POST: 2022-11-03T09:48:52+05:30

செல்விருந்து ஒம்பல் விழா

30.9.2022, வெள்ளிக்கிழமை

தலைமைச்செயலகம்.

இணைச்செயலர் திருமதி விஜயலட்சுமி அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெறுவதை முன்னிட்டு நடைபெற்ற பிரிவு விழாவின் போது என் உரை…..

தலைமைச்செயலகத்தில் உள்ள மொழிபெயர்ப்புப் பிரிவுக்காக பல முறை நாங்கள் கேட்கிற கோரிக்கைகள் எந்தக் கோரிக்கைகளானாலும் உடனுக்குடன் எங்களுக்கு உதவுகின்ற முனைப்புடன் பணியாற்றிய இணைச்செயலாளர் திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எந்தச் சூழலிலும் அவர்கள் அசராமல் தயங்காமல் பணியாற்றும் பாங்கு போற்றத்தக்கது.

எந்த நேரமானாலும் கனிவாக, தாய்க்கே உரிய சிறந்த குணத்துடன் அவர்கள் எங்களை வழிநடத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

எங்கள் பிரிவு மீது மிகப் பரிவு காட்டி, அதேபோல கலைமகள் விழா என்று ஆண்டுதோறும் நீங்கள் நடத்துகிற அந்த விழாவுக்காக இது தன்னுடைய வீட்டு நிகழ்வுபோல அதை மிக நேர்த்தியாக நடத்தவேண்டும் என்பதற்காக, ஒரு படி கூடுதலாக அவருடைய திருமகளையே அழைத்துப் பாட வைத்து கலைமகள் விழாவைத் திருவிழாவாக தலைமைச்செயலகத்தில் நடத்திய பெருமிதம் அவருக்குரிய இயல்பாகும்…

நம்முடைய உயர் அலுவலர்கள் பல நேரங்களில் they will blow hot and cold என்பார்கள் ஆங்கிலத்தில்.

எந்தச் சூழலில் இருந்தாலும் அமைதியாக, கிட்டத்தட்ட இடியே விழுந்தாலும் கவலையேப்படாமல் சரிங்க அவருடைய கடமை அவர் அங்கிருந்து சொல்லுகிறார். நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் கூட சில நேரங்களில் சீறுகிற மாதிரி காட்டிக்கொண்டாலும் கூட அப்படி எல்லாம் செய்யக்கூடாது என என்னையும் பல முறை ஆற்றுப்படுத்திய பெருமை திருமதி விஜயலட்சுமி அம்மையாருக்கு உண்டு.

எனக்கென்ன பெரிய விழைவாக இருந்தது என்றால் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையிலேயே இணைச்செயலாளராக இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும்.

அந்த வாய்ப்புத்தான் அவர்களுக்குக் கிட்டாமல் சென்றாலும், வேளாண்மைத்துறையிலேயே அவர்கள் இப்போது இணைச்செயலாளராக ஓய்வுபெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்….

கடுமையான பெருந்தொற்றுக் காலத்தில் திருமதி விஜயலட்சுமி அவர்கள் செய்த பணி மகத்தான பணியாகும்…

ஏனென்றால் அந்த நேரத்தில் பலர் என்னுடைய அலுவலகத்தில் மருண்டார்கள் வருவதற்கே.

ஏன் வரவேண்டும் என்றெல்லாம் என்னைக் கேட்ட நேரத்தில் தயங்காமல் தடையே சொல்லாமல் அவர்கள் ஒருவர் வந்து நேர்த்தியாக அலுவலகத்தினை பாங்கை நடத்தியதற்காகவே நான் தலை வணங்கி மரியாதை செலுத்துவதற்காகத்தான் இன்றைக்கு எந்தப்பணியாக இருந்தாலும்,விஜயலட்சுமி அம்மையாரைக் காண வரவேண்டும் என்பதற்காக வந்தேன் என்று சொல்லி அவர்கள் என்றென்றும் வாழ்க.

அவர்கள் நினைத்தது போல நல்லதொரு குடும்பம் அவர்களுக்கு.

வருங்காலங்கள் இன்னும் வசந்தமாக இருக்கும் என்று வாழ்த்தி அமைகிறேன்.

நன்றி! வணக்கம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *