POST: 2022-09-25T10:03:31+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 128

உயிருக்கு உயிரான தொல்காப்பியம்

முனைவர் ஔவை அருள்,

1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-

திரு. சி. குப்புசாமி அவர்கள் எழுதிய ‘KAMBAN, Monarch of Tamil Poetry’ என்னும் தலைப்பிலான கட்டுரை:

“Kamban ranks among the selected few of the greatest scholars in the Tamil Language.

His immortal masterpiece, the Ramayana, is an epic poem written in clear classic Tamil.

When one hears the name Kamban one’s soul is immediately transported to a sacred spot wherein one may conjure up pictures of the Ramayana story painted rich on a broad canvas.

The Ramayana is an ageless story which in the beginning of history was transmitted by word of mouth from one person to another for many generations.

It was eventually recorded in epic form by the Sage Valmiki during the Vedic period in the pre-Christian era.

Valmiki’s epic poem assumed such sacredness in the eyes of Hindus that for hundreds of years no poet dared to render it in a regional language for fear of being condemned for ‘mutilating it.

A thousand years later circa 900 AD – Kamban became the first poet to render the story of Ramayana in Tamil verse on a grand style.

Indeed Kamban is renowned for re-creating it in epic form.

Kamban in his time was lovingly referred to as Kavi Chakravarthi or the Monarch of Tamil Poetry and his name has continued to this day to command respect and admiration.

By his immortal work Kamban not only brought the popular and divine story within reach of the Tamil reading public, but also enriched the Tamil Language as no one had done before or has since.

Before Kamban’s time Valmiki Ramayana was accessible to the elite few who could read Sanskrit.

The lay Hindu knew the Ramayana well but was not in a position to appreciate poetic nuances and deeper meaning contained in the Epic.

Kamban opened the way for poets in other regional languages to undertake writing of the story in a mother tongue.

Kamban had heard Valmiki read by scholars in public places and as a youth had followed their discourses with interest.

He was therefore able to explore the rich fields of Valmiki and return there from with a plentiful harvest of the best and noblest thoughts in literature.

In his version whilst preserving the main story he brought considerable originality by adding fresh character delineations, by introducing emotional scenes poignantly and by lending more colour to the course of events through his intimate knowledge of the natural environment of the South.

He put familiar words to new use and freely employed Sanskrit words wherever necessary resulting in a unique richness of expression.

The Tamil Language may be considered to have risen to its full stature, finding its full strength in the poetry of Kamban.

Kamban’s poem consists of about 11 000 stanzas as against 24 000 couplets of the Master.

Who is this man Kamban?
How did he become so famous?

We are told that he was found somewhere in a street as a waif by a couple who had been longing for a child and that he was brought up by them.

His guardian was an Ovachan by profession whose duty it was to blow the conch at break of day in a temple near Thanjavur.

At quite an early age he seemed to have acquired a sound knowledge of Tamil and Sanskrit.

He is said to have mastered almost all the main Tamil works of the Sangam Period and imbibed what was best in the thoughts of the older authors.

He was engaged as a Poet Laureate at the Court of the Chola kings who treated him with reverence.

So great was the regard one of the kings had for him that he gave the poet a palanquin as a mark of Royal favour.

Wherever the poet went he travelled in a palanquin.

From here he performed the noble task of discoursing on literary topics besides the Ramayana.

People would flock to catch a glimpse of their great national poet.”
——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (52)

பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார் திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்களில் நல்ல புலமையும், வேதாந்தத்தில் ஆழ்ந்த பற்றும் உடையவர்.

வேங்கடசாமி அவர்கள் தொடக்கக் கல்வியை உள்ளூரில் முடித்தார்.

அக்காலத்திலேயே தொடக்கப் பள்ளி இறுதி வகுப்புக்கு அரசினர் தேர்வு உண்டு; ஒவ்வொரு பாடத்திலும் வேங்கடசாமி முதன்மையாகத் தேறிப் பரிசு பெற்றார்.

உறவினர் ஒருவரின் அறிவுரைப்படி மதுரைத்தமிழ்ச் சங்கப் பண்டிதப் படிப்பை ஆசிரியர் எவர் உதவியுமின்றித் தனிமுறையில் தாமே பயின்றார்.

அப்பொது அச்சுப்படி கிடைப்பது அரிதாகையால் நூல்களைத் கையால் எழுதிக் கொண்டு 6ஆண்டுப் படிப்பை 3ஆண்டில், ஒவ்வோர் ஆண்டும் தேர்வெழுதி ஒவ்வொன்றிலும் முதல்வராக வெற்றியுடன் முடித்து, 1905இல் தமது 23ஆம் அகவையில் பண்டிதப் பட்டம் பெற்றுப் பாண்டித்துரைத் தேவர் அவர்களால் பொற்கடகம் பூணப்பட்டார்.

திருக்காட்டுப்பள்ளிக்கு வருகை தந்திருந்த காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் அவர்கள் இச்செய்தியறிந்து வேங்கடசாமியைத் தாம் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து வரச்செய்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

திருச்சி பிஷப் ஈபர் கல்லூரியிலும் பல்கலைகழகத்திலும் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு சென்னைப் பல்கலைக்கழகம் கரந்தைப் புலவர் கல்லூரிக்கு ஏற்புடைமை வழங்கிய அந்த நேரத்தில், அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்று ஊதியம் பெற்றுக் கொள்ளாமல் பணியாற்றினார்.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை துணைத் தலைவராக நாட்டாருடன் இணைந்து பணியாற்றினார்.

நாட்டார் நல்ல உரைகாரர் மட்டுமல்லர், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும் ஆவார்.

அதனால், 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாவலர் என்னும் பட்டம் வழங்கப் பெற்றுச் சிறப்பிக்கப் பெற்றார்.

நாவலர் திருச்சியில் பணியாற்றியபோது ஒருநாள் மங்கிய இருட்டில் சட்டை அணியாது போர்வை மட்டும் போர்த்தியிருந்த ஒருவர் அவரை பார்ப்பதற்காக அவர் வீட்டுக்கு வந்தார்.

வந்தவரை வணங்கி வரவேற்று நாற்காலியில் அமரச்செய்து விருந்தோம்பினார்.

வந்தவர் சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் சில ஐயப்பாடுகள் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்ட பின் நன்றி கூறிப் பரபரப்புடன் விரைந்து திரும்பிச் சென்றார்.

அவர் யார் தெரியுமா?

அவர் தான், ஆங்கில அடக்கு முறையின் காரணமாகப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!

புதுச்சேரியில் தங்கியிருந்தபோது ஆங்கில ஆட்சியாளரின் கண்களில் படாமல் தமிழகம் வந்து புதுவை திரும்பியிருக்கிறார்.

நாவலர் நாட்டார் மணிமேகலைக்கு உரையெழுதிய கடைசிக் காலத்தில் அவரை வருத்திய நோய் கடுமையாகவே, அவர் சொல்லச்சொல்ல அவர் மகளார் வித்துவான் சிவ பார்வதி அம்மையார் எழுதிவந்தார்.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டும் தொடர முடியவில்லை.

அப்போது யசோதர காவியத்துக்கு ஒளவை வரைந்திருந்த உரையைக் கண்டு மகிழ்ந்த நாட்டார் விரும்பிய வண்ணமே, கடைசி நான்கு காதைக்கும் ஔவை உரையெழுதித் தம் ஆசிரிருக்குற்ற நன்றிக்கடனை புலமையுடன் திருப்பிச் செலுத்தினார்.

நாட்டார் சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு ஆகியவற்றிக்கு உரையெழுதினார்.

திருக்குறள், கம்பராமாயணம், பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுக்கும் உரைகாண எண்ணம் கொண்டிருந்தும், கடும் மூச்சிரைப்பு நோயினால் துன்புற்றமையால் அது முற்றுப்பெறவில்லை.

ஒரு நிகழ்ச்சி: 29.8.1925 அன்று மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி கல்லூரித் தலைமையாசிரியர் மகாமகோபாத்தியாய பிரம்மஸ்ரீ, வே. சாமிநாதையர் தலைமையில், ரா. இராகவையங்காருக்கு ‘மகாவித்வான்’ பட்டமும், மு.கதிரேசன் செட்டியாருக்குப் ‘பண்டிதமணி’ விருதும் வழங்கும்விழா; சிறப்பு அழைப்பாளர், பண்டித ந.மு.வே. நாட்டார் அவர்கள், அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தமது ஊராகிய நடுக்காவேரியிலிருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டுத் தஞ்சை, வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியே இரண்டு நாள் பயணத்திற்குப்பின் மேலைச்சிவபுரி போய்ச்சேர்ந்தார்.

(பண்டிதர் அ. கிருட்டிணசாமி நாயுடு கோவையிலிருந்து மதுரைக்கு நடந்தே சென்று செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பண்டிதம் பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அக்காலத்தில் நன்கு மதித்தப்பெற்ற முன்னணிப் பேராசிரியர்களாகிய நாவலரும், கவியரசரும், ஒளவையவர்களுக்கு ஆசிரியர்களாக அமைந்ததும், ஒளவை அவர்கள்பால் கொண்டிருந்த நன்றியுணர்வும் அறிந்து போற்றத்தக்கவை.

பண்டித எல். உலகநாதப் பிள்ளை
தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளில் பணிபுரிய அரசால் முதன்முதலாக அமர்த்தப்பட்ட திரு. கோபிநாதராவ் அவர்களுடன் நட்புக் கொண்டு, அவர் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தபோது அவருக்கு உறு துணையாக இருந்தவர்;

கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆராய்ச்சியில் தலைசிறந்த முதல் தமிழ்ப்பெரும் புலவராகத் திகழ்ந்தவர்.

திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் பணி ஓய்வுக்குப் பின்னர் தஞ்சை சரசுவதி மகாலில் தமிழ்த்துறைப் பொறுப்பேற்றுக்கொண்டவர்;

1912 காலகட்டத்தில் சென்னை மயிலாப்பூரிலிருந்து வெளிவந்த விவேகபோதினி இதழில் கபிலர் என்ற தலைப்பில் சங்க இலக்கியச்சான்றுகளுடன் தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரை எழுதியவர்; ‘

கன்றும் கனியுதவும்’ என்னும் சிறந்த உரைநடை நூலின் ஆசிரியர்;

1921-இல் சென்னை நகருக்கு வந்திருந்த ஆங்கிலப் பேரரசின் பட்டத்துக்குரிய இளவரசர்பால் அந்நாளில் 500 ரூபாய் மதிப்புள்ள சிங்கமுகத்துடன் வட்டப் பொற்பதக்கம் கோத்து வேலைப்பாடுமிக்க பொற்கடகமும் பொன்னாடையும் பரிசாகப் பெற்றவர்.

கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியின் தலைமையாசிரியர் சிவ குப்புசாமியின் இயற்றமிழ் ஆசிரியர்.

ஓலைச்சுவடி, கல்வெட்டுப் பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அவற்றைப் படிக்கவும் படியெடுக்கவும் ஒளவை துரைசாமியாருக்கும் சிவ குப்புசாமியார்க்கும் மிகச்சிறந்த பயிற்சியளித்தவர்.

மன்னார்குடி நா.சோமசுந்தரம் பிள்ளை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்களில் மன்னார்குடி நாராயணசாமிப் பிள்ளையும் ஒருவர்;

மன்னார்குடியில் அப்போதிருந்த பின்லே கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இவர் ஓய்வு கிடைத்த போதெல்லாம் சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று தமிழ்ப்பொழிவுகள் ஆற்றுவது வழக்கம்.

இவருடைய பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தமிழ் பயிலத் தொடங்கினார்; அவருடைய திருமகனார் ஆகிய சோமசுந்தரம் பிள்ளை தம் தந்தையாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார்; அவர் தந்தை எதிர்பாராது இயற்கை எய்தவே தமது 16 ஆம் அகவையில் அக் கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றினார்; அக்கல்லூரி மூடப்பட்டபின்பு காவல் துறையில் துணை ஆய்வாளராகச் சேர்ந்து தமது 55-ஆம் அகவை வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்கள் மிகுந்து காணப்பட்ட ஊர்களில் காவல்துறை இவரைப் பணியமர்த்துவது வழக்கம்.

அங்கெல்லாம் சட்டத்தை நிலைநாட்டி அமைதி பேணினார்.

ஒருமுறை கள்வர் தலைவன் ஒருவன் இவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டிவிட்டான்;

இருந்தாலும் அவனை விடாது இவர் பற்றிக்கொள்ளவே மற்றவர்கள் வந்து பிடித்து விட்டார்கள்;

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உணர்வு திரும்பியதும் தாம் எப்போதும் வைத்திருக்கும் பையைத் தேடினார். ‘

அந்தப் பையிலே என்ன புதையல் வைத்திருக்கிறாய்’ என்று காவல் தலைவர் கேட்டபோது ‘தொல்காப்பியம்’ என்றார்; ‘

அதனால் உனக்கு என்ன பயன்’ என்று கேட்டபோது, ‘

என் வாழ்க்கையில் கடமையை அறிவேன்; தமிழை அறிவேன், இப்போது கடமை செய்யும் ஆற்றலற்றேன்; என்றும் தமிழை விட்டுப் பிரியேன்’ எனக் கூறிப் பையை வாங்கித் தலையணைக்கடியில் வைத்துக் கொண்டார்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *