POST: 2022-10-02T10:38:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 129

காவல் ஆய்வாளர் உருவில் கண்ட தொல்காப்பியர்

முனைவர் ஔவை அருள்,

1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-

திரு. சி. குப்புசாமி அவர்கள் எழுதிய ‘KAMBAN, Monarch of Tamil Poetry’ என்னும் தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்சி…:

“Kamban’s personality made a profound effect not only on the people of his day but also on the generations that followed.

In a small village called Nattarasankottai in the Ramnad district Kamban’s mortal remains lie beneath a modest slab which is familiar to everyone in the locality and more so to the children.

When a child is ready for admission to school for the first time the father would take him to his spot and make him go round the slab and then drink a mouthful of water rendered sacred by having some of the dust round the stone dissolved therein.

The idea was that the child may prosper well if he commenced his education under such auspices as the drinking of the wisdom of the great national poet.

As a lover of nature Kamban exhorts the agriculturists in his YER EZHUPADU – Seventy Verses in praise of the Plough

ஏரெழுபது to be proud of their calling and whips them into activity.

He was a friend of most of the minor poets of his day to whom he gave every encouragement.

He had heard that Ottakoothar had written the Ramayana in Tamil verse but being disappointed with his effort decided to consign it to the flames.

Kamban dissuaded him from doing so and offered to incorporate a portion of it in his own work.

Kamban also wrote the Sadakopan Arandadi which was done to please the God at Srirangam as it was a request that Sadakopa or Nammalvar should be given due credit for his devotion.

It is here that Kamban sought the Lord’s approval to write the Ramayana.”

இசைப் பேரரசி சேலம். எஸ். ஜெயலட்சுமி அவர்கள் எழுதிய ‘Ancient Tamil Music’ என்னும் கட்டுரை:

“The Tamils were extra-ordinarily brilliant in analysing and applying to life the fundamental principles of nature, governing human life, law and order of the society, the divine nature of fine arts, and their bearing on human mind.

The Music of ancient Tamils bear ample testimony to the highly evolved state of society and the country in those times.

The development of a Society is judged by the art, culture and wisdom of the people living in it, it is marvellous that Tamils even in those early days laid a strong foundation for the language, music dance and other arts and developed them on unshakeable scientific lines.

Ilango Adikal calls Tamil Music as “asaya marapu”, aliya marapu, the unfaltering tradition, the indestructible tradition.

Hence we find the Tamil language youthful and beautiful and the music of Tamil Nadu ever alive and most scientific.

MUSIC AS SCIENCE:

Tamils treated music as a great science.

Sound (OLI) is the primordial energy of the universe.

All the sciences and arts are born from ‘nadam.

That is why it is called ‘nadabrahmam‘.

Modern science says that the origin for speech and melody is the same.

The speech varies in accent and the melody varies in tones.

Tolkappiam, the Tamil Grammar had said this two thousand years ago.

This means the duration for the musical notes could be prolonged according to the science of music.

The Tamils measured the musical notes with mathematical calculation even as they did in astronomy and astrology and divided them into various pann groups.

They also studied the different feelings and emotions they brought forth and set them to songs to make concrete musical forms.

They not only dealt with the apparent twelve semi-tones of the universal standards but also applied the use of minute particles of the musical notes to bring about a supersonic effect on the listener.

We can certainly claim that the basic science of music is still with the Tamils while others have adapted the system modifying the expressions according to their region and language.

The change was due to outside influences also.

It is a fact that non Tamils are mostly unaware of the basic principles of Music and its science.

Hence there are always lots of controversies between one group and the other.

This is because the Tamil classics are not understandable to them.

Tamil classics are indeed Latin and Greek even to Tamils!

Then what to say about others!

Although Sanskrit, Telugu and other languages claim to possess lots of musical information their books mostly belong to the medieval period and they fail to comprehend the basic principles and science of Music.

Eminent orientalists like Sir William Jones expressed their inability to get at the right sources for ack of proper translations of these ancient classical works.”

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (53)

மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளை…. தொடர்ச்சி…

எட்டுத்தொகை நூல்கள் அச்சேறுவதற்கு முன்பே, அவற்றைத் தம் கையினால் எழுதிப் படித்துச் சங்க இலக்கியங்களில் மிகப் பெரும் புலமை பெற்றார்;

தம் கையால் எழுதிய அகநானூறு, நற்றிணைப் படிகளைப் பின்னத்துச் நாராயணசாமி ஐயருக்கு உதவினார்;

பன்னிரு திருமுறைகளையும்: சைவ சித்தாந்த தூல்களையும் ஐயந்திரிபறக் பயின்றவர்;

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் உண்மை ஞானி என்று மதிக்கப் பெற்ற நாகை வீரப்பச் செட்டியார் என்ற பெரியாரிடம் ஒரே முறையாக மூன்றாண்டுகள் சித்தாத்த நூல்களைக் கற்றுத் தெளிந்தார்;

‘பெயின்ஸ் கிராமர்’ என்று சொல்லப்பட்ட ஆங்கில விதிகளை மனப்பாடமாகக் கூறுவார்:

வடமொழிப் புலவர்களுடன் நெருங்கிப் பழகி, வடமொழி இலக்கண அமைப்புகளையும், ஆகமங்களையும்,கருத்துக்களையும் ஆராய்ச்சிக்கு வேண்டிய அளவில் தெரிந்து வைத்திருந்தார்.

அவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அத்தனை பேருடனும் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

டாக்டர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தெரல்காப்பியச் சொல்லதிகார குறிப்புக்குத் தமிழ்ப்பொழிலில் தொடர்ந்து இவர் எழுதிய மறுப்பில் அமைந்திருந்த இலக்கண நுட்பங்களைக் கண்ணுற்ற டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், ‘இத்தகைய இலக்கண நுட்பங்கள் எல்லாம் மறுப்புரைகளாக எழுதுவதை விட, தனியே ஓர் அரிய உரை எழுதுவது நலமாகும்’ எனத் தெரிவித்தார்.

பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஒருமுறை நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருந்த போது,

‘பொதிய மலையில் அகத்தியரைக் காணச் சென்று அடிச்சுவடு எதுவும் கண்டிலேன்;

ஆனால், எதிர்பாராத இடத்தில் அவருடைய எதிர்பாராத உருவத்தில் தொல்காப்பியரைக் கண்டேன்,

பட்டுக்கோட்டையில் ஒரு காவல் ஆய்வாளர் உருவில்’

என இவருடைய புலமையைப் போற்றிப் புகழ்ந்தார்.

இவரது தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி மறுப்புரைக்கு மறுப்புகள் வரவே, அவற்றிற்கும் திரு நாராயண ஐயங்கார் எழுப்பிய தடைக்கு விடையெழுதியதும், அதைத்தொடர்ந்து, ஒளவை துரைசாமியார் அந்தப் புலமைப் பூசலில் கலந்துகொண்டு கட்டுரை வரைந்ததும், முன்னரே குறித்துள்ளோம்.

தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

“தொல்காப்பியம் பொருளதிகாரமும் பேராசிரியர் உரையும் மயிலாப்பூர் பிஎஸ் உயர்தரக் கலாசாலை தலைமைத் தமிழாசிரியர் பிரம்மஸ்ரீ துரைசாமி ஐயர் அவர்களால் ஏட்டுப்பிரதிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து மன்னார்குடி இயற்றமிழ் ஆசிரியர் திரு நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், இன்டர்நேஷனல் சாது அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

1935.”
பின்னத்தூர் அ நாராயணசாமி ஐயர் தமது நற்றிணை முகவுரையில்

“எட்டுத்தொகையுள் முதலாவதாக அமையப்பெற்ற நற்றிணையை சோதித்து அச்சிட வேண்டும் என்னும் விருப்புற்றிருக்கையில் என் நண்பரும் மன்னார்குடி ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் குமாரரும் போலீசில் உத்தியோகம் வகித்து வருபவருமாகிய ஸ்ரீமத் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் எனக்குப் பொருள் முட்டுறாதவாறு வேண்டிய அளவு உதவி செய்து சுவடியைத் தருவித்துச் சோதிக்கும்படி செய்தார்கள்” என்று பதிவு செய்திருக்கிறார்.

அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
ஔவையவர்களை உரைவேந்தர் என்று இனங்கண்டு உலகுக்கு அறிவித்த புறநானூற்று ஓலைப்படிக்கு உரிமையாளர்: அச்சுவடியை அவரது பணிப்புரையின்படி சேவைநாட்டார் படியெடுத்து வைத்திருந்தார்.

அதுவே உரைவேந்தர் ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.

இராசாளியார் அவர்கள்
* அரித்துவாரமங்கலம் பெருநிலக்கிழார்; பெரும்புரவலர், கல்வியாளர்.

* தமிழ்,ஆங்கிலம், சமற்கிருத மொழிகளில் புலமைபெற்றவர்.

இசையையும், சித்த மருத்துவத்தையும் பொழுதுபோக்காகக் கொண்டவர்,

*தமது சிற்றூரில் முடிசூட்டுவிழா நூலகம் என்ற ஒரு பெரிய நூல்களைத் நூலகத்தை நிறுவி, அதில் அரிய ஓலைச் சுவடிகள் திரட்டி வைத்து, அந்நாளைய ஆங்கிலேய ஆளுநரைக் கொண்டு திறப்பித்த மிகப்பெரும் செல்வாக்குமிக்கவர்.

*1910-களில் தஞ்சைத் தமிழ்ச் சங்கம் செயலற்று முடங்கியதால், வித்தியா நிகேதன் என்ற தமிழமைப்பை நிறுவித் தலைமையேற்று நடத்தியவர்.

(இச்சங்கத்தில் உறுப்பினரும், மண்டபம் சுங்கத்துறை அலுவலரும், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரின் இளவலுமான திரு த.வே. பஞ்சாபகேசன் பி.ஏ. அவர்கள், இராசாளியாருடன் கருத்து வேறுபாடு காரணமாக விலகி, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தார்.

* 1912-ல் குன்னூரில் ஒரு நூல்நிலையம் நிறுவி அதற்கு ரூபாய் 10,000 நிதியளித்ததுடன், அவ்விடத்தில் தொல்காப்பியர் சிலை நிறுவியவர்,

*தில்லி மாநகரில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், மன்னரிடமே குற்றப்பரம்பரைச் சட்டத்தை ஒழிக்கவேண்டி நேரிடையாக வாதாடி வெற்றிக்கு வித்திட்டவர்.

புலவர் பெருமக்கள் பலரையும் குறிப்பாகச் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரின் பிணி நீக்குவித்து உயிர்காத்து ஆதரித்தவர்.

சோழவந்தான் அரசஞ் சண்முகனார் இராசாளியார் பற்றி…

“….. யான் தொல்காப்பியப் பாயிர விருத்தி முதலாயின அச்சிடுமாறு கருதித் தஞ்சை சென்று வேலை தொடங்கிய நேரம் முயற்சி நின்றது.

அக்காலை எனக்கு மிக்க நண்பரும் வடமொழி, தென்மொழி, ஆங்கில நூல் ஆராய்ச்சியே பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் உடையாரும், வைத்திய நூல் பயிற்சியும் அனுபவமும் உடையாரும், பிரபு சிகாமணியும் வள்ளலும் ஆகிய அரித்துவாரமங்கம் கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் இன்னும் தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையும் கருதாமல், என்னைத் தம் ஊருக்கழைத்துச் சென்று, தேக வன்மை பெறுதற்காக எனக்குப் பல மருத்துவர்களைக் கொண்டு பரிசோதித்து மருந்து அளித்தும், வேதமுணர்ந்த அந்தணரைக் கொண்டு கிரக சாந்தி முதலியன செய்தும் பிணிதீர்த்து, வெண் பொற்காசு முந்நூற்றின் மேலாக என்னிமத்தஞ் செலவு செய்ததூஉமன்றி யப்போது தேகவன்மை யெனக்கின்மையாற் றமக்குள்ள இன்றியமையாதன வாகிய உலகியல் பலவற்றையும் கருதாமற் றாமே பரிசோதித்தும், பிறரைக் கொண்டு பரிசோதித்தும், இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவி புரிந்தார்கள்”

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *