POST: 2023-01-22T07:52:59+05:30

சாதனை தமிழர் விருது.

Saadanai Tamilar Virudhu to Scholar,Orator and Kalaimamani,Padmashri Late Dr Avvai Natarajan (Posthumous)

His Son Avvai Arul will receive the Award

PONGAL FESTIVAL

Grand Celebration on Sunday

22nd January 2023 at

National High School (CBSE) Hazra Road Campus
42/1, Hazra Road,
Kolkata – 700 019

From
:
South Indian Associations of Bengal with Bharathi Tamil Sangham
93A, Rash Behari Avenue,
Kolkata 700 026

We, South Indians of Bengal, solicit the joy and honour of your esteemed presence to celebrate the
Grand Pongal Festival on 22nd January 2023, Sunday from 10.00 am. to 5.00 pm
at National High School – (CBSE) Hazra Road Campus
42/1, Hazra Road, Kolkata – 700 019

Dr. Shashi Panja
Hon’ble Minister for Industries, Commerce & Enterprises and Department of Women and Child Development and Social Welfare Government of West Bengal.

has kindly consented to be the Chief Guest of the celebration Guest of Honour:

Thiru Debasish Kumar
( Member of the Legislative Assembly of West Bengal )

Special Guests: Dr. S. Raju
(Director General, Geological Survey of India, Kolkata)

Thirumathi J. Charukesi
(Chief Post-Master General, WB Circle, Sikkim & Andaman)

Thiru S. Sivakumar
(General Manager – Marketing Meenakshi Mission Hospital & Research Centre)

Various Cultural Programme rendered by several associations of Kolkata.

Details of the programme are given in the next pages

Please join us for Pongalo Pongal

S. Mahalingam
Convener:
Pongal Organising Committee

BHARATHI TAMIL SANGHAM
CHINMAYA MISSION
EXCELSIORS CLUB
NHS KOLKATA ALUMNI ASSN.
SAASTHA SAMOOHAM
SANMARGA TRUST
SOUTH INDIAN ASSN., HOWRAH UDAYAM
::ORGANISERS::
BHARATHI TAMIL SANGHAM BRAHMAPUR BR.
CALCUTTA SOUTH INDIA CLUB
N.R.IYER MEMORIAL EDUCATION SOCIETY
RASIKA RANJANA SABHA
SANKARA HALL
SRI GURUGUHA GANA VIDYALAYA
TAMIL MANRAM
VED BHAVAN
Partners of Pongal Festival:
ITC Limited
Coal Indie
Bharatiya Vidya Bhavan
N.R lyer Memorial Education Society
NATIONAL HIGH SCHOOLS
MEENAKSHI MISSION HOSPITAL & RESEARCH CENTRE
MADURAI

HAPPY NEW YEAR 2023
AND
HAVE A GREAT PONGAL

மேற்கு வங்கத்தில் தமிழ்ப் பொங்கல் விழா

பாரதி தமிழ்ச் சங்கம், கொல்கத்தா
பாரதி பிறந்தநாள் விழா
வாழ்நாள் சாதனைத் தமிழர் விருது 2022
கலைமாமணி பத்மஸ்ரீ முனைவர் அவ்வை நடராசனார் அவர்களுக்கு வழங்கப்பட்டது

செய்தி வெளியீடு

கவின்மிகு நகரம் கொல்கத்தா நகரம்!

கலைகள் மேல் காதல் கொண்ட நகரம்!

கனி போல் மனதுடைய மக்கள் கொண்ட நகரம்!

கன்னித் தமிழ் மக்களை காதலிக்கும் நகரம்! காளி அன்னையவள் காக்கின்ற நகரம்!

என்ற பெருமைகளை உடைய கொல்கத்தா மாநகரத்தில் கன்னித்தமிழ் வளர்க்கும் கவி பாரதியின் பேர் கொண்ட பாரதி தமிழ் சங்கத்தில் கடந்த 18 வருடங்களாக பாரதி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாதனைத் தமிழர் விருது வழங்கும் நிகழ்வு நிகழ்த்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் 2022 பாரதி பிறந்தநாள் விழாவில் நாடு போற்றும் நல்லவர்!

அன்னைத் தமிழின் அருமை மைந்தர்!

செந்தமிழ் செல்வர்! செவிக்கினிய செந்தமிழ் பேசும் நடராசர்!

எனப் பல பெருமைகளுக்குரிய முனைவர் அவ்வை நடராசன் அவர்களுக்கு வழங்க செயற்குழுவில் நிச்சயத்து அவரிடம் ஒப்புதலும் பெறப்பட்டது.

அப்பெருமகனார் முப்புறம் எரித்த சிவனார்க்கு செந்தமிழ் தொண்டு செய்ய வானுலகம் எய்தியதால் அப்பெருமகனாரின் அருமை புதல்வர் அருட்செல்வர் முனைவர் அவ்வை அருள் அவர்களிடம் தந்தையின் சார்பில் சாதனைத் தமிழர் விருதினைப் பெற இசைவு பெறப்பட்டது.

அதன்படி, 22.01.2023 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க மண்ணிற்கும் கொல்கத்தா வாழ் தமிழ் மக்களுக்கும் பாலமாக விளங்கும் அத்தனை தமிழ் அமைப்புகளும் இணைந்து நூறு வருடங்களுக்கும் மேலாக கல்விப் பணி ஆற்றி வரும் தேசிய உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடத்தப்பெற்றது.

பாரதி தமிழ் சங்கத்தின், தலைவர், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், கவிஞர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு. சம்பத்குமார் அவர்கள்,

கொல்கத்தா வாழ் பெருமக்கள் முன்னிலையில்,

தந்தை அவ்வை நடராசனார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வாழ்நாள் சாதனைத் தமிழர் விருதினை, தனயன் முனைவர் அவ்வை அருள் அவர்களிடம் வழங்கினார்.

முனைவர் அவ்வை அருள் அவர்கள் தந்தையின் சார்பில் விருதினை பெற்றுக்கொண்டு பின்வருமாறு ஏற்புரை வழங்கியதோடு, பொங்கல் விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசளித்துப் பாராட்டினார்.

“ஒளவை” என்று சொன்ன மாத்திரத்திலேயே மேடைகளில் பொங்கிப் பெருக்கெடுத்து அவையினரின் செவிகளில் தமிழமுது பாய்ச்சும் நாவுக்கரசர், நற்றமிழறிஞர், முனைவர், பேராசிரியர் ‘நடராசப் பெருந்தகையின் திருவுருவம் மனக்கண்ணில் துலங்கித் தெரியும்.

இவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக விளங்கியபோதிலேயே இவரது சொல்லாற்றல் கண்டு வியந்த சுரதா, இவரைப் ‘பாதி அண்ணா” என்று பாராட்டிச் சென்றார்.

அவருடைய நுட்பமான அறிவு சங்க இலக்கியம் தொடங்கிப் பழம்பெரும் இலக்கியங்கள் தொடங்கி புராண, இதிகாச இலக்கியங்களுக்கு வந்து அதன் பிறகு புதுக்கவிதை, கவிக்கோ அப்துல் ரகுமான், சிற்பி, முருகுசுந்தரம் அவர்கள் இன்னும் பின்னால் வந்த நா.காமராசன், மு.மேத்தா இப்படி ஒரு மிகப்பெரிய ஆற்றொழுக்கான தமிழ் இலக்கிய வரலாறு என்று நாம் எதைப் படிக்கிறோமோ அந்தத் தமிழ் இலக்கிய வரலாறுக்கு கை, கால் முளைத்தால் அது தான் எந்தையார் அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள்.

தமிழக அரசால் கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, இந்திய ஒன்றிய அரசின் பத்மசிறீ விருது, இலங்கை, கம்பர் கழகத்தின் தன்னேரில்லாத தமிழ் மகன் விருது”, இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது, தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, அருட்செல்வர் மகாலிங்கம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
இத்தகைய பெருமைகளுக்குரிய ஔவை நடராசன் அவர்களுக்கு இந்தக் கொல்கத்தா மண்ணில் வாழ்நாள் சாதனைத் தமிழர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது

எங்களை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.

இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்ததோடு, விருதினை அளித்த பாரதி தமிழ்ச் சங்கத்திற்கும், கொல்கத்தா வாழ் தமிழர்களுக்கும் ஔவை குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் திருமதி. சசி பாஞ்சா அவர்களும்

சட்டமன்ற உறுப்பினரான தேபாஷிஷ் குமார் அவர்களும்

டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்ச் சங்க செயலாளர் திரு. புகழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *