அருந்தமிழும் அன்றாட வழக்கும் -133
வாழ்வாங்கு வாழ்கின்ற விழுப்பம்
முனைவர் ஔவை அருள்
பேரறிஞர் டி.என் ஷேசாசலம் தன்னுடைய விழுமிய இதழான
கலா நிலையத்தில் ஷேக்ஸ்பியர் குறித்தும் அவர் நாடகங்களின் கீர்த்தியைப் பற்றியும் பொன்னால் இழைத்த வார்த்தைகளால் வைர மாலை சூடி வந்ததை சென்ற தொடரில் குறிப்பிட்டேன்.
அவ்வண்ணமே கலா நிலையத்தில் 1935 வாக்கில் பிரஞ்சு அறிஞர் டெய்ன் அவர்கள் ஷேக்ஸ்பியர் அவர்களின் பெண் பாத்திரங்களைக் குறித்து சிறந்த ஆய்வுப் பார்வையோடு வெளியிட்டது பின்வருமாறு:
ஹிப்போலைட் அடால்பி டேய்ன் (Hippolyte Adolphe Taine) என்பவர் ப்ரான்ஸ் தேயத்தைச் சேர்ந்தவர்.
மேல்நாடுகளில் வழங்கும் மொழிகளிலுள்ள இலக்கியங்களவ்வளவும், க்ரீக், லத்தீன் முதலிய மொழிகளையும் கற்றுத் துறைபோயவர்.
இவர் ஆங்கிலேய இலக்கியங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து தம் ப்ரென்ச் பாஷையில் அரிய பெரிய நூலொன்று எழுபது வருடங்களுக்குமுன் எழுதினார்.
அந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கின்றது.
கீழ் வரும் இப்பாகத்தை அம்மொழிபெயர்ப்பினின்று எடுத்து எழுதுகின்றோம்:
Female Characters.
In Shakespeare you will met them (a troop of sweet and timid figures, pre-eminently tender-hearted, the most graceful and loveworthy whom it has been given to man to depict) in Miranda, Juliet, Desdemona, Virgilia, Ophelia, Cordelia, Imogen, but they abound also in the others; and it is a characteristic of the race to have furnished them, as it is of the drama to have represented them.
By a singular coincidence, the women are more of women, the men more of men, here than, elsewhere.
The two natures go each to its extreme: in the one to boldness, the spirit of enterprise und resistance, the ‘warlike, imperious, and unpolished character; in the other to sweetness, devotion. patience, inextinguishable affection—a thing unknown in distant lands, in France especially so :
(Hence the happiness and strength of the marriage tie in England; while in France it is but the association of two comrades, tolerably alike and tolerably equal, which gives rise to endless disturbance and bickering).
A woman in England gives herself without drawing back, and places her glory and duty in obedience, forgiveness, adoration, wishing and professing only to be melted and absorbed daily deeper and deeper in him whom who has freely and forever chosen 1.
It is this, an old German instinct which these great painters of instinct diffuse here, one and all Panthea, Dorothea in Ford and Greane: Bianca, Ordella, Arethusa, Juliana, Euphrasia.
Amoret, and others in Beaumont and Fletcher: there are a score of them who, under the severest tests and the strongest temptations, display this wonderful power of self-abandonment and devotion.
The soul, in this race, is at once primitive and serious.
Women keep their purity longer than elsewhere.
They lose respect loss quickly weigh worth and character less suddenly they are lost apt to think evil, and to take the measure of their husbands.
To this day a great lady, accustomed to company, blushes in the presence of an unknown man, and feels bashful like a little girl the blue eyes are dropped, and a child like shame flies to her rosy cheecks.
English women have not the smartness, the boldness of ideas, the assurance of bearing, the precocity with which the French make of a young girl in six months, a women of intrigue and the queen of a drawing-room.
Domestic life and obedience are more easy to them.
More pliant and more sedentary, they are at the same time more concentrated and introspective and more disposed to follow the noble dream called duty which is hardly generated in mankind but by the silence of the senses.
They are tempted by the voluptuous sweetness which in southern countries is breathed out in the climate, in the sky, in the general spectacle of things, which dissolves every obstacle which causes privation to be looked upon as a snare and virtue as a theory.
They can rest content with dull sensations, and dispense with excitements, endure weariness, and in this monotony of a regulated existence fall back upon themselves, obey a pure idea, employ all the strength of their hearts in maintaining their moral dignity.
Thus supported by innocence and conscience they introduce into love a profound and upright sentiment, abjure coquetry, vanity and flirtation: they do not lie or simper.
When they love they are not tasting a forbidden fruit, but are binding themselves for their whole life.
Thus understood, love becomes almost a holy thing: the spectator no longer wishes to be spiteful or to jest; women do not think of their own happiness, bat of that of the loved ones: they aim not at pleasure but at devotion.
வாழ்வாங்கு வாழ்கின்ற விழுப்பத்தின் அழகில் தழைத்த உணர்வுடைய புலமையோர் சிந்தனையைச் செவ்விதின் தேர்ந்து உவகையுடன் எடுத்துரைக்கின்ற ப்ரான்ஸ் தேயத்து டேய்ன் என்பவர் ஆங்கில மாதர்களின் அருமையை ஒரம் சாராமற் காட்ட வருகின்ற அவ்வறிஞர், தம் தேய மாதர்களுக்கு அதனால் இழுக்கு நேர்கின்றதென்பதையும் பொருட்படுத்தவில்லை.
தம்முடைய இன்பத்தையேனும் சகத்தையேனுங் கருதாமல் கடமையில் கருத்தைநாட்டி, கொழு நன்குணத்தினை அளக்காமல், அவன் எத்தன்மயனாயினும், பண்பும் பயனுமுடையராய் ஒழுகும் உத்தமிகள் தம் மேன்மையை இனிது உணர்த்தினார்.
அவர், ‘கடமை’ என்றுரைப்பது நமது ‘தர்மம்’ என்னுங் கருத்தினுள் அடங்கும். தருமத்தை கடத்துதல் என்னுஞ் சிந்தனையின்றி, அவரவர் இன்பத்திற்குரியன இயற்ற வேண்டுவதே தகுதியென்னும் துணிவு வாழ்க்கையுள் இடம்பெற்று விவகரிக்கப் புகுமாயின், பிறகு டேய்ன் உரைப்பதேபோல்
, “கற்பு என்பதெல்லாம் கையாளமாட்டாதவொரு கொள்கையாகவும் நிறையென்பதெல்லாம் பேதையரைப் படுப்பதற்கமைந்தவொரு பறியாகவும்,” உணர்வு திரிந்து கருதற்கியன்றனவாய்க் கழியாமல் என் செய்யும். புலன்களின் வாயைப் பொத்தினாலன்றி விழுமிய தருமத்தின் கனவேனும் காணமாட்டோம், என்கின்றார் டேய்ன்.
தன்னுடைய புலன்களை வாயடைத்து வைப்பதற்குத் தன்னைக் கரைத்துருக்கி வேறொருவர்பால் கலந்துகொள்ளும் துறவே வேண்டற்பாலது என்பது சான்றோரனைவரும் செப்புகின்ற துணிவாய் நிற்கின்றது.
இதனைத் தருமம் என்ற கருத்தினில் ஆன்றோர் அடக்குகின்றனர். ”
நீ உன் கடமையை ஒருவனுக்கு நேராகச் செலுத்தினலும், அவர் உன்னிடத்துச் செலுத்த வேண்டிய கடமையைச் செலுத்தாத கொடியவனாயமைவானாயின், அதற்கென்ன செய்வது” என்று பிறக்கவல்லவோர் ஐயத்தினை, எமர்ஸன், “அவனைப்பற்றி நினைக்கவேண்டா; அவன் கெட்டவனாயிருந்தால், நீ உன் கடமையைச் செலுத்துவதில் இன்னும் பதின்மடங்கு அதிகம் கவனமுடன் ஒழுகுவதே கடனாகின்றது.
நீ உன் தருமத்தைச் செய்யவேண்டியது, மற்றவர் தம் தருமங்களைச் செய்கின்றார்களோ இல்லையோ என்பதைப் பொருந்தியதொன்றன்று” என அறிவுறுத்தித் தெளிவிக்கின்றார்.
—————-
உரைவேந்தர், சித்தாந்தக் கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப் பற்றி
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை முன்னாள் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் வரைந்த நெடுங்கட்டுரை (3)
ஹொய்சள என்பதற்கு அதாவது புலிகடிமால் என்பதற்கு மேற்காட்டப்பெற்ற கல்வெட்டுச் சான்று தருவதுடன் ஒளவையவர்கள் மனநிறைவு அடைந்துவிடவில்லை.
இச்செய்தி நம்பகத் தன்மையுடையது தானா என்ற வினாவை மனத்தில் எழுப்பிக் கொண்டு மேலும் தமது தேடலைத் தொடர்கின்றனர்.
மைசூர் மாநில பேலூர்க் கல்வெட்டுச் செய்தியை, அதே பகுதியில் கிடைத்த ஹொன்னாவரத்துக் கல்வெட்டுச் செய்தியுடன் ஒப்பிட்டு ஆய்கிறார்.
இரண்டாவதாகக் குறிக்கப்படும் கல்வெட்டில் மேற்கூறப்பட்ட கதை சற்று மாற்றத்துடன் இடம் பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுகிறார்.
அதாவது புலியை முயல் துரத்திய பகுதி இல்லாமல், முனிவனின் அருளினால் மன்னன் சசகபுரத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதும், அவ்வூர்த்தெய்வமான வாசந்திகை புலியுருவத்தில் வந்து போரிட சளன் அவளை வென்றான்.
இதனால் ஹொய்சள என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு செய்தியை வீரவல்லாள தேவனின் கல்வெட்டினை மேற்கோள் காட்டி ஒளவை விளக்குகிறார். (புறநானூறு, பகுதி-II ப.4)
இவ்வாறு கல்வெட்டுக்களில் கூறப்படும் கதைகளை எடுத்துக்காட்டுவதுடன் ஒளவை நின்றுவிடவில்லை.
பாடலின் சொற்பொருளையும் குறிப்பிட்ட பகுதியினரிடையே வழக்கத்தில் இருக்கின்ற சொற்களையும் பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வருகிறார் ஒளவை.
அப்பகுதியக் காண்க.
நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடத்தைத் தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது, முனிவனொருவன் இருந்த மலைமிசை இடைநிலமென்றும், அந்நிலத்து வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப்பகுதிக்குக் கிழக்கில் உள்ள புலிநாடென்றும் பன் நாடென்றும் வழங்கிய கன்னட நாட்டு வேந்தனை வென்றது பற்றியே புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத் தோன்றுகிறது. (புறநானூறு, பகுதி II ப.4)
என்று ஒளவை அறிவுசார்ந்த விளக்கம் தருகின்றார்.
இறை நம்பிக்கையும் உணர்வும் கொண்டிருந்தாலும் ஒளவை அவர்கள் இலக்கியங்களுக்கு உரை எழுதும்போது உண்மையைக் கண்டறிவதிலேயே ஆர்வங்கொண்டிருந்தார்கள்.
தமது தனிப்பட்ட உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் வரலாற்று ரீதியான விடயங்களில் கலந்து விடவில்லை.
இலக்கியத்தை இலக்கியமாகவும் வரலாற்றை வரலாறாகவும் பகுத்துக் கையாண்ட பெருமிதத்திற்குரியவர் ஒளவை எனலாம்.
புலிகடிமால் என்பதற்கு ஒளவையவர்கள் மேலும் விளக்கங்கள் கூறுகிறார்.
அந்நாளில் அப்பகுதியை ஆண்ட ஆந்திர சாதவாகன வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை வென்றது பற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும் கொள்ளலாம்.
மேனாட்டு யவனரான தாலமியும் இப்புலிமாய் வேந்தனைக் குறித்துள்ளார்.
சாதவாகனராட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்திருக்கிறது.
அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம் அந்நாட்டில் இருந்திருக்கிறது.
ஸ்ரீபுலுமாவி, புலிமாயி எனக் காணப்படினும் கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும் புலிபோலும் மெய்வலியுடையனென்பது பொருளென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
இவ்வாற்றால் ஹொய்சாள கதையிலும் இது பொருத்தமாதல் காணப்படும் என்று கூறுகிறார்.
(புறநானூறு, பகுதி II ப.5) இதனால் உண்மைப் பொருளை உணர்ந்து கூறுவதற்கு ஒளவை அவர்கள் மேற்கொண்ட உழைப்பும் துன்பமும் புலனாகின்றன.
இதுவரை கூறப்பெற்ற விளக்கங்களைப் படித்துவரும் மாணவனின் உள்ளத்தில் இயல்பாகப் பிறிதொரு வினா தோன்றுகிறது.
மைசூர்ப்பகுதியை ஆண்டு வந்த புலிகடிமாலுக்கும் தமிழ்நாட்டில் கபிலர் கூறும் இருங்கோவேளுக்கும் என்ன தொடர்பு?? என்ற வினாதான் அது.
இவ்வினாவிற்குரிய விடையையும், ஒளவையவர்கள் கூறுகிறார்.
இப்புலிகடிமால் வழிவந்த இருங்கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்திருந்தனரென அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன என்று உரையை நிறைவு செய்கிறார் பிள்ளையவர்கள்.
புறநானூறு 201-ஆம் பாடல் இருபது அடிகள் உடையது.
இதற்குப் பிள்ளையவர்களின் உரை நான்கு பக்கங்கள் வரை நீண்டு செல்கிறது.
பல்துறை அறிவு,
உண்மை காணும் நேர்மை,
பிறரை மறுக்கும்போது இனிமையுடன் மறுத்துரைத்தல்
,
கடின உழைப்பு,
வாசகனுக்குச் சென்று சேரும் முறையில் எளிமைப் படுத்திக் கூறுதல்,
மூலநூலிலுள்ள எந்தச் சிறிய குறிப்பினையும் தவறவிட்டு விடாமல் முழுமையாக உரை காணுதல்
முதலிய 6 பண்புகள் இருந்தமையினால்தான் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் உரைவேந்தர் எனப்பட்டார்.
எண்பொருள வாகசெலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (424)
என்ற குறட்பாவுக்குரிய முழுமையான சான்றாக ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் திகழ்கின்றார்.
திருவருட்பா உரை
ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் திருவருட்பா முழுமைக்கும் (5818 பாடல்கள்) உரை வரைந்திருக்கிறார்.
புறநானூற்று உரையில் அவரது வரலாற்றறிவும் இலக்கியச் சுவையுணர்வும் புலப்படுகின்றவெனின்,
திருவருட்பா உரையில் அவரது பக்தி இலக்கிய ஆழமும் அனுபவமும் புலப்படுகின்றன.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment