அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 120
பொழிவுகள் சிந்தும் புலமைப் பரல்கள்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
மியர்பேங்க் ஸ்ரீ பராசக்தி கோயில் தலைவர் திரு. ஏ.எம். கவெண்டர் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“On behalf of the Merebank Sri Parasathie Temple, it is our privileged opportunity to congratulate the Merebank Tamil School Society on its fifty years of service to the community of Merebank.
From its small beginnings the Society has grown into a large and dynamic organisation, catering for the social and cultural needs of the people of Merebank as well as for those residing outside the city of Durban.
Our culture forms an integral facet of our community life.
We are indeed proud of our rich cultural heritage and it beholds us to preserve that which has been handed down to us over the generations by our forebears.
Over the years the M.T.S.S. Hall had been effectively used to host a variety of functions, all of which were in keeping with our cultural traditions and values.
In this respect, to propagate and sustain the Tamil language, your Society has provided a valuable service by educating the younger generation and developing their skills in communicating via the respective medium.
We once again take this privileged opportunity of congratulating your Society for the invaluable services rendered to the vast Indian Community and we sincerely hope that you will grow from strength to strength in extending these services to the other areas of greater Durban.”
தென்னாப்பிரிக்க சைவ சித்தாந்த சங்கத்தின் தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர் சுவாமி சிவானந்த நாவலர் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“We are extremely delighted to learn of your “Golden Jubilee Celebrations” to be held in October 1986.
Your Association, The Merebank Tamil School Society, from its very humble beginnings has now grown to be one of the leading Educational and Cultural Institutions in our country.
It is praiseworthy to note, that dedicated men and women of your Society have given their self less services tirelessly in upkeeping our language and culture.
Culture and language are the life blood of a nation.
If Culture and language die, the nation dies.
Your magnificent building that stands as a landmark in Merebank, is not only a great achievement but also a testimony of your labour of love for our community.
It is our fervent prayer to Almighty God Parameswara to Bless your organisation with all prosperity.”
தென்னாப்பிரிக்க தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் திரு. எஸ். பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“This is indeed a great pleasure to pen a few words on your celebrations.
What makes this occasion particularly meritorious is that you have weathered the storms and turbulences of this century and can still exist as strong as ever.
Your organisation had its beginnings sometime after the arrival of our early settlers, in Natal.
What a great beginning! It started with and by a marvellous group of men.
What great, hardy spirit must have prevailed at that time.
Those men had substance, courage, religious fervour and the will to succeed.
As your organisation so aptly illustrates.
You have gone through hard times this century.
Massive political upheavals with its noncomitant racial discrimination, serious economic hardships, religious intolerances, the constant threat of our people converting to other faiths because of these upheavals and yet… through all this you survived and prospered.
We salute you!
We salute your officials over this century.
We salute your members.
We salute your community which held steadfast.
However, this is but the end of the beginning.
The road ahead is a difficult one.
Political problems, economic hardships, lack of faith in our religion, erosion of good basic values will be the order of the day.
If you have survived the past through dedication and devotion, you will face and conquer the future by displaying the same fervour.
The Tamil people of the whole republic rejoice with you on this day.
Vannakam.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (44)
மொழிநடை கவிதை நயம்.
பேரியாற்று வருணனை
“கடல் அளவுக்கு 2800 அடி உயரத்தில் மலை முகட்டில் தோன்றி 60 கல் அளவு மலையிடையே நெளிந்து வளைந்து தவழ்ந்து தாவித்துள்ளிப் பரந்து வரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சி நல்கும்”
(பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு)
ஐந்து திணைகளிலும் இயற்கை அன்னை:
இயற்கை அன்னை கோயில் கொள்ளும் இடம் மலை நாடான குறிஞ்சி;
அவள் தனது அருளழகை விளக்கும் இடம் முல்லை:
கொலுவீற்றிருக்கும் திருவோலக்கம் மருதம்;
அவள் மகிழ்ந்து விளையாடி (நந்தாவிளக்கு) மாண்புறும் இடம் நெய்தல்!
சமகாலச் சிந்தனைகள்
பொழிவுகள் சிந்தும் புலமைச்சிதறல்கள்
”சமய சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம்;
இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மான் நுழைபுலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம்;
இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும் நயங்கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம்;
இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவது பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே!
பேச எடுத்துக் கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் மன அரங்கில் மாறிமாறி வந்து நடிக்கச் செய்து, அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது.”
இராகவன்
தமிழ்நாடு
“சங்ககாலச் சோழ பாண்டியர்க்குப்பின், தமிழ்நாடு களப்பிரர் என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன் சீரும் திருவும் இழந்து சமழ்புற்றது.
வேற்றுமை மாசின்றி ஒருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலை நாடுகளும் கீழை நாடுகளும் போற்றிப் பரவ வீற்றிருந்த அதன் புகழ் மறைந்தது.
அறவர் அறவராய், மழவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர் மற்றவருக்குப் பணிந்து அவருடைய அடி வருடும் அடிமை நிலை எய்தினர்.
தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன.
அரசியல் வணிகம் தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயினன.”
(வரலாற்றுக் காட்சிகள்)
தமிழ்மொழி
“தமிழ் மக்களின் தமிழகம் இடம் சுருங்கிப் பண்பாடு மெலிந்து அடிமை யுணர்வு மிகுந்து வறுமையில் நெளிந்து கொண்டிருக்கும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
காணும் இடமெல்லாம் தமிழர் அறிந்த மொழிகள் காட்சி தருகின்றன.
காணப்படும் ஒரு சில தமிழ்ச் சொற்களும் பெயர்களும் பிழையும் வழுவும் பெருகியுள்ளன.
அரசியல் நிலையங்களிலும் தொழில் வணிக அலுவலகங்களிலும் புகைவண்டி முதலிய போக்குவரவுகளிலும், சமய நிலையங்களான கோயில் வழிபாடுகளிலும் பிறதுறைகளிலும் தமிழர்களின் தமிழ் இல்லை.
தமிழர் உள்ளம் வளர்க்கும் தமிழ்க் கருத்தும் ஒழுக்க நெறியும் தக்கவாறு இல்லை.
தமிழர் அனைவரும் பிறர் யாருக்கோ அடிமைப்பட்டு உரிமையிழந்து மானமில்லாத வற்றல் மரங்கள் போல வாடிய உள்ளமும் கோடிய நினைவும் கொண்டு குனித்து தோன்றுகின்றனர்.
தமிழரது தமிழ் வாழ்வு தமிழகத்தில் தான் இது நிலை என்றால், அவருடைய கிளைஞர் வாழும் பிற நாடுகளிலும் இந்த அவல நிலையே நிலவுகின்றது.”
(ஔவையின் பேருரை)
தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பன்னிரண்டாம் மாநில மாநாடு மதுரையில் 9.8.1970-இல் நடந்த போது வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த உரைவேந்தர் கூற்று.
தமிழாசிரியர்கள்
வெறிதே தமிழ் அறிவிக்கும் தொழிலாளி அல்லர் தமிழ்ப்புலவர்.
தமிழ் உள்ளத்தை நேரிய உருவுடையதாக்கும் சிந்தனைச் சிற்பிகளாவர்.
அவர் கையாளும் பொருள் சிந்தனை; ஏனையோர் கையாளும் மண்ணும் மரமும் இரும்பும்போல அழிந்துபடும் அழி பொருள் அன்று.
நின்று பயன்படும் அறிவுப் பொருள்.
தமிழ்ப்புலவர் அறிஞர்களுடைய கடமை
தமிழ்ப்புலமை பெற்றார் அரசியல், வாணிகம், தொழில்,சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் கருத்தைச் செலுத்தும் நேர்மையுடைய தமிழாசிரியர்கள் ஆதல் வேண்டும் என்பது என் தனிக் கருத்து.
தமிழ்மனமும் தமிழறிவும் உடையோர் அரசையும், வாணிகத்தையும், தொழிலையும் பிறவற்றையும் மேற்கொண்டாலன்றிச் சூழ்நிலை மாறுதற்கு வாய்ப்பில்லை.
தமிழர்களின் அறிவுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே தமிழ் அல்லாத வேற்று மொழிகள் குறுக்கிட்டு நிற்கும் சூழ்நிலை இன்று தமிழ்ப் பணிக்குப் பெரியதோர் இடையூறு.
அதனைத் தகர்த்தெறிவது தமிழறிஞர் கடமையாகும்.”
புலமை நிறைவு
போற்றிகள்
உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது நிறைவு நாளன்று பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் வழியே புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ஔவை துரைசாமி அவர்களுக்கு 10,000 ரூபாய் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.
மதுரைப் பல்கலைக்கழகம், பேரவைச் செம்மல் விருது வழங்கி அவரைப் பாராட்டியது.
தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில் கேடயம் பரிசாக வழங்கப் பெற்றது.
தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்துப் பேச்சாளர்கள் என மா.சு சம்பந்தன் தொகுத்த பட்டியலில் ஒளவை துரைசாமியாரும் தனிச்சிறப்பாக இடம்பெற்றார்.
உரை கண்ட பெருஞ் செல்வம்
“கடவுட் பற்றும் சைவத் தெளிவும் பொது நோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு பெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரை கண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணாச் செல்வமாகும்.
நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி நெடும்புகழ் என்றும் நிலவுவதாக!”
-(பேரா.வ.சுப. மாணிக்கனார், மேனாள் துணைவேந்தர்)
உரை மாமன்னர்:
மன்னரென்றால் அரிமா உருக் கால்கள் நான்கு தாங்கும் அரியணை வேண்டும்.
அந்த நான்கு கால்களும் மன்னரின் தனித்தனி நால்வகை ஆற்றலுக்கு அடையாளங்கள்.
வைணவத்திற்கு உரைமாமன்னர் பெரியவாச்சான் பிள்ளை. அதுபோன்று தமிழுக்கு உரைமாமன்னர் ஔவை துரைசாமிப்பிள்ளை.
“சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஓர் அரியணையும், சைவசித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும், சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருளுக்கு விளக்கம் கூறியதற்கு மூன்றாம் அரியணையும், சன்மார்க்க ஞான வேதமாகிய திருவருட்பாவை எழுதியதற்கு நான்காவது அரியணையும் என நான்கு அரியணையில் ஏற்றி உரைவேந்தரைப் பேருரை விளக்கப் பெரும் புலவர் என்று, பெரியவாச்சான் பிள்ளையை வைணவ உலகம் போற்றியது போலவே, அவர்களையும் நாம் போற்றலாம்.”
– பொறியாளர் திலகம் கெ.பக்தவச்சலம்.
ஆண் ஒளவை, அழகிய கற்பனை;
அவர் மாணவர் மீரா சூட்டும் பாமாலை:
“அதியன் தான் இன்றில்லை, இருந்திருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதொரு ஆண்ஒளவை என வியப்பான்,
பூரிப்பான், மகிழ்ச்சியிலே மிதப்பான்,
மற்றோர் அதிமதுரக் கருநெல்லிக் கனிகொணர்ந்தே
அளித்துங்கள் மேனியினைக் காத லிக்கும்
முதுமைக்குத் தடை விதிப்பான், நமது கன்னி
மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!”
– கவிஞர் மீ. இராசேந்திரன் (மீரா)
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment