அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 124
நெட்டிமையாரும், நெடுங்கழுத்துப் பரணரும்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த திரு டி. வடிவேலு அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“It is with great pleasure that accede to a request for a message by the Merebank Tamil School Society on the occasion of its Golden Jubilee Celebrations.
I wish to offer my warmest congratulations which the Society so richly deserves.
To reach the fiftieth anniversary in the life of any organisation is by any standard a great achievement.
No doubt the officials and members of the Society will look back to the fifty years as a successful and formulative period during which the Society grew in stature, decorum and dignity.
Today the Society is a highly respected organisation, for it has built up over the years a distinct credibility in the Indian community in general and the Tamil community in particular.
It was that great philosopher, poet and moralist of all times.
Thiruvalluvar, who said:
“Those who are conscious of their duty and act with a perfect goodness will regard as natural all that is good”.
It is with admiration that we look upon the officials of the Society especially Mr M.R. Moodley, Its able and competent Chairman, as well as all its members through whose unselfish and untiring efforts the Tamil community has been provided with something of which all Tamils could justifiably be proud today.
The premises owned by the Society is proving an excellent venue for weddings because it offers facilities which are seldom obtainable elsewhere.
Possessing the financial muscle the Society has been hovering on the verge of Introducing a notable project of sending students to India to study and qualify in the various religious and cultural disciplines of the Tamils.
Because of a lack of satisfactory response and suitable support from the authorities in India, I am given to understand that this laudable venture has been delayed.
It is sincerely hoped that this will not lead to any despondency on the part of the Society because with God’s blessing any sincere pursuit must meet with the desirable success.
You have done and are doing a very highly commendable work and on an occasion such as this it is most befitting to say.
We salute you, Merebank Tamil School Society!”
திரு. பி. இராஜரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“I deem it an honour and privilege to send this message of sincere good wishes to the M.T.S.S. on this historic occasion of their golden jubilee.
In expressing not only my sincere congratulation to the officials past, and present of the society on reaching a worthy milestone.
I want to convey to them the gratitude and appreciation of the community on the foresightedness and their intense desire to promote and preserve our culture.
Indian culture is highly respected by nations throughout the world.
It is but fitting therefore, that Indians wherever we are, should realise and enjoy our cultural heritage.
The M.T.S.S. who are setting out to preserve this heritage have tried in some small way to mirror the glory and beauty of culture and thereby strengthening the bonds of mutual love, understanding and respect.
My heartiest congratulations once again to officials past and present, who through their laudible efforts have contributed to the meaningful culmination of the Tamil Schools Society’s Golden Jubilee.
I am indeed proud to be a part of that community.
In the words of the great Pundit Nehru:
“I am proud of that great inheritance that has been and is ours, and am conscious that, too, like all of us, am a link in that unbroken chain which goes back to the dawn of history in the immemorial past of India.
That chain I would not break, for I treasure it and seek inspiration from it.”
I sincerely hope that you will be blessed with untiring enthusiasm and zest to continue to propagate the Tamil Culture and the arts for many years to come.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (48)
தாமப்பல் கண்ணனார் (43)
உ.வே.சா: தாமப்பல் காஞ்சிபுரத்தின் பக்கத்தில் தாமல் ஒரு ஊர் உள்ளது. இவர் அந்தணர்.
# ஒளவை: தாமர்ப் பல்கண்ணனார். தாமல் எனும் ஊரினர்.
இது காஞ்சிபுரத்துக்கு மேற்கிலுள்ளது.
இவ்வூரிலுள்ள கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தாமர் (sbi.vol.5. 1004, ARNo. 139/6 796) என்று கூறுகின்றன.
இவர் பெயர் தாமர்ப்பல் கண்ணனார் என இருக்க வேண்டும் எனத் துணியலாம்.
ஏடெழுதியோர் தாமப்பல் கண்ணனார் என எழுதி விட்டனர்.
இவ்வூர் இப்போதும் தாமல் என்று வழங்குவது நோக்கி இவ்வாறு கொள்ளப்பட்டது என்று கொள்க.
தாயங்கண்ணனார் 36
உ.வே.சா: தாயங்கண்ணனார் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்ற புலவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
தும்பி சொகினனார் (249)
உ.வே.சா.: x ஒளவை: தும்பிசேர் கீரனார்
துறையூர் ஓடைகிழார் (36)
உ.வே.சா.: துறையூர் ஓடைகிழார். இப்பெயர் துறையூர் அரிசில்கிழாரெனவும் பிரதியில் உள்ளது.
+ஒளவை: துறையூர் என்பது காவிரிக்கரையின்கண் உள்ளதோர் ஊர்.
தொண்டைமான் இளந்திரையன்
உ.வே.சா: தொண்டைமான் இவன் காஞ்சி நகரத்தில் இருந்த பாடுதலில் வல்லவன், ஒளவை கச்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையாண்ட வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர்.
தொண்டையர் என்றும் வழங்குவர். தொண்டைமான் இளந்திரையன் மிக்க சிறப்புடையவன்.
இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர் திரைவரு மரபின் உரவோன் உம்பல் (பெரும்பாண். 29-32) என்பதனால், இவன் முன்னோர் திரைகடல் வழியாக போன்று தொண்டை நாட்டிற்கு வந்தனர் என்றும், அவர் வழித்தோன்றல் இவன் என்றும் அறியலாம்.
சோழனுக்கும் நாக நாட்டு வேந்தன் பீலிவளைக்கும் பிறந்து கடலில் இவன் திரையில் மிதந்து கரை அடைந்தான் என மணிமேகலை கூறுகிறது.
பின்பு அவன் அக்காரணத்தால் திரையன் எனப்பட்டான் என்றும், வேந்தன் மகன் என்றற்கு அடையாளமாகத் தொண்டைக்கொடி அணிந்திருந்தது பற்றி அவன் தொண்டைமான் ஆகினான்.
அவன் ஆண்ட நாடு தொண்டை நாடு ஆயிற்று என்றும் கூறுவர்.
நெட்டிமையார் (9)
உ.வே.சா: நெட்டிமையார் பெயர் உறுப்பால் வந்தது. நெடுமை இமையார் நெட்டிமையார்.
x ஔவை: நெட்டிமையார், நெடுந்தொலைவில் உள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் கண்ணை இமை எனச் சிறப்புரைத்த நயம் கருதி இவருக்கு இப்பெயர் உண்டாயிற்று.
கண்ணிமை நீண்டு இருத்தலால், ஒருவர் பெயரை வைத்துக் கொள்வார் என்பது மக்கள் இயல்பன்று.
நெடுங்கழுத்துப் பரணர்(291).
உ.வே.சா.: இப்பெயர் உறுப்பால் வந்தது போலும்.
x ஒளவை: நெடுங்களத்துப் பரணர், இவர் நெடுங்களம் என்னும் ஊரினர்; இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் தென்கரையில் உள்ளது;
பரணர் என்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்துவதற்கு பண்டையோர் இவரது ஊராகிய
நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப் பரணர் என்று வழங்கினர்.
ஏடுகளில் நெடுங்களத்து எனக் குறைபட்டுப் பின்னர் நெடும் கழுத்தெனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரித்ததன் மேலும் திரிபடைவதாயிற்று.
இத்தொடரினை நோக்கின், பலரும் சீத்தலைச்சாத்தனார் என்பது பற்றிப் பல பொருள் கூறியது போல, இவர் நெடியகழுத்து உடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணர் என உறுப்புப் பற்றிப் பெயர் பெற்றனர் எனக் கூறினர்.
இது பற்றிய விரித்த ஆராய்ச்சி உரை, உரைகாரரின் “சங்ககாலப்பரணர்கள்” (செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 23, பக்கம் 481) என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நெடும்பல்லியத்தனார் (பாட்டு 64)
உ.வே.சா : பல்லியம் என்பது பல வாத்தியங்களைக் குறிக்கும்; நெடிய பல வாத்தியங்களை உடைமையின் இவருக்கு இப்பெயர் வந்தது.
– ஒளவை: நெடும்பல்லியத்தன் என்னும் பெயர் ஆண் பாலர்க்கும், நெடும்பல்லியத்தை என்பது பெண் பாலர்க்கும் வழங்கும்.
இப்பாட்டின் முதல் அடியில் ஆகுளி, பதலை எனப் பல்லியங்களைத் தொகுத்தலில் இவர் நெடும்பல்லியத்தனார் ஆயினர் எனக் கருதுவோரும் உளர்.
நெடும்பல்லியத்தை என வருதலை நோக்கிய கருத்து சிறப்புடையதாகத் தோன்றவில்லை.
இவர்பற்றி வேறு குறிப்பு எதுவும் காணப்படவில்லை.
பரணர் (4)
உ.வே.சா: பரணர் பாடிய பாடல் ஒவ்வொன்றிலும் யாரையேனும் புகழாமலும் அக்காலத்தில் நிகழ்ந்த கதை எதையும் அமையாமலும் இரார்.
= ஒளவை:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183.
உ.வே.சா.: சிலப்பதிகாரக் கதாநாயகனாகிய கோவலனைக் கொல்வித்தவன் இவனே.
= ஒளவை: கோவலனைக் கொலைபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியனையும் இளங்கோவடிகள் வடவாரியப் படை கடந்து தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின்தேவி தன்னுடன் அரைசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்பர்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் (1)
ஔவை: பெருந்தேவனார் என்பது இயற்பெயர், தமிழில் பாரதத்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
இப்போதுள்ள பாரத வெண்பா என்னும் நூல் இவர் பாடியது என்று கூறுவர்.
இது உரையிடையிட்டபாட்டு. சங்கத் தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர்.
இதனால் இவர் கடவுட் கொள்கை நிறைந்த உள்ளம் உடையவர் என்பது புலனாம்.
இவர்பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கிறார்.
நற்றிணையில் உள்ள பாட்டு, திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்களால் உரை காணப்பட்டுள்ளது.
பிசிராந்தையார் (67)
ஒளவை: பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோர் ஊர்.
ஆந்தையார் என்பது இச்சான்றோரது பெயர்.
பிசிராந்தையாரால் நெறிப்படுத்தப் பெற்ற பாண்டியன், அறிவுடை நம்பி இன்பத்துறையில் எளியவாய் இருந்து மக்கட் பேறு இன்றியிருந்து பின்னர் அதனைப் பெற்று இன்புற்றான்.
பிரமசாரி / பிரமனார் (357)
ஒளவை: இவரைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
பிரமனார் என்ற இவர் பெயர் இடைக்காலத்து மக்களுக்கு வழங்கியதென்பது திருமழபாடிக் கல்வெட்டொன்று செம்பியத்தரையகோன்மகன்பிரமன் (S.I.Ins.Vol V No.648) என்பதனால் தெரிகிறது.
புல்லாற்றூர் எயிற்றியனார் (213)
உ.வே.சா: புல்லாற்றூர் எயிற்றியார் எனவும் பாடம் உண்டு/
ஒளவை: புல்லாற்றூர் காவிரி வட கரையில் உள்ளது.
புறத்திணை நன்னாகனார் (176)
ஒளவை: புறத்திணை நன்னாகனார் தொண்டை நாட்டவர். புறத்திணைப் பாட்டுக்கள் பாடுவதில் சிறந்திருந்தமை பற்றிச் சான்றோர் இவரைப் புறத்திணை நன்னாகனாரெனச் சிறப்பித்திருக்கின்றனர்.
பூங்கணுத்திரையார் (277)
உ.வே.சா.: உத்தரையார் என்பது இயற்பெயர்.
+ ஔவை: பூங்கண் உத்திரையார், பூங்கண் காவிரி வடகரையில் உள்ள ஒரு ஊர் எனக் கல்வெட்டால் அறிகிறோம்.
(AR No.153/1932) இவரது இயற்பெயர் உத்திரை என்பது.
இது ஆதிரை என்றாற்போல பிறந்த நாளால் வந்த பெயர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment