அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 123
பைம்புனத்து ஓரேருழவன்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் இந்திய அறக்கட்டளை அமைப்பின் தலைவர் திரு. என். ஹரேஷ் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“The Merebank Tamil School Society can look back with satisfaction on the achievements of its fifty years of existence.
For any institution to continue to provide food for the cultural needs of its people, stimuli for noble aspirations and higher endeavours in the face of enormous difficulties is in itself a great accomplishment.
In the present times when people are generally busy fulfilling their material wants, the cherished values of our culture handed down to us from our Rishis and Seers over thousands of years, must not be overlooked – man does not live by bread alone.
The home and social life, and our educational institutions should become noted for their emphasis on cultural, moral and spiritual values.
The Merebank Tamil School Society can rightly be proud of its endeavours in providing these needs which were on the brink of falling by the wayside due to people’s pursuit of material needs and self aggrandisement.
The birth and growth and the difficulty with which many of its intricate problems have been solved, reinforce our faith in God, and, in our district.
His instrument – The Merebank Tamil School Society for the arduous task it had accomplished in raising our people from the mire in which we were nearly submerged.
On this memorable occasion the Merebank Indian Association Charitable Trust prays that the Almighty may give fresh vigour to the Merebank Tamil School Society to direct its attention more and more to the dissemination of moral principles and devotion.
May the Society grow from strength to strength.
Our frevent prayer is:
“Give us the strength to raise our mind high above daily trifles?
Give us the strength to make our life fruitful in service”.
திரு. ஆர்.ஜி. ரெட்டி அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“It is indeed a pleasure and an honour to be asked for a brief message to be included in your Golden Jubilee brochure.
I have reason to associate myself joyously with your celebrations and to extend to the office bearers and members of the Merebank Tamil School Society my heartiest congratulations on this occasion.
Looking back somewhat wistfully, to the thirties and the early forties.
I recall with pride and pleasure my close association with the stalwarts who have since passed on but who, by their industry, knowledge and initiative, contributed so much to the propagation of the Tamil language and culture in Merebank.
Gone are the old Merebank State-Aided School and the old Tamil School Hall where I taught bath English and Tamil for a number of years.
In their place now stands the magnificent MTSS Hall so popular with the Indian community for social functions.
May you, the present officials and members of the Society, enter the future with courage and hope and be inspired to even greater eminence to promote the Tamil language and culture by your untiring labours and endeavours,
Best wishes for a very successful Golden Jubilee celebration.”
பேராசிரியர் பூபாளன் பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“The Indian community of South Africa, and the Tamils in particular, have exhibited an amazing ability to withstand the onslaughts of forces that have eroded into their arts and culture, by virtue of their physical distance from the Motherland.
Numerous organisations and societies were formed during their comparatively short stay in this country.
Many have evaporated in time but some have shown great resilience, in spite of the odds.
One of these is the Merebank Tamil School Society, which has done sterling work amongst the Tamil speaking Hindus in the area these past fifty years.
Merebank is one of the last outposts of a traditional and stable community of Indians.
The community of Merebank has shown a rare spirit of cultural survival combined with progressive political thought.
MTSS and the community It serves should be a beacon light to all peoples of South Africa in matters Involving dedication, resolve and deep rooted tradition.
It is time to pay tribute to all those dedicated souls, past and present who for little or no gain, sacrificed their energies and time to serve the community of Merebank through MTSS these last 50 years.
Their names will be etched in the history of Merebank.
May God bless them all!”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (47)
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (71)
உ.வே.சா.: புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள ஒலியமங்கலம் என்னும் ஊரிலுள்ள சாசனத்தால் ஒல்லையூர் என்பது அவ்வூர் என்று தெரிகின்றது.
தென்னாட்டில் உள்ள பூதப்பாண்டி என்னும் ஓர் ஊர் பண்டைக்காலத்தில் இவன் பெயரால் அமைக்கப்பெற்றது போலும்!
+ஒளவை: பூதப்பாண்டியன் பாண்டியர்க்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனச் சிறப்பிக்கப்பட்டான்.
இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளாவாள்;
இருவரும் நல்லிசைப்புலமையும் ஒருவரையொருவர் இன்றியமையாக் காதலன்பும் உடையர்.
ஓரேருழவர் (193)
+ ஒளவை: இவரது இயற்பெயர் தெரிந்திலது. ஈரம்பட்ட செவ்வி வாய்ப்பைக் கண்ட உழவன் அச்செவ்வி நீங்குவதற்குள் உழுவித்தற்கு விரைகின்றான்; அவன்பால் உள்ளது ஓரேரே; அதனால் அவன் நெஞ்சு துடிக்கிறது.
அத்துடிப்பினைத் தலைமகன் நெஞ்சத் துடிப்புக்குவமை கூறிய சிறப்பால் “நெஞ்சே! ஈரம் பட்டசெவ்விப் பைம்புனத்து ஓரேருழவன் போலப் பெருவிதுப்புற்றன்றால், நோகோயானே” (குறுங்.131) இவரைச் சான்றோர் ஓரேருழவரென்றே அழைப்பாராயினர்.
ஒளவையார் (87)
=ஒளவை: ஒளவையார் சங்க மருவிய நல்லிசைப் புலவர் கூட்டத்துச் சிறந்தோருள் ஒருவர்.
பெண்பாற் புலவருள் தலைமை பெற்றவர்.
தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரிலும் இவர்பெயரைக் கேட்டறியாதார் ஒருவரும் இலர்.
இவர் பெயரால் தமிழகத்து வழங்கும் செய்திகள் பலவாகும்.
அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182)
ஒளவை: கடலில் கலம் செலுத்திப் பிற நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தலும் மீன்பிடித்தலும் முத்துக்குளித்தலும் பண்டைப் பாண்டியர் மேற்கொண்டிருந்த தொழில், பாண்டி வேந்தரும் இத்தொழிலுக்கு வேண்டும் ஆதரவு புரிந்து வந்தனர்.
தமிழரசன் கடாரம் சாவகம் சீனம் முதலிய நாட்டின்கண் கலம் செலுத்திப் படைகொண்டு சென்று ஓரிடத்தில் அரசு முறை நிறுவிய செய்தி கடாரம் முதலிய நாட்டு வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
அங்கனம் சென்ற காலங்களில் குமரரும் பரத குமரரும் செல்வது வழக்கம்.
பாண்டிநாட்டு அரச குமரர் இளம் பெருவழுதி இளமையிலேயே கற்பவை கசடறக் கற்று அக்கல்விக்குத் தக ஒழுகும்மேம்பாடு உடையவன்.
அவன் அவ்வப்போது பாடிய பாட்டுக்கள் சான்றோர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன.
அத்தகைய நலம் வாய்ந்த அவன் கடல் கடந்து செல்கையில் கடல் கவர்ந்து கொண்டது,
அதனால் அவனைச் சான்றோர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று குறித்தனர்.
கபிலர் (8)
உ.வே.சா: கபிலர் என்னும் பெயருள்ள முனிவர் சிலர் உண்டு அவருடைய பெயர் இவருக்கு இடப்பட்டது,
அது விளங்கவில்லை.
இவர் அந்தணர், வேள்பாரியின் நண்பர்.
+ஒளவை: சேரமான் கடுங்கோவாழியாதன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் கூறப்படுவார்.
திருமாலிடத்தில் மிக்க ஈடுபாடு உடையவன்.
இவன் கபிலருக்கு நூறு ஆயிரம் காணம் பொன் தந்து, நன்றா வென்னும் குன்றேறி நின்றுதன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து ஏழாம் பதிகத்தால் அறியலாம்.
கபிலர் சங்கத் தொகை நூல்களில் உள்ள பல பாட்டுக்களைப் பாடியவர்,
பாரியின் உயிர்த்தோழர்.
இவரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளல்களும், வேந்தர்களும் பலர் பாண்டிய நாட்டில் பிறந்த அந்தணர்.
குறிஞ்சித்திணை பாடுவதில் நிகரற்றவர்.
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (168)
உ.வே.சா.: இப்பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் எனவும் காணப்படுகிறது.
=ஒளவை: சாத்தனார் என்பது இவரது இயற்பெயர்; கதப்பிள்ளை என்பவர் இவருடைய தந்தை.
கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் (219)
உ.வே.சா. =ஒளவை:
68.காவிரிப்பூம்பட்டினம் மதுரை உறையூர் முதலிய நகரங்களில் சதுக்கபூதம் கோயில் பண்டைய நூல்கள். கருவூரும் பண்டைப் பெரு நகரங்களில் ஒன்று, அந்நகர்க்கண் இருந்த பெரும் சதுக்கத்தில் பூதத்தின் பெயர் கொண்ட சான்றோர் ஒருவர் உண்டு அவரைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்பர்.
இப்பெயர் 400 ஆண்டுகளுக்கு முன்னும் மக்களிடையே வழங்கியிருக்கிறது என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் (278)
உ.வே.சா.: காக்கை பாடினியார் நச்சென்னையார் எனவும் சில பிரதிகளில் பெயர் காணப்படுகிறது.
காரி கிழார் (6)
உ.வே.சா.: இவர் வேளாளர். இவருக்கு இப்பெயர் ஊரான் வந்தது.
காரி என்பது தொண்டை நாட்டில் உள்ளதோர் ஊர் இப்பொழுது இராமகிரி என்று வழங்கப்படுகின்றது.
=-ஒளவை:
காவற்பெண்டு (86)
உ.வே.சா:
இவர் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என்று தெரிகிறது.
காவற்பெண்டு செவிலித்தாய்; இவர் பெயர் காதற்பெண்டு எனவும் காணப்படுகிறது.
+ஒளவை: காவற்பெண்டு என்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து வாழ்க்கைப்பட்டவர்.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57)
உ.வே.சா: காரிக்கண்ணகனார் எனவும் வழங்கும்; பெயர் உறுப்பான் வந்தது போலும்; காரி திகரிக்குருவி. இவர் வாணிகர்.
குடபுலவியனார் (18)
ஒளவை: புலவியன் என்பது இவரது இயற்பெயர்.
குடநாட்டவராதலால் குடபுலவியனார் எனப்பட்டார்.
புலவியன் என்பது விரிந்த அறிவுடையவனென்னும் பொருள்பட வருந் தமிழ்ச் சொல்லாதலால் புலத்தியனென்னும் வடசொற்றிரிபெனக் கூறுவது மடமையாகும்.
குடவாயிற் கீரத்தனார் (242)
உ.வே.சா: குடவாயில் சோழநாட்டிலுள்ளது. சோழர்களின் தலைநகராக விருந்ததும் தேவாரம் பெற்ற சிவஸ்தலமுமான ஓர் ஊர்.
சாத்தந்தையார் (80)
உ.வே.சா: சாத்தந்தையார் இவர் திணைமொழி ஐம்பது நூலாசிரியரான கண்ணன் சேந்தனாருடைய தந்தையார்.
+ ஒளவை: சாத்தந்தையார் என்பது சாத்தன் தந்தையார் எனப் பொருள்படும்.
ஆயினும் ஈண்டு இயற்பெயராகவே உள்ளது.
சாத்தன் தந்தை என்பது பொருளாயின் இவரது இயற்பெயர் கூறப்படவேண்டும்.
இவரால் பாடப்பட்டவன் சோழன் போரவைக்கோப்பெருநற்கிள்ளி.
சேரமான் கணைக்கால் இரும்பொறை (74)
+ஒளவை: இவனது தலைநகர் தொண்டி என்பது. மேனாட்டுயவனராகிய பிளைனி முதலியோர் இதனைத் திண்டிஸ் என்று வழங்குகின்றனர்.
இந்நகரத்தில் பெரியகோட்டை இருந்தது.
தண்காற் பூட்கொல்லனார் (326)
உ.வே.சா: தண்கால் பாண்டி நாட்டில் உள்ள ஊர்.
திருத்தண்கால் என இப்போது வழங்கும்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
பூண் கொல்லனார் ஆபரணம் செய்யும் தட்டார்.
இவருக்கு இப்பெயர் ஊராலும் தொழிலாலும் வந்தது.
இப்பெயர் தங்கால்கோவலனார் எனவும் தங்கால் பூட்கோவலனார் எனவும் உள்ளது.
+ஒளவை: தங்கால், விருதுநகர் அருகில் ஓர் ஊர் இதனைத் தடம் புனல்கழனித் தங்காள் (சிலப்பதிகாரம் மதுரை 23.3,18) என்று இளங்கோவடிகள் சிறப்பிப்பார்.
இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது.
இதனை ராசராசப் பாண்டி நாட்டு மதுராந்தகவளநாட்டு கருநீலக் கொடி நாட்டு திருத்தங்காள் (ARNo.564/1922) என்று கல்வெட்டுக்கள் கூறும். மாறவன்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இவ்வூரிலுள்ள (ARNo. 546/1922) கூறுவதனால் இவ்வூர் கல்விவளம் சிறந்த நல்லோர்களைக் கொண்டிருந்ததை அறியலாம்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment