நினைவேந்தல் கூட்டம்
மதுரை தியாகராசர் கல்லூரி மேனாள் பேராசிரியரும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும்,தமிழ் வளர்ச்சித் துறை செயலாளரும் ஆகிய முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி
நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் கி. வேணுகா தொடங்கி வைத்தார்.
இளம் இலக்கியம் முன்றாம் ஆண்டு மாணவர் ச. வே. மருது பகவதி
தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் பத்மஸ்ரீ, கலைமாமணி, கம்பர் விருது போன்ற பல பட்டங்கள் பெற்றவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியவர்.
மொழிபெயர்ப்பு பணி யில் சிறப்பாக ஈடுபட்டவர்.
அன்னாரது தந்தையார் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் செந்தமிழ் இதழில் பல ஆய்வுக்கட்டுரைகள் படைத்தவர்.
என்றும் குறிப்பிட்டார்.
புகழஞ்சலி நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..

Add a Comment