காலை மாலை திருக்குறள் வேளை!
ஈரடிக் குறளுக்கு இருமொழி மாலை
காலையில் ஓவியம்!
மாலையில் காவியம்!
தினமணி -23.12.2022
பக்க எண் – 3
சென்னை, டிச. 23:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலாக 2021-22-ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நெறிபோற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) கோபிநாத் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.
ஓவியர் டிராட்ஸ்கி மருது தலைமை உரையாற்றினார்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 15 ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாகரூ. 40 ஆயிரம், பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை
ந.அருள் பேசியதாவது:
தமிழுக்கு கதி என்று
கம்பராமாயணத்தையும் – திருக்குறளையும் கூறுவார்கள்.
2053 ஆண்டுகளுக்கு முன்பு குறுகத் தரித்த குறளைப் படைத்த ஐயன் திருவள்ளுவரின் புகழ் வானளாவிய புகழாகும்.
தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தலைச்சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பெருமைப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 1330 அருங்குறள்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ. 10,000 மதிப்புக் கொண்ட திருக்குறள் முற்றோதல் பரிசும் வழங்கப்பட்டு வரு கிறது என்றார் அவர்.
விழாவில் ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசுகையில், ‘
அரசுப் பள்ளி, கல்லூரிகளில் ஓவியத்தைப் பாடத்திட்டமாகக் கொண்டுவரவேண்டும்’ என்றார்
அவர். விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள், ஓவியர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
தினகரன் – 24 12 2022
பக்கம் எண் : 2
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு:
தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது
சென்னை: சென்னை தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலாக 2021-22ம் ஆண்டுக்கான திருக்குறள் நெறிபோற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் அருள், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 15 வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ.40 ஆயிரம், பாராட்டு பட்டயம் ஆகியவற்றை ஓவியர் டிராட்ஸ்கி மருது வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் கூறுகையில், ‘
‘தமிழுக்கு கதி என்று
கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் சொல்வார்கள்.
திருக்குறளை தந்த திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு அரசு கடிதங்களும், அரசாணைகளும் வரையப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தலைசிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பெருமைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து தமிழ் திசை – 24 12 2022
பக்கம் எண் : 3
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில்
ஓவியத்தை படத்திட்டமாக்க வேண்டும்
அரசுக்கு ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வேண்டுகோள்
சென்னை
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவிய காட்சிக்கூடம் திருக்குறளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை தாங்கிய ஓவியர் டிராட்ஸ்கி மருது, வெற்றி பெற்ற 15 ஓவியர்களுக்கு தலா ரூ.40ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அவர் பேசும் போது, “ அரசு பள்ளி, கல்லூரிகளில் ஓவியத்தை பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும் ” என யோசனை தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் சிறப்புரையாற்றும் போது, ”
தமிழர்களின் நெஞ்சங்களில்
மட்டுமல்லாமல், பிற நாட்டினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் ஒரே உலகப்பொதுமறை திருக்குறள் தான்.
திருக்குறள் தந்த திருவள்ளுவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசின் கடிதங்களிலும், அரசாணை களிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படுகிறது ” என்றார்.
முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் வரவேற்றார்.
முதுகலை மாணவர் சு.உத்தமராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திருக்குறள் ஓவியக்காட்சி பொறுப்பாளர் து.ஜானகி நன்றி கூறினார்.
பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினசெய்தி – 24 12 2022
பக்கம் எண் : 4
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில்
திருக்குறள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன .
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந அருள் சிறப்புரை
சென்னை டிச 24-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த திருக்குறள் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ந. அருள் பங்கேற்று
உரையாற்றினார்.
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலாக 2021 – 22ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நெறிபோற்றும்
ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.
இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.). கோபிநாத் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.
ஓவியர் டராட்ஸ்கி மருது தலைமையுரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற 15 ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ.40 ஆயிரம், பாராட்டு பட்டயம் மற்றும் பயனாடை வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் பேசியதாவது:-
தமிழர்களுடைய நெஞ்சங்களில் மட்டுமல்லாமல் பிற நாட்டினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் ஒரே உலகப் பொதுமறை திருக்குறளாகும்.
தமிழுக்கு கதி என்று கம்ப இராமாயணத்தையும் – திருக்குறளையும் சொல்லுவார்கள்.
2053 ஆண்டுகளுக்கு முன்பு குறுகத் தரித்த குறளைப் படைத்த ஐயன் திருவள்ளுவரின் புகழ் வானளாவிய புகழாகும். மேலும், திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டுத் தான் தமிழ்நாடு அரசுக் கடிதங்களும், அரசாணைகளும் வரையப்படுகிறது
.தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தலைசிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பெருமைப்படுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் குமரிக்கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர்
சிலை நிறுவப்பெற்றதும் – சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது என்பது மறக்க முடியாத வரலாறாகும்.
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக 1330 அருங்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவச் செல்வங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்புக்கொண்ட திருக்குறள் முற்றோதல் பரிசும் வழங்கப்பட்டுவருகிறது
என்றார்.
நிறுவன உதவிப் பேராசிரியரும் திருக்குறள் ஓவியக்காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் து.ஜானகி நன்றி நவின்றார்.
நிறுவன முதுகலை மாணவர்.சு. உத்தமராஜன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள்,நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், ஓவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்திக்குறிப்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியப் போட்டி (2021-22)
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலாக 2021-22ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நெறிபோற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா இன்று (23.12.2022) நடைபெற்றது.
இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.)
திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
ஓவியர் டராட்ஸ்கி மருது அவர்கள் தலைமையுரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற 15 ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ. 40 ஆயிரம், பாராட்டு பட்டயம் மற்றும் பயனாடை வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில்,
தமிழர்களுடைய நெஞ்சங்களில் மட்டுமல்லாமல் பிற நாட்டினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் ஒரே உலகப் பொதுமறை திருக்குறளாகும். தமிழுக்கு கதி என்று கம்பராமாயணத்தையும் – திருக்குறளையும் சொல்லுவார்கள்.
2053 ஆண்டுகளுக்கு முன்பு குறுகத் தரித்த குறளைப் படைத்த ஐயன் திருவள்ளுவரின் புகழ் வானளாவிய புகழாகும்.
திருக்குறளுக்காக உலகெங்கும் எத்தனை எத்தனை மாநாடுகள், கருத்தரங்குகள், உரை நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், திருக்குறள் தொடர்பான கதைகள், சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் என்றார்.
மேலும், திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு அரசுக் கடிதங்களும், அரசாணைகளும் வரையப்படுகிறது என்றும்.
தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தலைசிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பெருமைப்படுகிறது என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் குமரிக்கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பெற்றதும் – சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது என்பது மறக்க முடியாத வரலாறாகும் என்றும்,
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக 1330 அருங்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவச் செல்வங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்புக்கொண்ட திருக்குறள் முற்றோதல் பரிசும் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் தமது தலைமையுரையில்
அரசுப்பள்ளி, கல்லூரிகளில் ஓவியத்தைப் பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும் என்ற தனது விழைவைத் தெரிவித்தார்.
நிறுவன உதவிப் பேராசிரியரும் திருக்குறள் ஓவியக்காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றி நவின்றார்.
நிறுவன முதுகலை மாணவர் திரு. சு.உத்தமராஜன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், ஓவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
INVITED
I cordially invite you to attend with your family and friends, the function organised for the release of the Book on Tirukkural Transliteration, Explanatory notes in Tamil & Translation to be held on 23-12-2022 @ 6:00 pm to 8:00 pm, at Thakkar Bapa School, Venkatnarayana Road, T. Nagar (near Thirupathi temple signal), Chennai
Shri Baskaran Krishnamurthy, Writer-cum-columnist will welcome the guests.
Dr. Marudur Arangarasan, Retd. Principal, Jawahar Arts & Science College, Neyveli & the author’s school Tamil Teacher will preside.
Shri R Ravichandran, IRS – Pr. Chief Commissioner of Income Tax, Tamilnadu & Puducherry has kindly consented to release the first copy of the Book.
Dr. M Uma Maheswari, Ph D, Asst Prof cum HOD Sanskrit Dept Queen Mary’s college Chennai has kindly agreed to receive the first copy and deliver the special address.
Shri Ravi Ramachandran, IRS, Commissioner of Income Tax, Chennai will review the book.
Dr. N. Arul, Director, Translation & Tamil Development, Govt. of Tamilnadu will deliver the complimentary address.
– S.B. Chakraborthy @Soman – Shri Vediyappan, Discovery Publications
வங்காளம் தாய்மொழியாய்க்
கொண்டான்; வையம்
எங்குமுள தமிழ்மொழியை
நெஞ்சில் வைத்தான்.
இங்குள்ள சம்ஸ்கிருதம்
இந்தி மற்றும்
உலகமொழி ஆங்கிலமும்
தேர்ந்து கற்றான்.
கங்குலதை அகற்றியொளி
பாய்ச்சும் ஒப்பில்
பொதுமறையாம் திருக்குறளை
வாழ்வில் ஏற்றான்;
இங்கதற்கு உரைதந்தான்;
மொழிபெ யர்த்தான்
*சோமேந்த்ர பூஷசக்ர*
*போர்த்திப்* பேரான்…
திருக்குறள்மேல் கொண்டிட்ட
காதல் தன்னால்
அந்நூலைத் தன்மொழியாம்
வங்கம் தன்னில்
உருக்குலையா வண்ணமாங்கே
செய்யுள் யாப்பில்
உயிரனைய மாமனுடன்
சேர்ந்து தந்தான்…
உருக்கியநல் ஆடகப்பொன்
எனவே இன்றிங்(கு)
ஒலிபெயர்த்து உரைதந்து
மொழிபெ யர்த்தே
செருக்குடனே வரலாற்றில் நின்றான்; என்றன்
மாணவன்நல் *சக்ரபோர்த்தி*
வாழ்க நூறே!
Rtn saiseshan
Had the unique opportunity today of being at a book release function, where the author is my college classmate and the one felicitating him is my school classmate.
The author is a bong, Somendra Bushan Chakraborty, and the book is titled Thirukkural – Explanatory Notes, Transliteration and Translation.
Interestingly he has also translated Kural earlier in 2013 into Bengali along with his maternal uncle.
Arul, as usual, spoke well😀

Add a Comment