கனவுத்தமிழ் –
மே 2022
பொறுப்பேற்பு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநராக பொறுப்பினை முனைவர் அருள் ஒளவை நடராசன் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை முதல் ஏற்றுள்ளார் .
இவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் கூடுதல் பொறுப்பினை ஏற்றுள்ளார் என்பது தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்குக் கூடுதல் மகிழ்ச்சி !
முனைவர் ந அருள் அவர்கள் தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராகக் கடந்த பதிமூன்று ஆண்டுகளாகச் சிறப்பாகப் பணியாற்றி வருபவர் .
மூன்று தலைமுறையாகத் தமிழுக்குப் பங்களிப்பு செய்து வரும் குடும்பப் பின்னணியினைக் கொண்டவர் .
எறும்பு தோற்கும் சுறுசுறுப்பும்
கரும்பு தோற்கும் இனிமையும்
இரும்பு தோற்கும் உறுதியும் கொண்டவர்
இவரது இந்த பொன்னான காலத்தில் தமிழ் வளர்ச்சித்துறையும் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மேலும் வளர்ச்சி அடையும் .
இயக்குநர் அவர்களை கனவுத்தமிழ் ஆசிரியர் குழு சார்பில் வாழ்த்தி வரவேற்று மகிழ்கின்றோம் !.

Add a Comment