அருளின் காணொளி உரை
இணைந்தோம்! உயர்ந்தோம்!!
அன்பார்ந்த நண்பர்களே!
உலகம் வியக்க என்னுடைய இனிய நண்பர் சாய்ஷேஷன் 08.07.2022 வெள்ளிக் கிழமையன்று பொன்னாளான இன்றைய நன்னாளில் சென்னை மித்ராவினுடைய ரோட்டரி கிளப்பினுடைய தலைவராக முடிசூட்டப்பெறுகிறார்.
எனக்குப் பெரிய மகிழ்ச்சி!
சென்னை கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் நானும் சாயும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இணைந்துப் படித்து, பிறகு அவர் வைணவக்கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்று பல நிதிசார் நிறுவனங்களில் பணியாற்றி வாழ்க்கையில் பல வெற்றி முனைகளை ஈட்டி இன்றைக்கு சிறந்த நிலையில் உள்ளார் என்பதை நான் நெஞ்சார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களே! “
திருக்குறள் செல்வன்” என்ற பட்டத்தினை அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பெற்றவராவார்.
திருக்குறளைத் தோய்ந்து படித்தவர் மட்டுமல்ல எப்படி எந்தக் குறளை இன்றைய உலகத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமென்பதை தன்னுடைய நுண்மான் நுழைபுல அறிவாற்றலாலும் தன்னுடைய செழுமையான ஆங்கிலத்திலும் எடுத்துச் சொல்லும் பாங்கறிந்தவர்.
நான் முனைந்து படித்த “Study on Translations and Adaptations of Shakespeares plays in Tamil” என்ற என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டை மிக நுட்பமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவர வேண்டும் என்று நான் முனைந்த பொழுது அதை சீரும் சிறப்புமாக தானே எழுதுகிற பாங்குடன் பல பகுதிகளை திருத்திக் காட்டிய திறமை வாய்ந்தவர்.
நான் பல நேரங்களில் தமிழியல் சிந்தனைகளை அவரிடம் எடுத்துச் சொல்லும் பொழுது உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் வரைந்து காட்டும் திறனாளர்.
நண்பர்களே!
இணைந்துப் படித்தோம்!
இணைந்து நடந்தோம்!
இன்றைக்கு அவர் உயர்ந்து நிற்கின்றார்!
உயர்ந்து நின்றாலும் என் இனிய நண்பர் ஆவார்.
சாய் வாழ்க! பல்லாண்டு வாழ்க!
டாக்டர் நந்தகுமார் அவர்களே!
நீங்கள் பெருமைப்பட வேண்டும்!
உங்களுடைய அவையில் ஒரு சிந்தனையாளரான சாய்ஷேஷன் உங்கள் அருகில் வைத்திருக்கின்றீர்கள்.
சென்னை மித்திரா இன்று முதல் பல மடங்கு உயரவிருக்கின்றது.
வாழ்க சென்னை மித்திராவினுடைய Choice,
சாய் எப்பொழுதும் நாங்கள் கைகுலுக்கி பாராட்ட கடமைப் பட்டிருக்கிறோம்.
வெல்க உங்கள் புகழ்.

Add a Comment