கண்ணீர்ப்பூக்கள் காணிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.1.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலத்தை வென்று கடமையாற்றி நிலவுலகை நீத்து அமைதியுற்ற பல்துறை வித்தகர்கள் எழுவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு
.
அவ்வெழுவரில் ஒருவர் எந்தையார் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்கள்.
எந்தையார் நினைவைப் போற்றிய தமிழ்நாட்டரசுக்கும்,
தமிழர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்
எம் இல்லத்தார் சார்பில் கண்ணீரில் வனைந்த நன்றிப் பூக்களைக் காணிக்கை ஆக்குகிறோம்.
கண்ணன், அருள், பரதன்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
10.1.2023
(1)
(செவ்வாய்க்கிழமை)
11.1.2023
(புதன்கிழமை)
12.1.2023
நிகழ்ச்சி நிரல்
இரங்கற் குறிப்புகள்
சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து
இரங்கல் தீர்மானங்கள்
1. முனைவர் க. நெடுஞ்செழியன். தமிழறிஞர் அவர்கள் மறைவு குறித்து.
2. திரு. ஆரூர் தாஸ், பிரபல திரைப்பட வசனகர்த்தா அவர்கள் மறைவு குறித்து.
3. முனைவர் ஔவை நடராசன். தமிழறிஞர் அவர்கள் மறைவு குறித்து.
4. திரு. மனோகர் தேவதாஸ், பிரபல ஓவியர் மற்றும் எழுத்தாளர் அவர்கள் மறைவு குறித்து.
5. மருத்துவர் D. மஸ்தான், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் அவர்கள்
மறைவு குறித்து.
6. திரு. பீலே, பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் அவர்கள் மறைவு குறித்து.
7. திரு. இ. திருமகன் ஈவெரா, சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடங்குதல்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் – தொடர்ச்சி
(வியாழக்கிழமை)
13.1.2023
(1)
(வெள்ளிக்கிழமை)
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை
(11)
அவசரச் சட்டம் தொடர்பான சட்டமுன்வடிவு மற்றும் பிற சட்டமுன்வடிவுகள்
அறிமுகம் செய்தல்,
ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
(1)
ஏனைய அரசினர் அலுவல்கள்.
பேரவை வழக்கம்போல் காலை 10.00 மணிக்குக் கூடும்.
முனைவர் கி. சீனிவாசன்,
செயலாளர்.
9 1 2023
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக்குறிப்பு வாசிக்கப்பட்டு, அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழறிஞர் முனைவர் ஔவை நடராசன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம். தங்களின் கனிவான பார்வைக்கு
(இ) முனைவர் ஔவை நடராசன், தமிழறிஞர் அவர்கள் மறைவு குறித்து
மாண்புமிகு பேரவைத் தலைவர்: சிறந்த தமிழறிஞரும், கல்வியாளருமான முனைவர் ஔவை நடராசன் அவர்கள் 21-11-2022 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
தமிழிலக்கியத்தின் மீது தீராத நாட்டம் கொண்ட முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் பற்றி ஆற்றிய உரைகளால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தவர்.
தமிழில் இவருக்கிருந்த புலமையால் பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு கலைமாமணி, ‘பத்மஸ்ரீ’ என விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
அன்னாரது மறைவால் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

Add a Comment