முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன்,
அய்யாவு குடியிருப்பு,
சென்னை – 29.
பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி அவ்வை அவர்களுக்கு,
பணிவான வணக்கம்.
தங்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டுகிறேன்.
நீங்கள் எல்லோரும் பெரும் பொக்கிஷம்.
பாதுகாக்க மக்கள் இருக்கிறார்கள் அதுவே பெரும் பாக்கியம்.
அண்ணா!
தம்பி அருள், மைக் பக்கத்தில் நின்று பேசத் தொடங்கியது முதல் முடித்தது வரை அப்படியே தாங்கள் பேசியது போல் இருந்தது.
கையசைப்பு, குரல், புதிய சிந்தனையோடு கருத்துகளை அடுக்கிச் சொல்லும் ஆற்றல் பேசும் போதே எண்ணங்கள் பளிச் என்று தோன்றுதல் என்று எல்லாமே தங்களின் மறு வார்ப்பு.
குரலும், நடையும் அப்படியே கடவுள் படைப்பில் இவ்வளவு ஒற்றுமை இருக்கக் கூடுமா! வியப்பு.
ஒன்று மட்டும் தங்களிடம் இல்லாதது கட்டுரை எழுதாமல் இருப்பது.
ஆனால் அருள் தினமணியில் கட்டுரை எழுதி வருகிறார்.
கால்டுவெல் கட்டுரை படித்தேன் எனவே தங்களைவிட ஒருபடி மேல் என்றுதான் கட்டுரையில் சொல்ல வேண்டும்.
தாரா அம்மா பண்போடு வளர்த்திருக்கிறார்.
அவர் இல்லையே பிள்ளையில் உயர்ச்சியைக்காணச் சிறக்க வாழ வேண்டும் என்று வாழ்த்தும்,
தாயம்மாள் அறவாணன்.

Add a Comment