POST: 2022-10-07T10:39:18+05:30

செல்விருந்து ஓம்பல் விழா

30.09.2022 (வெள்ளிக்கிழமை)
தலைமைச் செயலாகம் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு நடைபெற்ற வழியனுப்பு விழாவில் முனைவர் அருள் நிகழ்த்திய உரை

திறமையும் பெருமையும் வாய்ந்த கனிவுமிகு பெருந்தகை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் உயர்திரு அரசு செயலாளர் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

தமிழ் வளர்ச்சித் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக
(25.09.2019 – 30.09.2022)
அரசு செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குறியவர்.

இவர் காலத்தில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கியவர்.

எங்கள் மனங்கவர் ஈசன் மகேசன் காசிராஜன் அவர்கள்

கடந்த ஐந்து திங்களாக தமிழ் வளர்ச்சித் துறையில் என்னை ஆற்றுப்படுத்துவதிலும், எப்படி ஒரு பணியை செவ்வனே செய்யவேண்டும் என்பதையெல்லாம் பல நேரங்களிலும் எனக்கு அறிவுரை வழங்கிய பெருந்தகையாவார்கள்.

அவர்களுடைய கடின உழைப்பு எந்தெந்த இடங்களில்
பணிவு, கனிவு, துணிவு போன்றவற்றையெல்லாம் அடுக்கிச் சொல்லி கற்றுத்தந்த பாடங்கள் எனக்கு பசுமரத்தாணிபோல பதிந்திருக்கிறது.

ஏற்றுக்கொண்ட எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டுமென்று கடந்த 3 ஆண்டுகளாக செம்மையாக நடத்திச்சென்ற சுவடுகளையெல்லாம் மறக்கமாட்டோம்.

ஆங்கிலத்திலே ஒரு அற்புதமான மேற்கோள் ஒன்று உள்ளது .

I Propose to be busy as Long as I live

அது போல ஓய்வு என்பது இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் 60 அகவை என்பதால் தான் தவிர மற்றப்படி

அவரைப்போன்ற இலக்கிய ஆர்வமும்,சமய ஆர்வமும் அவருடைய தந்தையார் புகழ்பெற்ற இதே தமிழ் வளர்ச்சித் துறையினருடைய அரசு செயலாளராக திகழ்ந்த
திரு. எஸ். டி. காசிராசன் ஆவார்.

அவருடைய தந்தையாரைப் போல பல பணிகள் அவருக்கு காத்திருக்கிறது.

அரசில் இன்னும் பல பணிகளுக்கு அவர் அழைக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்.

வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பல பணிகள் செய்து மிளிர்வார் என்று சொல்லி அமைகிறேன்.

நன்றி

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *