செந்தமிழ் மாமழை – சேக்கிழார் விழா !
சென்னையில் விழாக்கள்
களைகட்டத் தொடங்கிவிட்டன .
விழாவேந்தர் – தமிழவேள் சிவாலயம் மோகன்
அவர்கள் நடத்தும்
சேக்கிழார் விழா
திருவான்மியூர் –
இராமச்சந்திரா பேரவைக் கூடத்தில்
சிறப்பாகத் தொடங்கியது .
விழா அளவில் பெரியது .
ஆற்றலில் அதைவிடப் பெரியது .
முதல் நாளில்
சொல்லழகர் – பொருளழகர் – சுவையழகர்
என்று தமிழுலகம் போற்றும் சொ சொ மீ சுந்தரம் –
சேக்கிழார் பெருமை
என்ற தலைப்பில்
பேருரையாற்றினார்
விழா வாழ்த்துரையில்
நானும் பங்குகொண்டேன் .
சிவாலயம் மோகன் மூன்று நாள்களுக்கு
செவிக்கு உணவும் – வாய்க்கு விருந்துமாக
மாபெரும் விழாவாக நடத்துவதை
நான் மனம் நெகிழ்ந்து பாராட்டினேன் .
வாழ்க சிவாலயம் மோகன் !
வளர்க சேக்கிழார் சிந்தனை !!
பரிவோடு
ஒளவை அருள்
30 7 2022

Add a Comment