, ஆடக மாடம், திருமால் அன்று.
நன்றா என்னும் குன்றேறிச் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலருக்குக் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்.
நன்றா எனும் அக்குன்று ஞானசம்பந்தர் காலத்தில் ‘நணா – திரு நணா’ என்றானது.
அதன் இன்றைய பெயர் ஊராட்சிக்கோட்டை.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்டை கவர்ந்து வந்தான்; அதனால் அடைமொழியோடு பெயர் அமைந்து என்கிற தவறான கருத்தை மாற்றி, துணங்கை கூத்தில் கை தந்தான்.
ஆடு – வெற்றி. ஆட்டத்தில் வல்லவன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என வரலாற்று விளக்கமளித்தல்.
வேள்விக்குடிச் செப்பேடு காமக்காணி நற்சிங்கன் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகனிடம் முறையீடு; முதுகுடுமி தந்த இறையிலி நிலம் களப்பிரர் காலத்தில் வரி செலுத்துவதற்கு உட்படுத்தப்பட்டது.
அதை நீரோடு அட்டிக் கொடுத்தான் (Epigraphica Indica vol. XG 11 No.)
வரலாற்றுவிளக்கமளித்தல்
பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இச்சேரமன்னன் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து அணிந்து
கொண்டதால் அப்பெயர் பெற்றான்; அதற்குக் காரணம் அவன் இளமையில் செய்த சூளுரை.
இவன் தாயத்தார் நன்னன் என்பவன் துணையுடன் இவனது நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர்; அந்த மன்னனை வென்று நாட்டை மீட்கும் வரையில் காயையும் நார்முடியையும் அணிந்து இருந்தான்.
அவன் நன்னனின் காவல் மரத்தை வெட்டி நன்னனைக் கொன்று நாட்டை மீட்டான்; நார் முடி களைந்தான்; பொன் முடி சூட்டிக் கொண்டான்.
அதற்குப் பின்னரும் பழைய பெயராலேயே அம்மன்னன் அழைக்கப்பட்டான் எனத் தெளிவுறுத்துகின்றார்.
உரைவேந்தரின் இந்த விளக்கம் புதியது; அறிவுக்கு விருந்தாவது; பொருத்தமானது; அதுவரை எவரும் கூறியிராதது.
மேலும், எதையும் கூர்ந்தும் ஆழ்ந்தும் சிந்திக்கும் அவர்தம் செழுந்தமிழ்ப் புலமை வளத்திற்குச் சீரியதோர் எடுத்துக்காட்டு.
• ‘ஆரியகம்’ கொண்கானம் வட விமையம் இடைப்பட்ட நாடு – யவனர் குறிப்பு.
• கேரளோற்பத்தி, சேரலர் கேரளர் ஆன வரலாறு, வடவர் தொடர்பு மிகுதி.
• தலைநகர், சென்னை; தலைநகர் பற்றித் தமிழர் வரலாற்று உணர்வற்றனர்.
• மகேந்திரனின் இசைப்பற்று, குடுமியான்மலைக் கல்வெட்டு
• விபுலானந்தர் / பொன்னையாப் பிள்ளை இசை ஆராய்ச்சி
போன்ற பல செய்திகள், வரலாற்று அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன.
புதிய வரலாறு
இந்திய வரலாறு
தென்னாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் மனோன்மணியம், சுந்தரனார் உட்பட அறிஞர் பலர் கூறியிருக்கின்றனர்.
அதற்கிணங்க ஒரு புதிய வரலாறு எழுதப்படுமானால் அதை யார் எழுதவேண்டும் என்பதை ஔவையவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்:
‘தமிழ் நாட்டின் வரலாற்றினை தமிழ் நன்கறிந்த தமிழ் உள்ளம் படைத்த தமிழ் நன் மக்களே முற்பட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிய நினைந்து எழுதும் காலம் உண்டாயின் நன்று.’
ஒளவையும் தமிழிசையும்
பண்ணாராய்ச்சியும்
யசோதரகாவியம் முன்னுரையில் தமிழிசை, கருநாடக சங்கீதம், தமிழ்ப் பண்கள், அவற்றின் ஆரோசை, அமரோசை, வட மொழிப்படுத்தியமை, பொல்லாங்கு பேசும் பொய்ம்மை போன்ற பலவற்றையும் விரிவாக ஆராய்ந்திதிருப்பது, ஒளவையவர்கள் இயற்றமிழில் மட்டுமின்றி, இசைத்தமிழ் ஆராய்ச்சியிலும் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கிறது.
நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பிய ஞானசம்பந்தர், ஏழிசையாய் இன்னமுதாய் இறைவனைப் பாடிய சுந்தரர், யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்றபோது கண்டறியாதன கண்ட திருநாவுக்கரசர், சங்கரா ஆர்கொலோ சதுரர் என வினவிய மாணிக்கவாசகர் முதலாய அருளாளர்களின் திருப்பதிகங்களைப் பேசும்போதும், எழுதும்போதும், ஓதும்போதும் ஔவையவர்களின் இன்னிசை ஆய்வும் புலமைநலமும் செந்தமிழ்ப்பண்களை ஆராய்கின்ற அவர்தம் பண்ணாராய்ச்சி வித்தகத்தை வெளிப்படுத்துகின்றன.
இசையும் கடவுள் உணர்வும்
இசையானது உள்ளத்தைத் தூய்மை செய்து அமைதி நிலவச் செய்வது பற்றியும் பண்டைய நாளை அறிஞர் கடவுள் உணர்வை இசை வாயிலாக உணர்த்துவது சிறப்பெனக் கருதலாயினர்.
இசைப்பாட்டுகள் பலவும் கடவுள் உணர்வு கொளுத்தும் மொழிகளாகவே இருக்கத் தலைப்பட்டன.
இவ்வுணர்வு தமிழ்நாட்டில் தலைசிறந்த காலம் 7, 8, 9, 10ஆம் நூற்றாண்டுகள் ஆகும்.
சைவ, வைணவப் பெரியார் இசை பதிகங்களும், பாசுரங்களும் இசையினை மறையாது விரைவாகப் பரவி வேரூன்றச் செய்தன.
இற்றை நாளிலும் வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த அரசியல் உணர்ச்சிகள் அரசியல் கட்சி தம் கொள்கைகளும் இனிய இசைப் பாட்டுக்கள் வாயிலாக நாட்டில் நன்கு பரவி நிற்பதைப் காணுகின்றோம் அன்றோ! இசையின் பால் இத்தகைய இயல்பு உற்பத்தியே மேனாட்டவரும் கடவுட்கொள்கை பரவி நிலைபெறுதற்கு இசை ஒரு கருவி எனக்கருதி அதனைப் போற்றிப் பெருமை செய்வாராயினர்.
15, 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்ட்டின் லூதர் என்பவர் சமய உணர்வுகளுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பித்தது இசையை என்றும்,
தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள் தம் கருத்துக்களை இனிய பாட்டுக்களில் வைத்துப் பாடிச் செயற்கரும் செயல்களை செய்தனர் என்றும் கூறுவாராயினர்.
(“…..next to theology, I give to music the highest place and…. we see how David and all the saints have wrought their godly thoughts into verse thymes and songs” – Martin Luther).
தமிழிசை பற்றிப் பொய்மொழியர் கூற்று…

Add a Comment