அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 126
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
எழிலேட்டில் இடம்பெற்ற ‘INDIAN CULTURE’ என்னும் தலைப்பிலான கட்டுரை:
“The culture of India grew on a firm faith that nothing remains except truth.
It prepared the people to face brutal foreign invasions with calm and composure.
The Indian tradition believes that nothing except truth remains.
It also says that truth has a tendency to conquer. It is not passive.
In India today it appears that we have gradually lost our love for truth – a love which formed such an integral part of our life.
Even under the yoke of foreigners and suppression this love was aflame all through our history.
It is in fact this love which helped us above all to appreciate the value of dharma and light and to live by it with passion and trust.
The relationship between truth and culture is profound, for culture is mainly a social and individual reflection of truth.
It is the image of truth in the daily business of man.
It is a vow to reach the highest light through the very turmoils and oddities of life.
In our day culture has lost its appeal to the masses, since its intrinsic relationship with truth has often been ignored by its adherents.
The true touches of life have been denied to it. It is under these fresh conditions that the forces of ruin operate.”
எழிலேட்டில் இடம்பெற்ற ‘THEOSOPHY’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை:-
“Theosophy is the body of truths which forms the basis of all religions and which cannot be claimed as the exclusive possession of any.
It offers a philosophy which renders life intelligible, and which demonstrates the justice and the love which guide its evolution.
It puts death in its rightful place, as a recurring incident in an endless life, opening the gateway to a fuller and more radiant existence.
It restores to the world the science of the spirit teaching man to know the spirit as himself and the mind and body as his servants.
It illuminates the scriptures and doctrines of religions by unveiling their hidden meanings and thus justifying them at the bar of intelligence as they are over justified in the eyes of intuition.
The essence of Theosophy is the fact that man, himself a spark of the divine, can know the Divinity whose life he shares.
As an inevitable corollary to this supreme truth comes the fact of the brotherhood of man.
The divine life is the spirit in everything that is, from the atom to the archangel?
the grain of dust could not exist were God absent from it: the lofty seraph is but a spark from the eternal Fire which is God.
Sharers in the one life all form one brotherhood.”
திரு. அருணாச்சலா என்பவரின் வாழ்த்துச் செய்தி:-
“MAN, KNOW THYSELF! All the wisdom of bygone ages, all the wisdom that unborn ages shall ever discover, is summed up in this one phrase.
Three words – yet they cover all life! I defy you to find three others that shall better this divine council to man.
They were inscribed in marble over the most sacred Mystery-temple of ancient Greece, they were written down on palm-leaves by the Sage – Rishees of Indian antiquity, and they were silently echoed during high initiations within the Great Pyramid itself.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (51)
அரிய நூல்கள் எல்லாம் கொடுத்துதவிய கானாடுகாத்தான் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்களைப் போற்றும் வகையில் தமிழ்ச்சங்க நூலகத்திற்குப் பெத்தாச்சி புகழ் நிலையம் என்னும் பெயர் சூட்டினார்.
அரிய நூல்கள் பலவும் அங்கு இருந்தன.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 1916 அன்று செந்தமிழ்க் கல்லூரி தொடங்கப் பெற்றது;
அதுவே வளர்ந்து கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி என்ற பெயருடன் எட்டு வகுப்புக்கள் கொண்ட உயர்-தொடக்கப்பள்ளியாகவும், பின்னர் உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளி, இராதாகிருட்டிணன் தொடக்கப்பள்ளி என இரண்டாகவும் செயலாற்றியது.
திக்கற்ற மாணவர் இல்லம் ஒன்று தொடங்கி ஏழை மாணவர்களுக்கு உண்டி உடை உறையுள் மூன்றும் வழங்கப்பெற்றன.
சங்கங்களின் நோக்கங்களைச் செயலாக்க தமிழ்ப்பொழில் என்னும் திங்களிதழ் 1925இல் தொடங்கப்பெற்றது.
1928இல் சங்கத்தில் கட்டணமில்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது
ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழியிலும் பேராற்றல் பெற்ற உமாமகேசுவரர் தஞ்சையில் கூடிய நீதிக்கட்சி மாநாடு ஒன்றில் அக்கட்சித் தலைவர்கள் டாக்டர் நாயர், சர் பிட்டி தியாகராய செட்டியார், சஞ்சீவி ரெட்டி ஆகியோர் பேசிய சொற்பொழிவுகளை அவர் அவர் பேசி முடித்த பின், குறிப்பு கூட இல்லாமல் தமிழில் கருத்து வேகம் குறையாமல் மொழிபெயர்த்தது வியந்து பாராட்ட தக்கதாக இருந்தது.
மேலும் அப்போதைய சென்னை மாநில ஆளுநரும் மிகச்சிறந்த விரைந்த பொழிவாளருமாகிய சர். ஆர்தர் ஹோப் தஞ்சை ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் அரைமணி நேரம் விரிவுரை ஆற்றினார்.
ஆளுநர் பேசி முடித்ததும், குறிப்பு எதுவும் இல்லாமல் ஒரு கருத்தைக் கூட விட்டுவிடாமல் அதே அரை மணி நேரத்தில் அழகிய தமிழில் ஆளுநர் பேசிய முறையிலேயே மொழிபெயர்த்துப் பேசிப் பாராட்டுதலைப் பெற்றார்.
இந்நிகழ்ச்சி தமிழர்களின் ஆங்கில அறிவுக்கும், மொழிபெயர்க்கும் திறனுக்கும் நினைவாற்றலுக்கும் சான்று பகர்கிறது.
1934ஆம் ஆண்டு சூன் திங்கள் 14ஆம் நாளில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் தலைமை ஏற்றார்.
1938ல் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது கரந்தைப் புலவர் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.
சிவனை மறவாத சைவப் பற்று கொண்டவர் உமாமகேசர்; இருப்பினும் பிற சமயங்களை எதிர்க்கவோ மறுக்கவோ செய்யாமல் அதனுடைய வளர்ச்சிக்கும் பலவகையிலும் 6 உதவினார்.
மாறுபட்ட கருத்துக்களை மதித்து போற்றும் இயல்பு தமிழவேளுக்கு உண்டு
1938இல் இராசகோபாலச்சாரியார் கட்டாய இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்துத் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் தஞ்சையில் வரவேற்பளித்துச் சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
அதுமாத்திரமன்றி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், நாவலர் சோமசுந்தரபாரதியர் ஆகியோருடன் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு எங்கணும் ஈடுபட்டார்.
தமிழர்களின் பண்பாடு கலை நாகரிகம் தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தமிழ் வளர்ப்பதையே பணியாகக் கொண்டார்.
ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சை அல்லது திருச்சியில் தொடங்க வேண்டுமென்று தமிழவேள் உமாமகேசுவரனார் கல்வியமைச்சர் சிவஞானம் பிள்ளையோடு சேர்ந்து அரும்பாடுபட்டார்.
1925ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இம்முயற்சியை செயலாக உருப்பெற்ற நிலையில், செட்டிநாட்டு அண்ணாமலை அரசர் பெரிதும் முயன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தாமே தோற்றுவிப்பதாகச் சொல்லி அரசின் ஒப்புதலைப் பெற்றதால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உமாமகேசுவரனாரின் தோற்றுவிக்கும் முயற்சி கருக்கொண்டதே தவிர உருப்பெறவில்லை.
கரந்தைத் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை
அந்தக் காலத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றுவதற்குப் பட்டமோ பட்டயமோ பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
ஏனென்றால் அப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கம் பிரவேச – பால – பண்டிதத் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சி பெற்றோர்க்குப் பண்டிதர் பட்டம் வழங்கியது.
பின்னரே சென்னைப் பல்கலைக்கழகமும், சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியும் வித்துவான் படிப்பை அறிமுகப்படுத்தின.
அவ்வாறன்றி நல்ல தமிழறிஞர்களை அடுத்துப் பாடம் கேட்டுத் தமிழறிவு பெற்றவர்களும் ஆசிரியர் ஆகலாம்;
அந்த ஆசிரியர் ‘இவர் என்னிடம் தமிழ் பயின்றார்; ஆசிரியராகும் தகுதி இவருக்கு உண்டு’ என்று சான்றளித்தாலே போதும்;
கரந்தைக் கவியரசு எந்தக் கல்லூரியிலும் பயின்றவர் அல்லர்.
தஞ்சை தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய தந்தையார் காலமாகவே தம் ஊராகிய மோகனூருக்குச் சென்று உழவுத்தொழில் பார்த்தோடு அந்த ஊரின் கணக்கராகவும் மணியக்காரராகவும் பணியாற்றினார்.
தொழிலும் உறைவிடமும் மோகனூரில் அமைந்தாலும் கரந்தைக்கு அடிக்கடி வந்து தமிழ்ப்புலவர் வேங்கடராமன் பிள்ளையிடம் தமிழ் பயின்றார்.
இலக்கணம் – மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை என்பவர் காவல்துறை துணை ஆய்வாளர்; அவர் மோகனூரை அடுத்திருந்த கண்டர்கோட்டையில் காவல்பணியேற்றபோது அவரிடம் தமிழ் இலக்கண-இலக்கியங்களை நன்கு கற்றுத் தெளிந்தார்.
பின்னர் கோனார்ப்பட்டு என்ற இடத்தில் கோனார் பள்ளியில் சில காலம் ஆசிரியராக அலுவல் பார்த்தபோது, மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் தொடர்பும் அதன் வழியே பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், அரசஞ் சண்முகனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், நாவலர் சோமசுந்தர பாரதியார். இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார் ஆகியோரோடு நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டன.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் கல்வி நிலையம் தொடங்கியபோது ஆசிரியப்பணியை மேற்கொண்டார்.
நாவலர் நாட்டாருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது
சில ஆண்டுகளுக்குப் பின்னாள் தூய பேதுரு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப்பணிபுரிந்தார்.
அப்போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தெய்வச்சிலையார் உரை பதிப்பிக்கும் பொறுப்பை மேற்கொண்டார்.
1932ல் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியரானார்.
கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழாவின் போது ‘கரந்தைக் கவியரசு’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
ஓய்வுக்குப் பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
சிலப்பதிகாரத்தை நாடகமக்கினார்; எண்ணிறந்த பாடல்களையும் இயற்றினார்.
“வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!
மன்னிய மூவேந்தர் தம் மடிவளர்ந்த மகளே!”
என்ற அவரது தமிழ்த்தாய் வணக்கப்பாடல் அக்காலத்தில் தமிழகம் தாண்டியும் சில தலைமுறைகள் ஒலித்தது.
நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர்.
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து அகநானூற்றுக்கு உரைகண்ட பெரும்புலமையாளர்.
அவரது நுண்மாண் நுழைபுலத்திற்கு ஒரு சான்று:-
டாக்டர் உ.வே. சாமிநாதையர் முதலில் பதிப்பித்து வெளியிட்ட சீவகசிந்தாமணி என்று யாவரும் அறிவர்.
ஆனால் அறிந்திராத செய்தி ஒன்று உண்டு. ‘
பெயர் விழையான்’ என்னும் புனைபெயரில் அப்பதிப்பை நுட்பமாக ஆராய்ந்து பல திருத்தங்களைத் தெரிவித்தவர் கவியரசர் என்றும், அதன் பின்னரே, ஐயர் அவர்கள் கவியரசர் பற்றித் தெரிந்துகொண்டார் என்றும் அவரே இந்நிகழ்ச்சியைத் தம்மிடம் கூறினார் என்றும் ஒளவை பதிவு செய்திருக்கிறார்.
கரந்தையில் முறையாக அவருக்கு இலக்கண இலக்கண இலக்கியங்களை கற்பித்த முதல் முதன்மை ஆசிரியர் கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை ஆவார்.
ஒளவை தெய்வச்சிலையார் உரையுள்ள ஓலைச்சுவடியைப் பெயர்த்தெழுதும் பணியில் அமர்த்தப் பெற்றபொழுது, ஐயாற்றுக் கல்லூரியிலிருந்து அவ்வப்போது கரந்தைக்கு வந்து ஔவை எழுதியவற்றைச் சரிபார்த்துத் திருத்தம் செய்வதும், அவருக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்குவதும், இலக்கண நுட்பங்களை விளக்கிச் சொல்லுவதும் கவியரசர் பணிகளாயின.
ஒளவை பதிற்றுப்பத்துக்கு உரை எழுதுவதைக் கேள்வியுற்ற கவியரசர் தாம் எழுதி வைத்திருந்த பதிற்றுப்பத்து உரையை கொடுத்துதவினார்.
இலக்கணமாயினும், இலக்கியமாயினும் அலுப்புத் தட்டாத வகையில் பாடம் நடத்துவார்.
ஒளவையவர்களின் கற்பிக்கும் பாணியும் கவியரசரின் நடையை அடியொற்றிருக்கும்.
கவியரசர் சிறந்த நகைச்சுவையாளர்;
மாணவர் மனம் உவக்கும் நல்லாசிரியர்;
தமிழுலகம் நன்கறிந்த பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன்னும் கவியரசரின் மாணவர் ஆவர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment