POST: 2022-09-15T09:31:19+05:30

தினசெய்தி 14.9.2022 பக்கம் 3

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்
பேரறிஞர் அண்ணாவின் 114-ம் பிறந்த நாள் பெருவிழா

15.9.2022

அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் 15.09.2022 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் கொண்டாடப்படவுள்ளது.

விழா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்
திரு. மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறவுள்ளது.

’அண்ணா’ எனும் தலைப்பில் முனைவர் இரா. கண்ணன் மூத்த அரசியல் அலுவலர், ஐக்கிய நாட்டு அவை, விழாப் பேருரையாற்றவுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்
ந. அருள் நோக்கவுரையாற்றவுள்ளார்.

பேரறிஞர் அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

கருத்தரங்கில் ’கலையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் திருத்தணியில் உள்ள தளபதி கே. வினாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இரா. வேதநாயகி,

’திரையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு. பிருந்தா சாரதி,

’ஏடாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் இந்தியக் கடலோரக் காவற்படை இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கவிஞர் இனியவன், ’

தமிழாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் முனைவர் து. ஜானகி, ’

நாடாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் முனைவர் கோ. பன்னீர் செல்வம், ’

புகழாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் முனைவர் நா. சுலோச்சனா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிறுவன வெளியீடுகள் 30-50 விழுக்காடு கழிவுத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாள் வியாழக் கிழமையன்று பள்ளி/கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

1. தாய் மண்ணுக்குப் பெயர் சூட்டிய தனையன்
2. மாணவர்களுக்கு அண்ணா,
3. அண்ணாவின் மேடைத் தமிழ்
, 4. அண்ணா வழியில் அயராது உயர்வோம்
, 5. அண்ணாவின் வாழ்விலே ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும்

1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,
2. அண்ணாவின் மனித நேயம்,
3. அண்ணாவின் தமிழ் வளம்,
4. அண்ணாவும் தமிழ்ச் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சும் போட்டியும் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூபாய் 5,000 இரண்டாம் பரிசு ரூபாய் 3,000 மூன்றாம் பரிசு 2,000 வழங்கப்படும் மேலும், சிறப்புப் பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 2,000 வழங்கப்படும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *