POST: 2022-07-26T10:48:11+05:30

தினசெய்தி
26.7.2022,செவ்வாய்க்கிழமை
பக்கம் 8

மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் !

சென்னை இல்லத்தில் நடந்தது

மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை அண்ணா நகரில் தாரகை இல்லத்தில் நேற்று 25 7 2022 – திங்கட்கிழமை காலை 7.00 – 8.30 மணியளவில் திருமுறை அரசு ஒளியரசு தலைமையில் மரபு வழிபாடு நடைபெற்றது .

ஆஸ்திரேலியாவிலிருந்து மூத்த மகன் மருத்துவர் கண்ணன் .மருமகள் மருத்துவர் சாந்தி ,மூன்றாம் திருமகன் தென்னாப்பிரிக்காவிலிருந்து மருத்துவர் பரதன் , இரண்டாம் திருமகன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் அருள் – மக்கட்செல்வங்களும் பங்குபெற வழிபாடு நிறைவேறியது .

வழிபாட்டு நிகழ்வில் முனைவர் ஒளவை நடராசன் தலைமையில் அன்னம் பாலிப்பு நடைபெற்றது .

மேலும் திருப்பூர் பட்டயக் கணக்கர் தமிழ்ச்செம்மல் லோகநாதன் , அரசு சித்த மருத்துவர் பத்மானந்தம் ,மேல்போர்ன் மாநகரிலிருந்து மருத்துவர் குமணன் ,பொன்னேரியிலிருந்து மருத்துவர் நலங்கிள்ளி ,சுதா நலங்கிள்ளி ,தனிச் செயலர் பொன்னேரி பிரதாப் , மஸ்கட்டிலிருந்து இராஜ்குமார் ,காஞ்சியிலிருந்து முரளி கலந்து கொண்டனர் .

மக்கள் குரல் – 26 7 2022

பக்கம் எண் : 7

ஒளவை நடராஜன் மனைவி தாரா 2வது ஆண்டு நினைவேந்தல்

சென்னை,

ஜூலை 26

ஒளவை நடராஜன் மனைவி தாரா நடராசன் 2வது ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அண்ணா நகரில் தாரகை இல்லத்தில் தாரா நடராசனின் 2வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருமுறை அரசு ஒளியரசு தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒளவை நடராசன் தலைமையில், ஆஸ்திரேலியாவிலிருந்து மூத்த மகன் கண்ணன், மருமகள் டாக்டர் சாந்தி, தென்னாப்பிரிகாவிலிருந்து 3வது மகன் பரதன், 2வது மகன், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோசம், திருப்பூர் தமிழ்ச்செம்மல் லோகநாதன், அரசு சித்த மருத்துவர் பத்மானந்தம், மேல்போர்ன் மாநகரிலிருந்து குமணன், பொன்னேரியிலிருந்து டாக்டர் நலங்கிள்ளி, சுதா நலங்கிள்ளி, தனிச் செயலர் பொன்னேரி பிரதாப், மஸ்கட்டிலிருந்து ராஜ்குமார், காஞ்சியிலிருந்து முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நினைவேந்தல்

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே! (புறம்-245)

பெருந்தகையீர்,

வணக்கம்.

உடுக்கணக்கு மரபின்படி என் மனை விளக்கு மருத்துவர் தாரா நடராசன் மறைந்து ஈராண்டுகளாகின்றன.

ஆடித்திங்கள் ஒன்பதாம் நாள், திங்கட்கிழமை (25.07.2022) காலை 7.00 – 8.30 மணிக்கு மரபுளி வழாத தமிழ் வேள்வியாக, ஔியகம் ந. ஒளியரசு குழுவினர் நிகழ்த்தும் ஈராண்டு நினைவேந்தல் வழிபாடு தாரகை இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *