தினசெய்தி – 17 1 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 144
திட்ப நுட்ப உரை
முனைவர் ஔவை அருள்
1992ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தற்கால இந்திய மொழிகளின் இலக்கியத் துறையில், பெரும்புகழுடன் பணியாற்றி வந்த முனைவர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்கு பதிவு செய்திருந்தேன்.
பேராசிரியர் தங்கியிருந்த கரோல் பாக் இல்லத்திலேயே எனக்கும் ஓர் அறை ஒதுக்கி ஆய்வு செய்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
மூன்றாண்டுகள் கள ஆய்வுகள் பல செய்து இந்திய நாட்டில் உள்ள பல மாநிலங்களில் உள்ள நூலகங்களுக்கெல்லாம் சென்று ஆங்கில மகாக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் தமிழாக்கம் குறித்த என் முனைவர் பட்ட ஆய்வு அமையப் பெற்றது.
இந்த ஆய்வுத் தலைப்பை தொடங்கும் பொழுதே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர், ஷேக்ஸ்பியரின் தாக்கம் தமிழ் உலகத்தில் எப்படி அமையப்பெற்றது என்று பல வினாக்களைத் தொடுத்தார்.
அப்பொழுது அங்கிருந்த வங்க மொழிப் பேராசிரியர் தமிழ் உலகத்தில் ஷேக்ஸ்பியர் இருந்ததைக் காட்டிலும் வங்காளத்தில் அவருடைய வீச்சு மிக ஆழமானதும் அகலமானதும் என்று பல சான்றுகளை முன் வைத்தார்.
கல்கத்தா மாநகரத்தில் ஷேக்ஸ்பியர் சாரணி என்று நாங்கள் தெருவிற்கே பெயர் வைத்திருக்கிறோம் எனப் பெருமிதமாக தெரிவித்ததை நினைந்து மகிழ்கிறேன்.
முதன் முதலாக 1992ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 6ஆம் நாளன்று அங்கு கூடி இருந்த அனைத்துத் துறைப் பேராரிசியர்களிடமும் ஏன் ஷேக்ஸ்பியர் குறித்து ஆய்வு செய்கின்றேன் என்று சுருக்க உரை அளித்தேன்.
சுருக்க உரை வருமாறு :
Shakespeare in Tamil Land – Why?
The impact of Shakespeare on Tamils is by acclaim the most interesting of all forms of Tamil – English experience in the literary sense; and its astonishing that few have cared to study its origin and development from a historicist perspective and mythic stand point.
A majestic stream of literature has poured forth about in every transmuted and muted form – what shows! What dramas! What passionate and endless translations! Adaptations! – and how little science to scrutinize this wonder objectively, to find its source in the nature of Tamil – psyche and the causes of its marvelous growth from the simple climbing of English through English loving Tamil scholars and Tamil loving English scholars to the devotion of Shakespeare, the ecstasy of his capture and the loyalty of the Tamils to the Universalities in him that preceded all difference!
Brute facts have proved the points as to why Tamil land has loved Shakespeare Poetic by temperament and universal by vision, the love of the mother tongue, springs eternally in the Tamil breast; but where is the secret fountain of its youth? When the English ruled sky high the patriarchal thrilled the mother’s contours.
This is precisely the mythic zing of the context.
Is it because Shakespeare’s English is handsome? But does not the Tamil’s love create this beauty as much as his beauty creates Tamil’s love?
There is nothing in the Tamil – Shakespeare affairs so strange as the readiness of the Tamils for the exotic, this side complacent antiquity to pursue the great bard, unless it be the readiness of English language of the bard, this is the dramatic and the universal, to be pursued.
Tamil’s has been a persistent measuring glance upon Shakespeare, at every moment from 1870 to 1990 and onwards.
This project itself is a flitting about the magnetic flame.
The study is to point out the origins of our profound desire and the stages through which did it pass to its present glory and madness; it is a trying – not, however rashly – to find the answers to these questions which the Tamil – English scholars of the past twelve decades never have asked.
Therefore finding the perspective will reveal.
It is better to retrace, as far as the scope permits, and as the researcher can, the path by which Shakespeare came to the Tamil.
A. Vitalist Approach
The birth of homo – Shakespeare in Tamil
As thirst for knowledge and love of the exotic alternate in the individual, the Tamil psyche as a whole has resolved about Shakespeare intake and reproduction of the intake as the great foci of its orbit.
The literary sensibility has viewed the intake as a means to reproduction and reproduction is a means to further intake.
Not two three languages were involved at a times when the vitalism proper too the psyche under question broke out.
The imperialism of English with its more navigable Shakespeare the immanent sanskritization natural to the land of India as a whole, of the times, when the breaking out commenced and the core Tamil with all its urge to fulfill itself in embracing the great bard together constituted a force acting on the psyche to come out expressed as a resultant power to feed and foster those Shakespeare – themes too finer stature than before.
In the pre – Pammal days of the Tamils the literary sensibility was quiescent with whatever import it could accept and utilize.
The Tamil from Shakespeare were the simplest with the possibility of growth that could compel the bursting apart in theatrical maneuvers of Pammal which were the lowliest form of reproduction.
One might call this literary demurrage.
But the mass of any import grows faster than the surface through which it feeds.
In Pammal’s casual capture and seizure the repeat performances altered themselves by graduation and elongation and to restore the proportion the performances divided and multiplied and the Shakespeare surface as felt by the Tamils did spread down through the division that was again made adequate to the mass of intake.
Thus the masterpiece trickled into the land first as cut piece and finally got assembled into more luminous nuclei of Shakespeare obsession.
This process was by tireless division and re division (for example, stripping the history play / tragedy out of the context of its composition and remaking it in a fashion whatsoever to answer the felt need of psyche under consideration.).
————
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு
பகுதி – 6
ஒளவையவர்கள் உரையெழுதும் புலமைத்திட்பம் ஆழ்ந்து கற்றுணரத்தக்கதாகும்.
மணிமேகலைக்கு ஒளவை எழுதியுள்ள உரைக் குறிப்புகளில், ‘தெய்வ மயக்கு’ என்பதற்குத் ‘தெய்வமேறுதல்’ எனக் கற்பவர் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உரையெழுதியுள்ள பாங்கு அறிந்துணரத்தக்கதாகும்.
இதேபோல், ‘எண்வகைப்பட்ட கூலம்’ என்பதற்குப் பொருளுரைக்கும்போது,
“நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்” என எண்வகைக் கூலங்களின் பெயர்களையும் பலரும் குறிப்பிடுவதுண்டு.
ஆனால், நமது ஒளவையவர்கள், இன்னும் ஒரு படி மேலே சென்று, “கூலம். எண்வகைக் கூலம்.
அவை எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பன.
இவற்றோடு நெல் முதலாக எட்டு வகைகளைக் கூறி இரண்டையும் ஈரெண் கூலம் என்றும் சொல்லுவதுண்டு” எனச் சிறப்பாக விளக்கியுரைத்துள்ளார்.
வேறோர் இடத்தில் வரும் ‘
கன்றிய கள்வன்’ என்ற சொற்றொடருக்கு, “நன்கு பயின்ற திருடன்” என ஒளவையவர்கள் அளிக்கும் விளக்கமும் சுவைக்கத்தக்கதாகும்.
ஔவையவர்கள் எவ்வளவு திட்ப நுட்பமாக உரை வரைவார் என்பதை, ‘ஊர் காண் காதை’ யில் இடம்பெற்றுள்ள பின்வரும் சொற்களுக்கு அவர் அளித்துள்ள பொருள் விளக்கம் வழி அறியலாம்.
“அந்தி – மூன்று தெருக்கள் கூடும் இடம்.
சதுக்கம் – நான்கு தெருக்கள் கூடும் இடம்.
மறுகு – தேர் செல்லும் தெரு.
கவலை – முடுக்கு வழி” என்று ‘
அந்தி, சதுக்கம், மறுகு, கவலை’ ஆகியவற்றை வேறுபடுத்தி ஒளவை பொருளுரைக்கும் உரை நுட்பம் அனைவரும் படித்து இன்புறுத்தக்கதாகும்.
‘பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை’யில், ‘அறிவு’ என்பதற்குப் “பரி நிருவாணத்தை அறியும் அறிவு” எனப் பௌத்தத் தத்துவம் சார்ந்து நுண்ணுரை கண்டுள்ளார்.
அதே வேளையில், ‘அடைக்கலக் காதை’யில் வரும் ‘இயக்கி’ என்பதற்கு, “சைவ சமயத்துத் தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்கும் தொண்டு புரியும் ஒரு தேவதை.
கணவன் இருக்கும்போதே துறவு பூண்ட பெண் துறவி என்றும் கூறுவர்” எனச் சைவ சமயம் சார்ந்தும் விளக்குவார்.
இதற்குப் “புறஞ்சிறைப் பள்ளியிலுள்ள இயக்கிக்குப் பாற்சோறு படைத்து வழிபட்டு வந்த ‘மாதரி’ என்னும் இடைச்சி” எனப் பொருத்தமான மேல் விளக்கமும் அளித்துள்ளார்.
‘வழக்குரை காதை’யில், “கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்” எனக் கண்ணகியைப் பழிப்பதுபோல் இடம்பெறும் கோப்பெருந்தேவியின் கூற்று, சிலப்பதிகாரம் படித்த அனைவரும் அறிந்ததே.
இதற்குத் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பொருந்துமாறு, “தந்தை தாய் முதலாயினாரை இழந்தோர்க்குப் பிறர் தம்மைத் தந்தையென்றோ தாயென்றோ சொல்லித் தேற்றலாம்;
கணவனை இழந்தோர்க்கு அவ்வாறு கூறலாகாது; அதனால் காட்டுவது யாதும் இல்லை என்பதாம்” என ஒளவை அளித்துள்ள விளக்கம், அவரது நுண்மாண் நுழைபுலத்திற்கு மேலுமொரு சிறந்த சான்றாகும்.
இதேபோல், “நடுகற் காதை”யில் வரும் ‘வேள்விக் கிழத்தி’ என்பதற்கு, “வேள்வி செய்பவனுக்கு மனைவி.
ஈண்டு இருங்கோ வேண்மாளைக் குறித்தது.
இனி, இதிலிருந்து செய்யும் அறமும் வேள்வியாதலின், அதற்குரிய மனைவியை ‘வேள்விக் கிழத்தி’ என்றார் எனினுமாம்” எனக் குழப்பத்திற்கிடமின்றித் தெளிவாகத் தமிழ் மரபுரை தருவதும், ஒளவையின் தனிப்பெரும் உரை மாண்பாகும்.
‘கட்டுரை காதை’யில் இடம்பெறும் கண்ணகி தொடர்பான ஒரு புனைவை, எவ்வளவு நுட்பமாக ஔவை விளக்கிக் காட்டுகிறார் என்பதைப் பாருங்கள்.
பூத்துத் தழைத்த வேங்கை மரத்தின் கீழ் நிற்கிறாள் கண்ணகி.
அது அவள் கோவலனை இழந்த 14ஆம் நாள். “நெடுவேள் குன்றம் அடி வைத்து ஏறி” என்பது, இளங்கோவடிகள் எழுதும் அழகிய தொடர்.
இதற்கு ஒளவை எப்படி உரை வரைகிறார்? “அடி வைத்து ஏறி என்றார்.
அதற்கு முன்பு வருத்தத்தால் கால் நிலத்துப் பாவாமையால்” என்றெழுதிக் கண்ணகியின் வருத்தத்தை இளங்கோவடிகள் சித்திரித்ததற்கும் மேற்சென்று காட்டிவிடுகிறார் நம் ஒளவை.
‘தரும வினைஞர்’ என்பதற்கு – ‘அறப்பணியாளர்’ என்றும்;
“குடம்புகாக் கூவல்” என்பதற்கு – ‘வறண்ட குளம்
பகல்செல் வாயில்’ – கிழக்கு வாயில் என்றும்; ‘
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்’
(நூற்கட்டுரை) என்பதற்கு,
“நான்கு உறுதிப்பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய மூன்றும், மணிமேகலை வீடும் கூறுதலின், மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் என்றார்” என்றும்;
‘மண் தேய்த்த புகழ்’ என்பதற்கு, “மண்ணுலகம் சிறுத்துத் தனக்குள் அடங்கும்படி விரிந்த புகழ்” என்றும்;
‘பண் தேய்த்த மொழி’ என்பதற்கு, “இனிமையால் பண்ணின் இசையும் கேட்க உவர்க்கும்படியான சொல்” என்றும்; ‘
முழுநெறிக் குவளை’ என்பதற்கு, “இதழ் ஒடியாத குவளைப் பூ” என்றும்;
‘நகர நம்பியர்’ என்பதற்கு, “நகரத்துச் செல்வ இளைஞர்” என்றும்;
‘அறுகாற் குறும்பு’ என்பதற்கு, “ஆறு கால்களையுடைய வண்டு” என்றும்;
“தென்றலால் தளிர்த்துப் பூத்த பூக்களின் தேனை வண்டு புகுந்து உண்பதால், அந்த வண்டு ‘குறும்பு’ எனப்பட்டது” என்றும்;
‘ஏமம் சாரா இடும்பை’ – “கரை காணப்படாத நோய்” (ஒரு வேளை இன்றைய சர்க்கரை நோய் தானோ அது!) என்றும்; ‘
முழங்குவாய்ச் சாலினி’ – “கொக்கரிக்கும் வாயையுடைய சாலினி; பூசாரிச்சி” என்றும்;
‘நயனில் மொழி’ (வேட்டுவ வரி) – “ஈரமில்லாத சொல்” என்றும்; ‘
அடி தொடு படு கடன்’ – “திருவடியைத் தொட்டுச் சூள் செய்த கடன்” என்றும்;
‘ஒய்யா வினைப் பயன்’ – “போக முடியாத தீவினைப் பயனான துன்பம்” என்றும்; ”
மறவுரை நீத்த மாசறு கேள்வியர்’ – “பாவம் உண்டு பண்ணும் சொற்களைச் சொல்லுதலை நீக்கிய குற்றமற்ற ஞானிகள்” என்றும்;
“மொழிப்பொருள் தெய்வம் – “உபதேச மந்திரம்” என்றும்;
சிந்தை விளக்கு’ – “அவதி ஞானம்; திரிகால உணர்வு” (சமணக் கருத்து) என்றும்; ‘
நோற்றுணல்’ – விரத நாட்களில் பட்டினி கிடந்து உண்பது” என்றும்;
‘உய்திக் காலம்’ – “சாபம் நீங்கும் காலம்” என்றும்
கற்றாருக்கும் கல்லாருக்கும் களிப்பருளும் களிப்பாய் நம் ஒளவையவர்கள் உரை செய்துள்ளார் எனலாம்.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment