POST: 2022-11-08T12:53:53+05:30

.கவிஞர் அழ வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள் குறித்து வெளியான செய்திப்பரல்கள் ..

1.தினமணி நாளிதழில் 8.11.2022 ( செவ்வாய் ) ( பக்கம் எண் – 14 )

அழ வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள்

பிரதமர் மோடி மரியாதை

சென்னையில், திங்கள்கிழமை நடைபெற்ற குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவில் ‘குழந்தைகள் உலகம் என்னும் நூல் வெளியீட்டில் பங்கேற்ற

(இடமிருந்து) மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்,

தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர்
சென்னை – ஔவை ந.அருள்,

தொழிலதிபர் நல்லி குப்புசாமி,

செட்டிநாடு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா,

சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி,

இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் செல்லகணபதி,

கவிஞர் பி.வெங்கட்ராமன்,

கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி,

நடிகர் டி.கே.எஸ்.கலைவாணன், நூலின் ஆசிரியர் தேவி நாச்சியப்பன், பதிப்பகத்தின் நிர்வாகி இராம.குருமூர்த்தி.

புது தில்லி நவ. 7:பிரபல குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பா வின் நூற்றாண்டு பிறந்த நாளை யொட்டி (நவ.7) பிரதமர் நரேந் திர மோடி ட்விட்டரில் திங்கள் கிழமை அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை இராயவரத்தில் நகரத்தார் குடும்பத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றி தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆகியவற்றை ஏராளமாக இயற்றியிருக்கிறார்.

1922, நவம்பர் 7-ஆம் தேதி அழ.வள்ளியப்பா பிறந்தார்.

கடந்த ஓர் ஆண்டாக இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

‘அழ.வள்ளியப்பாவின் நூறாவது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

அவரது சிறந்த எழுத்து மற்றும் கவிதைகளுக்காக மட்டுமல்லாமல், வரலாறு, கலாசாரம் மற்றும் இலக்கியத்தை குழந்தைகளிடையே பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் போற்றப்படுகிறார்.

அவரின் முயற்சிகள் இன்றைய காலத்திலும் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

2.THE HINDU – PAGE NUMBER – 4

Azha Valliappa dedicated his life to writing for children, says Regupathy

The Hindu Bureau

The centenary celebrations of Azha Valliappa, popularly known as Kuzhandai Kavignar (children’s poet), concluded on Monday and was marked by cultural performances and well wishers reminiscing about the poet’s works and literary contributions.

“He had always spoken about how there are several people who write for adults, but very few who write for children.

He inspired several writers like me who set off on the path to write for children,” said Chella Ganapathy, who heads Valiappa Ilakkiya Vattam.

V. Azhagappan, son of Azha Valiappa, said that annually the poet’s birthday on November 7 was celebrated as children’s literature day.

“We were keen on having a website about his works and achievements.

Last year, the centenary celebrations were inaugurated with the launch of the website, and competitions were conducted for children.

Seventy participants were given prizes,” he said.

S. Regupathy, Minister for Law and Prisons, said that simplicity, clarity and pleasantness were defining characteristics of Azha Valiappa’s works.

“He was a poet for children, which is a boon. He dedicated his life to writing for children, and we should be celebrating and talking more about his works,” he said.

As a part of the celebrations, students from Pavendar Tamil Medium School, Nanganallur; A.M.M. School, Kotturpuram; Sri Sai Nrithyalaya Dance School and Kavimani Children’s Sangam put up dance and music performances, incorporating several songs written by the poet.

A special publication for the centenary celebrations, brought out by Pazhaniappa Brothers, as well as two publications for children were released on the occasion.

3 .இந்து தமிழ் திசை – பக்கம் எண் : 3

‘தமிழகத்தின் நேரு மாமா’ குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா:
அமைச்சர் ரகுபதி புகழாரம்

கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குடும்பத்தார் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

இதில், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கியப் பணி வெள்ளி விழா மலரை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார்.

உடன் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா,

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள்,

குழந்தைக் கவிஞர் பி.வெங்கட்ராமன், கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, இசைக் கலைஞர் டி.கே.எஸ்.கலைவாணன், அழ.வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன் உள்ளிட்டோர்.

படம்: பு.க.பிரவீன்.

சென்னை: தமிழகத்தின் நேரு மாமா என அழைக்கப்படுபவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புகழாரம் சூட்டினார்.

அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டமும், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குடும்பத்தாரும் இணைந்து நடத்திய அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் அழ.வள்ளியப்பாவின் மகன் வ.அழகப்பன் வரவேற்புரையாற்றினார்.

வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் செல்லகணபதி தலைமை வகித்தார்.

குழந்தைக் கவிஞராக இருப்பது வரம்:

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவை போற்ற வேண்டியது, பாராட்ட வேண்டியது,

நினைவுகூர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம்.

குழந்தைகள் உலகம் என்பது அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம்.

அதை வண்டாக சுற்றிவந்து தேன் கவிதைகளை குழந்தைகள் நெஞ்சில் தெளித்தவர்.

அழகான பாடல்களுக்குச் சொந்தக்காரர், தமிழகத்தின் நேரு மாமா அழ.வள்ளியப்பா.

இன்றைக்கு பல குழந்தைகள் தொலைக்காட்சியே கதி என கிடக்கும் இந்த நேரத்தில் அழ.வள்ளியப்பாவை நினைவுகூர்வது முக்கியம்.

இந்தியன் வங்கியில் பணியாற்றியதுடன் தொடர்ந்து குழந்தைக் கவிதைகளையும் எழுதி வந்தார்.

எளிமை, இனிமை, தெளிவு:

1944-ம் ஆண்டு முதல் குழந்தை இலக்கிய பாடல் தொகுதியான மலரும் உள்ளம் வெளிவந்தது.

அதன் பின்னர் தனது வாழ்நாள் முழுவதையும் குழந்தை இலக்கியத்துக்கு அர்ப்பணித்தார்.

குழந்தைப் பாடல் எளிமை, இனிமை, தெளிவு ஆகிய பண்புகளை தன்னகத்தே கொண்டது.

வள்ளியப்பாவின் பாடல்களில் இந்த 3 பண்புகளும் அடங்கி இருந்தன.

இவ்வாறு ரகுபதி கூறினார்.

நிகழ்ச்சியில், பழனியப்பா பிரதர்ஸின் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கியப் பணி வெள்ளி விழா மலர், முனைவர் தேவி நாச்சியப்பன் எழுதிய குழந்தைகள் உலகம், டி.மோகனம்பாள் தயாரித்த சிறுவர்களுக்கான இசை இலக்கணம் பாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன.

விழாவில், செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி,

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள்,

குழந்தைக் கவிஞர் பி.வெங்கட்ராமன், கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, இசைக் கலைஞர் டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள்கள் தேவி நாச்சியப்பன் தொகுப்புரையும், உமையாள் வள்ளியப்பன் நன்றியுரையும் ஆற்றினர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *