POST: 2022-11-10T14:10:20+05:30

வீரமாமுனிவருக்கு மரியாதை….

தமிழ்நாடு அரசு சார்பில் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி ( 8 11 2022 ) பற்றி நாளிதழ்களில் வெளியான செய்திப்பரல்கள்

1.தினசெய்தி – பக்கம் எண் : 3

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு,

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்,

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மகேஷ் குமார்,

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ந. அருள்

மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

2.தினத்தந்தி – பக்கம் எண் : 10

வீரமாமுனிவர் உருவப்படத்துக்கு மரியாதை

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார்,

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ந.அருள்

உள்பட அரசு அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி,

3.தினமணி – பக்கம் எண் : 14

வீரமாமுனிவருக்கு மரியாதை….

தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாளையொட்டி, சென்னை மெரீனாவில் அமைந்திருக்கும் அவரது சிலைக்குக் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்.பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, துணைமேயர் மு.மகேஷ்குமார்,

தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள்

உள்ளிட்டோர்,

4.முரசொலி – பக்கம் எண் : 3

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ் நாடு அரசின் சார்பில் நேற்று ( 8.11.2022 ) சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட் டுள்ள திருவுருவப் படத்திற்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ் குமார்,

தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *