POST: 2022-10-24T10:30:01+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 76

முத்தமிழறிஞர் கலைஞர் முத்தமிழுக்குச் சூட்டிய மகுடங்கள்

முனைவர் ஔவை நடராசன்

முத்தமிழறிஞர் கலைஞர்,

தமிழ்நாட்டின் அரசியல், சமுதாய வரலாற்றில் மட்டுமன்றித் தமிழ் வளர்ச்சி வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் என்பதில் கலைஞர் நிகழ்த்திய பெருஞ்சாதனை காலத்தால் நிலைத்துப் புகழ்பெறும் வல்லமை பெற்றதாகும்.

அக்காலப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில், கலைஞரின் பராசக்தியில் இடம்பெற்ற நீதிமன்ற வசனங்களும், மனோகரா வசனமும், பூம்புகார் திரைப்படத்தில் கலைஞர் வழங்கிய உரையும்தான் போட்டிக்குரிய தலைப்புகளாகத் திகழ்ந்தன.

நாங்கள் கல்லூரிக் காலத்தில் கனித்தமிழிலும் கவிதையிலும் களித்து மகிழ்ந்து வானம்பாடிகளாய் திரிந்த காலத்தில், வகுப்பறையில் பாடங்களாய்க் கற்ற சங்க இலக்கியங்களைத் திரைப்படத்தில் வசனமாக்கி தமிழ்நாட்டின் வீதிகள் தோறும் உலாவரச் செய்த வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே!

மனோகரா திரைப்படத்தில் புறநானூற்று வீரத்தையும் கலிங்கத்துப்பரணி காட்டும் வீரமாண்மையும் கதை மாந்தனின் பண்பினை எடைபோடப் பயன்படுத்தும் பாங்கு எழுத்தாளர் எவரிடத்தும் அமையாத பேரழகு.

அந்தப்பகுதி

“புருஷோத்தமரே!

புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே!

மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே!

மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!

குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே!

என் தாய்… அன்பின் பிறப்பிடம்,
அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம்.

அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன்.

இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன்.

துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை, தடுத்துக் கொள்ளும் உமது சாவை.

தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும்.

புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே!

புறமுதுகு காட்டி ஓடும்!

கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே!

கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்!

ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்!

ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்!

ஏன், அவமானமாக இருக்கிறதா?

என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்?

ஏ ராஜ விக்ரகமே!

பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான்.

அப்படியே நில்லும்!

அசையாமல் நில்லும்!

இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன்.

இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன்.

முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்!

அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.”

காலமெல்லாம் தமிழையும், தமிழரையும் காப்பதற்காகக் கண்ணுறங்காமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை ‘அடிமுடி’ கண்டுரைக்க வல்லார் எவரே!

I நாடகங்கள்:

பிரேத விசாரணை
பலிபீடம் நோக்கி 1948,
பெரிய இடத்துப்பெண் 1948
இளைஞன் குரல் 1952
பரப்பிரம்மம் 1953
மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
நடுத்தெரு நாராயணி
(குறும் புதினம்) 1953
மணிமகுடம், 1955,
வெள்ளிக்கிழமை, 1956
அனார்கலி, 1957
சாக்ரடீஸ் 1957
தூக்கு மேடை,1957,
உதயசூரியன், 1959
உன்னைத்தான் தம்பி
ஒரே முத்தம்
காகிதப்பூ, 1966
சாம்ராட் அசோகன்
சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம்
நானே அறிவாளி, 1971
ரோமாபுரி பாண்டியன் 1974
புதையல், 1975
சேரன் செங்குட்டுவன், 1978
பரதயாணம் 1978
வான்கோழி, 1978
புனித இராஜ்யம் 1979
திருவாளர் தேசியம்பிள்ளை
நச்சுக் கோப்பை
நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
மந்திரிகுமாரி
வாழ முடியாதவர்கள்

II வரலாற்றுப் புனைவுகள்

ஒரே ரத்தம், 1980
தென்பாண்டிச் சிங்கம் 1983
‎பொன்னர் சங்கர் 1988
பாயும்புலி பண்டாரக வன்னியன் 1991

III புதினங்கள்

அரும்பு
சாரப்பள்ளம் சாமுண்டி
(குறும் புதினம்)
சுருளிமலை

IVசிறுகதைத் தொகுதிகள்

கிழவன் கனவு; 1945;
சங்கிலிச்சாமியார், 1945
பிள்ளையோ பிள்ளை 1948
தப்பிவிட்டார்கள் 1952
தாய்மை 1956
நளாயினி (1956)
கண்ணடக்கம், 1957,
(கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது)
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977, 1982, 1991
ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979
பழக்கூடை 1979
முடியாத தொடர்கதை 1982
தேனலைகள் 1985
சிறுகதைகளின் பட்டியல்
அபாக்கிய சிந்தாமணி
அமிர்தமதி
அய்யோ ராஜா!
ஆட்டக்காவடி
ஆதரிக்கிறார்
ஆலமரத்துப்புறாக்கள்
இரகசியம்
ஏழை
கங்கையின் காதல்
கடைசிக்கட்டம்
கண்டதும்காதல் ஒழிக!
கண்ணடக்கம்
காதல்கடிதம்
குப்பைத்தொட்டி
சங்கிலிச்சாமி
சந்தனக்கிண்ணம்
சபலம்
சித்தார்த்தன் சிலை
சுமந்தவள்
செத்தவள்கதை
தப்பவில்லை
தப்பிவிட்டார்கள்
தொத்துக்கிளி
தாய்மை
திடுக்கிடும் கதை
நடுத்தெரு நாராயணி
நளாயினி
நுனிக்கரும்பு
நெருப்பு
பனங்குலை
பாலைவனரோஜா
பிரேத விசாரணை
புகழேந்தி
புரட்சிப்படம்
முந்நூறு ரூபாய்
வாழமுடியாதவர்கள்
விஷம் இனிது
வேணியின் காதலன்

V கவிதைத் தொகுதிகள்

கவிதையல்ல 1945
அண்ணா கவியரங்கம் 1968
கவியரங்கில் கலைஞர் 1971
கலைஞரின் கவிதைகள் 1977
கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
கவிதை மழை – மூன்று தொகுதிகள் 2004
காலப்பேழையும் கவிதைச்சாவியும்

VI சிறையிலிருந்தபொழுது

1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு)
வாழ்வெனும் பாதையில் – கவியரங்கக் கவிதைகள்

VII உரைநூல்கள்

சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம் 1967
குறளோவியம் 1968, 1985
சங்கத் தமிழ் 1987
திருக்குறள் உரை 1996
தொல்காப்பியப்பூங்கா, 2003
இலக்கிய மறுபடைப்புகள்
தாய்
பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)

VIII தன்வரலாறு

இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர் கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.

IX பேட்டிகள்

கையில் அள்ளிய கடல் 1998
சொற்பொழிவுகள்
தலைமையுரை,
போர்முரசு
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
பெரியார் பிறவாதிருந்தால்

X கட்டுரைகள்

உணர்ச்சிமாலை 1951
திராவிட சம்பத்து 1951
கருணாநிதியின் வர்ணனைகள், 1952,
களத்தில் கருணாநிதி 1952
பெருமூச்சு 1952
விடுதலைக்கிளர்ச்சி, 1952,
அகிம்சா மூர்த்திகள், 1953,
அல்லிதர்பார், 1953,
நாடும் நாடகமும், 1953,
ஆறுமாதக் கடுங்காவல்,
இந்தியாவில் ஒரு தீவு 1978
இளைய சமுதாயம் எழுகவே
இருளும் ஒளியும்
இலங்கைத் தமிழா, இது கேள்! 1981
பேசுங்கலை வளர்ப்போம் 1981
யாரால்? யாரால்? யாரால்? 1981
இனமுழக்கம்
உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
சரித்திரத் திருப்பம்
சுழல்விளக்கு,
மயிலிறகு 1993
மலரும் நினைவுகள் 1996
முத்துக்குவியல்
பூந்தோட்டம்,
துடிக்கும் இளமை
பேசும்கலை வளர்ப்போம்

XI சிறுகுறிப்புகள்

சிந்தனை ஆழி 1953
கருணாநிதியின் கருத்துரைகள் (முதல் தொகுப்பு) 1967
கலைஞரின் கருத்துரைகள் 1971
கலைஞரின் உவமை நயங்கள் 1972
சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் ( முதல் பதிப்பு) 1978
கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
கலைஞரின் நவமணிகள் 1984
கலைஞரின் சொல்நயம் 1984
கலைஞரின் சின்ன சின்ன மலர்கள், முதல் பதிப்பு 1994
கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
கலைஞரின் குட்டிக்கதைகள்
கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
கலைஞரின் முத்துக்குவியல்
கலைஞரின் நவமணிகள்

XII கதை, வசனம்

பராசக்தி மலர், 1953
மனோகரா,
நாம், 1953,
திரும்பிப்பார், 1953,

XIII பயணக்கட்டுரைகள்

இனியவை இருபது

XIV கடிதங்கள்

கலைஞர் கடிதம் தொகுதி -1 1986
கலைஞர் கடிதம் தொகுதி -2 1986
கலைஞர் கடிதம் தொகுதி -3 1986
கலைஞர் கடிதம் தொகுதி -4 1986
கலைஞர் கடிதம் தொகுதி -5 1986
கலைஞர் கடிதம் தொகுதி -6 1986
கலைஞர் கடிதம் தொகுதி -7 1986
கலைஞர் கடிதம் தொகுதி -8 1986
கலைஞர் கடிதம் தொகுதி -9 1986
கலைஞர் கடிதம் தொகுதி -10 1986
கலைஞர் கடிதம் தொகுதி -11 1996
கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

கலைஞர் அவர்கள் 1968 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் முரசொலி நாளிதழ் வாயிலாக தொண்டர்களுக்கு எழுதிய 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக கடிதங்களை தொகுத்து கௌரா ராஜசேகர் அவர்கள் வெளியிட்டுள்ளமை பெருமைக்குரியது.

XV சட்டமன்ற உரைகள்

1957 முதல் 2018ஆம் ஆண்டு வரை கலைஞர் சட்டமன்றத்தில்
ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

– முனைவர் ஔவை நடராசன்
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *