POST: 2022-10-13T09:15:41+05:30

வில்லுக்கு வெற்றி மாலை !

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுமே களிப்பே
என்ற தொடருக்குப் பொருள் விளக்கத்தை
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக
வில்லிசை வேந்தர் கலைத்திலகம்

சுப்பு ஆறுமுகம் பதுமவிருது
பெற்றிருப்பதைக் கண்டு
நாடு எல்லையில்லாத
மகிழ்ச்சிப் பெருமிதம் பெறுகிறது ! .

கலைவாணருக்குப் பிறகு
கையில் ஏந்திய வில்லிசையால்
பல்லாயிரம் மக்களை
களிப்புக்கடலில் மிதக்க வைத்த

அண்ணல் சுப்பு ஆறுமுகம்
பன்முகத்திறமை வாய்ந்த
பண்பாட்டுத் திலகம் ! .

” வில் ” என்றால்
கவிஞர் சுப்பு ஆறுமுகம்
அரங்கம் ஆகுபெயராக்கியே
இவரை அழைக்கிறது ! .

வில்லும் – சொல்லும் வெல்க !
பல்லாண்டு பாடுவோம் !.

என்று அன்று ( 26 1 2021 ) எழுதிய
என்னால்

வில்லிசை வேந்தர் மறைந்தார்
என்று நினைக்க முடியவில்லை .

அண்ணா என்று வாய் குளிர எப்போதும்
அழைத்த வில்லிசை வேந்தரின் மறைவுக்கு
எவரும் ஆறுதல் சொல்ல முடியாது ! .

அழுத கண்களோடு

ஒளவை நடராசன்
10 10 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *