POST: 2022-07-28T10:54:15+05:30

நூலகத் தூண் சரிந்தது!

ஆய்வுக்கு அணிகலமாக விளங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகராக ஓய்வின்றிப் பணியாற்றியப் பெருந்தகை பெருமாள்சாமி 25.07.2022 திங்கள் கிழமையன்று இரவு 11 மணியளவில் திடுமென மறைந்த செய்தி இடியாகக் கேட்டுக் கலக்கமுற்றேன்.

கடமையாற்றுவதில் மாமணியாகத் திகழ்ந்த பெருமாள்சாமி அவர்கள் ஆய்வாளர்கட்கு ஊக்கம் தரும் வகையில் தகுந்த நூல்களைப் பரிந்துரைக்கும் பாங்காளர் ஆவார்.

ஆறாண்டுகளுக்கு முன்பு இறகுப் பந்தாட்ட அரங்கத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கி விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்.

நோய்த் தொல்லை யாரை விட்டது?

சிறுநீரகச் சிக்கலால் அவதியுற்றார்.

சில நாட்களுக்கு முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகத்திற்கு சீர்வளி அமைவு பற்றி என்னிடம் செய்து தருமாறு வேண்டினார்.

ஓய்வில்லாதப் பெருந்தகையின் மறைவு ஆற்றமுடியாத துயரத்தைத் தருகிறது.

பெருமாள்சாமியின் கனவுகளை நிறைவேற்றும் கடப்பாட்டை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நண்பர்கள் தோளில் சுமந்துத் தொண்டாற்ற வேண்டும்.

அன்னோனை இழந்த உலகம் இனி
என்னாவது கொல் அளியது தானே!

என்ற இரங்கற்பா தான் நினைவை நெருடுகிறது!

ஒளவை அருள்

அவ்வப்போது
உலகத்தமிழிதழ்
138 வது வாரயிதழ்
பக்கம் 8

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *