அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 121
ஔவையியம் – தொடரும் தமிழ்ப்பணி
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க திராவிட சொசைட்டி அமைப்பின் தலைவர் ஆர்.ஜே. முதலி அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“On behalf of the officials and members of my Society wish to extend our good wishes on the occasion of your golden Jubilee.
Fifty years of existence is an important event in the history of any organisation.
At times like these we reflect on the pioneering work of our forbearers.
Their concern for the promotion of Tamil Language and culture is admirable indeed.
It is a well known fact that Tamil is the oldest living language and as such Tamilians ought to be proud of their heritage.
For this reason your Organisation has to be complimented for doing sterling work in preserving and propagating this rich heritage among the younger generation in the Merebank area.
The work of the present officials in this regard will be more challenging because of the inroads made by Western civilisation into our way of life.
While we concede that a static civilisation will lead to its death we are also mindful that tried and trusted values form the very fabric of our earthly existence.
These values are entrenched in the works of writers such as ThiruValluvar and the four Saivite Saints.
To understand them it is necessary to know the Tamil Language.
It is heartening to note that there is a revival in interest and a yearning for our culture among our youngsters.
There is a need for us not only to encourage this interest but also help to develop it to its maximum potential.
We do know the strength of your Organisation and we are sure that you would continue to work vigorously to achieve the aims and objectives of your Society.
May Namasivaya shower His grace upon your members and officials and may your Golden Jubilee Celebrations be a fruitful one.”
மியர்பேங்க் தமிழ் இளைஞர் அணித் தலைவர் திரு. டி. நடேசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“Our Youth Movement salutes the Merebank Tamil School Society on its achievement of the 50 year milestone and the celebration therefore of the Golden Jubilee.
Our heartful congratulations go to those pioneer elders whose supreme dedication to a noble cause and unmatched consistency and tenacity are to be greatly admired.
Our movement which has similar aims was inspired by the great example of the founders of the M.T.S.S.
While we represent the aspirations of a younger generation of Tamils in Merebank, it is our avowed aim to emulate these elders whose “toil without reward” for the community has borne fruit in the form of a cultural centre that will serve posterity.
We believe that this magnificent centre will generate a great deal of cultural educational and social activity.
We thank the founders and pay homage to their great qualities of public spirit, community concern and absolute unselfishness.
We humbly hope to follow in their glorious path and work hard to fuel the “Lamp of Culture” to enable it to burn higher and brighter and radiate wisdom, beauty and love at all times.”
THREE GREAT TRUTHS
There are three truths which are absolute and which cannot be lost, but yet many remain silent for lack of speech.
1. The soul of man is immortal, and its future is the future of a thing whose growth and splendour have no limit.
2. The principle which gives life dwells in us, and without us, is undying and eternally beneficent, is not heard or seen or smelt, but is perceived by the man who desires perception.
3. Each man is his own absolute lawgiver, the dispenser of glory or gloom to himself: the decree of his life, his reward, his punishment.
These truths which are as great as life itself are as simple as the simplest mind of man.
Feed the hungry with them.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (45)
ஔவையின் தமிழ்ச் சிந்தனை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர்தம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அரசியல் பொருளியல் சமூக ஆர்ப்புகளையும் அவலங்களையும், மன்னர்களின் மாட்சியையும் வீழ்ச்சியையும், புலவர்களின் வறுமையையும் வளமையையும், போரின் புன்மையையும் வன்மையையும், வாழ்வியல் நடைமுறை மெய்ம்மையையும் பொய்மையையும் காட்டும் புறநானூறு முழுமைக்கும் உரையெழுதி நிறைவு செய்கையில் உரைவேந்தர் அவர்களின் உள்ளத்தில் வெள்ளமெனப் பொங்கிப் பரவிய தமிழ் உணர்வுகள் பின்வருமாறு அலையாடுகின்றன:
இடைக்காலத் தமிழகம் பண்டைய இலக்கியச் செல்வத்தைப்பேணும் துறையில் கருத்தைச் செலுத்தி இருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம்.
இடைக் காலத்தே புன்னெறியில் வீழ்ந்து, அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில், அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது.
பிற நாட்டார் தலைவணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது.
இடையூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயல்கிறது.
சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாக்கும் பணியில் பெரும்பாடு படுகிறது.
வாழ்க தமிழ்!
வீழ்க பகை!
வெல்க தமிழகம்!
வெல்க தமிழர்!”
(புறநானூறு 400)
ஒளவையவர்களின் முழக்கத்தில் நாமும் இணைந்து நமது பங்களிப்போம்.
“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே! ”
என்னும் புறநானூற்றுப் பாடல் இலக்கணத்திற்கு இலக்கியமாய், தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்து காட்டிய உரைவேந்தர் ஒளவைதுரைசாமியார் அவர்களின் உயிர்மூச்சு 3.4.1981 அன்று 79 ஆம் அகவையில் என்றும் அவரது சிந்தை குடியிருக்கும் சிவத்துடன் இனிதே கலந்தது.
“தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை”
– பாவேந்தர் பாரதிதாசன்
பிற்சேர்க்கை 1
புறநானூறு
உ.வே.சா-ஒளவை பதிப்புக்கள்
பாடினோர் வரலாறு – நுண்ணாய்வு – ஊர் / பெயர் விளக்கம் முதலியன.
[குறியீடுகள்: = ஏற்பு, + கூடுதல் விவரம், x மறுப்பு, $ உய்த்துணர்தல், # சிறப்புச் செய்தி / விளக்கம், @ ஆராய்தற்குரியது]
அண்டர் மகன் குறுவழுதியார் (பாட்டு 346)
உ.வே.சா: தொகை நூல்களில் குறுவழுதியார் என்று ஒரு பெயர் காணப்படுகின்றது.
இவ்விரு பெயரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
வழுதி என்ற பெயரால் இவர் பாண்டிய மரபினர் என்பது போதரும்.
+ ஒளவை: குறுவழுதியார் அண்டர் நடுங்கல்லினார்க்கு மகனார் போலும்.
பாண்டி வேந்தற்கு விளங்கியதானைத் தலைவர்களும் ஏனைய தலைவர்களும் பாண்டி வேந்தர் சிறப்புப்- பெயர்களுள் சிலவற்றைத் தாமும் கொண்டிருந்தனர்.
இதனை இடைக்காலச் சோழ பாண்டியர்களின் கல்வெட்டுகளில் காணலாம்.
சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் கல்வெட்டொன்று (p.s.No.492) ஒரு தலைவனை சுந்தரபாண்டிய வாணாதிராயர் என்று குறிப்பது காணலாம்.
ஆதலால் இவரும் குறுவழுதி என்ற பெயருடையவராயினர் எனக் கருதலாம்.
பாண்டியர்க்குப் பெருவழுதி சிறுவழுதி என்றலினும் குறுவழுதி என்பது சிறப்புடையதாக இவர் குறுவழுதி எனப்பட்டனர்
(2ஆம் பகுதி / பக்.292)
அரிசில்கிழார் (பா.146)
உ.வே.சா: கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர் அரிசில் என்பதன் மரூவாகக் கருதப்படுகின்றது.
அரிசிற்கரை என்று மைசூர் சமஸ்தீனத்தில் ஓரூர் உள்ளது.
கிழார் – உரியவர்; கிழாரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப் பெயராக இருந்ததென்று தெரிதலின், இவர் வேளாண் மரபினராக இருத்தல் கூடும்.
+ ஒளவை: சேரமன்னருள் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடி, அவன் தந்த நாட்டரசைத் தான் மேற்கொள்ளாது, அவனையே மேற்கொண்டு ஆட்சிபுரியுமாறு இரந்து பின்னின்று வண்புகழ்பெற்று விளங்கின சான்றோர் அரிசில்கிழார் என்பவர்.
அவரது ஊராகிய அரிசில் என்பது அரிசிலாற்றங்கரையில் விளங்கிய ஊராகுமென்று அறிஞர் கருதுவர்.
(பகுதி1/ ப.305)
ஆடுதுறை மாசாத்தனார் (பா.227)
உ.வே.சா: காவிரி நதியின் தென்பால் ஒன்றும் வடபால் ஒன்றும் வடவெள்ளாற்றங்கரையில் ஒன்றுமாக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயரினவாக உள்ளன.
இவற்றில் முன் இரண்டும் தேவாரம் பெற்றனவும் பின்னது புராண வரலாறு உள்ளதுமான சிவஸ்தலங்கள்.
இவை முறையே தென் குரங்காடுதுறை, வட தூரங்காடுதுறை, ஆடுதுறை என வழங்கும்.
பின்னுள்ளது எழு துறைளில் ஒன்று.
தெய்வப் பெயரை மக்களுக்கிட்டு வழங்குதல் மரபாதலின் ஐயனாருடைய திருநாமமாகிய மாசாத்தனார் என்பது இவருக்குப்பெயராக அமைந்தது போலும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய வராதலால் சோடி நாட்டினரென்றே கொள்வது தக்கது.
#ஒளவை: மாசாத்தனார் சோழநாட்டு ஆவடுதுறை என்னும் ஊரினர்.
திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்பது பழம் பெயர் என அவ்வூர்க் கல்வெட்டுகளும் (A.R. No. 124/ 1925) திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன.
சாத்தனூர் என்பது ஊர்ப்பெயர்,
திருவாவடுதுறை என்பது திருக்கோவிலுக்குப் பெயர்; நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து போகவே திருவாவடுதுறை என்ற பெயரே ஊருக்கும் பெயராகிவிட்டது.
ஆவடுதுறை என இருத்தற்குரியது ஆடுதுறை என அழைக்கப்பட்டது.
#சாத்தனூர் என்னும் பெயர் மாசாத்தனார் பெயரால் பண்டைச் சோழ மன்னர் ஆகிய கிள்ளிவளவன் முதலிய சோழன் சோழ மன்னரால் வழங்கப்பட்டதாக வேண்டும்.
ஆவடுதுறை மாசாத்தனார் என ஏடுகளில் வழங்கப்படுகின்றனர்.
(2/ப.60).
ஆலத்தூர்கிழார் (பா.34)
உ.வே.சா.: ஆலத்தூரில் பிறந்தவர் இவர்; ஆலத்தூர் என்ற பெயருள்ள ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன; இதனை இன்ன ஆலத்தூர் என்று சொல்ல முடியவில்லை.
(முகவுரை, ப. 23).
=ஒளவை: ஆலத்தூர்கிழாரின் இயற்பெயற் தெரிந்திலது.
ஆவூர் கிழார் (322)
உ.வே.சா: ஆவூர் என்னும் பெயர் உள்ள ஊர்கள் பல இருத்தலின் இந்த ஆவூர் இன்ன இடத்திலுள்ளதென்று தெரிந்து கொள்ளக் கூடவில்லை.
ஆனாலும், மருத நிலத்தின் வளம் இவர் பாடலில் கூறப்பெற்றுருத்தலின் இது சோழ நாட்டில் காவிரியின் தென்கரையிலுள்ள ஆவூராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.
#ஒளவை: ஆவூர்கிழாரது இயற்பெயர் தெரிந்திலது.
ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாநாட்டிலும் வடார்க்காடு மாநாட்டிலும் உள்ளன.
திருவண்ணாமலைப் பகுதியில் உள்ள ஆவூரே இச்சான்றோது ஊராக இருக்கலாம் என எண்ணுதற்கேற்ப, முல்லை நிலத்தையே இவர் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
ஆவூர் காவிரியின் தென்கரையில் உள்ளது.
அது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் சிறப்பித்துப் பாடப்பெற்றது.
எனினும், மருதவளம் சார்ந்து அண்ணாமலைநாட்டு ஆவூரின் வேறுபடுகிறது.
இவர் பாடியதாக இந்த ஒருபாட்டு மட்டுமே இந்நூலில் நமக்குக் கிடைத்துள்ளது.
(2ப.9)
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment