POST: 2023-01-23T11:59:15+05:30

தினசெய்தி – 22 1 2023
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 145

செம்மையில் நிற்பது

முனைவர் ஔவை அருள்

தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வில், தோய்ந்த பேராசிரியர் பெருமக்கள் மத்தியில் பன்மணிக் கருத்துத் திரள்களை எடுத்துச் சொல்வதில் நான் மிகவும் அக மகிழ்ந்தேன்.

அத்தலைப்பில் நீண்டு உரைக்கும் பொழுது ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் ஆழமும், அகலமும், உயர்வையும் மேன்மையையும் பல சான்றுகளுடன் மேற்கோளிட்டு பேசும் பொழுது அறையிலிருந்த அசாமியத் துறைப் பேராசிரியர் வியந்து நின்றார்.

அந்தக் குறிப்புகள் வருமாறு:

To achieve a partial desanskritization and through that to enable Tamil to grapple with the immeasurable charm of Shakespeare genius, the process went on and on until the mind faints numbering them.

The translation disciplinarians of a renaissance mould may look down upon the simple animalcules of characters the Tamils incarnated from Shakespeare, but it must be noted, that then began parentage if not patronage of Tamil – Shakespeare combines.

Since there was no differentiation of languages with literary fanaticism, at that time, there was presumably no love.

This explanation is theory, but the division, Shakespeare – division was fact enough.

The Pammal – train as an organism divided itself into two:

First as an importer of the exotic Shakespeare,

Second as the recipient of the same in a form, performable, in an empirical sense with the Tamil alongside English, even in Homo – Shakespeareans of the Tamil land; and through the brief history, this developed the formula into a thousand complications and the land never abandoned it.

Among the earliest adaptations / retellings, the generation of Shakespeare opus in Tamil was through division of form into forms.

The dialogues gave way to prose and the drama to tale.

The adaptation with the new names for characters was a sort of budding which amounted to variation on the theme.

In Pammal’s import, becoming the very name of the Sabha.

He ran, it was a sort of an assemblage of local elements proper to puppetry and conventions proper to epic invocations commingled with the stalk of Shakespeare – story that grew by feeding on the life – stream of its parent, the patriarchal English.

As Pammal – train matured it reached our pugnaciously for fodder in competition with the very original from which it budded forth; at last it tore itself loose and found new rootage is assemble.

The Suguna Vilas wrapped Shakespeare between the invocation and auspicious songs at the close and between interludes, characteristic of the Sanskrit – Sutradharin – tradition.

Shakespeare remained embedded in this literary gelatin and formed a “troupes” from where a startling differentiation of function arose.

The externalities specialized in the intake and the internal dialogue (to reduce the dialectical tensions that mounted between the Mother Tamil and the aggressivity of the English) in reproduction the troupes became a socio literary organism with inter dependent and co-operative academic recognition.

At the very beginning of Pammal’s panorama, the Tamil – Shakespeare epiphenomenon offered us a rehearsal of that isolation of the original Shakespeare upon which the experimenters based their prevailing practices of heredity in Homo – Shakespearean in Tamil.

But the division of literary form into what Pammal and his following willed, through universal inside the Tamil psyche; (it) did not suffice.

The time came after two generations when the respectedly divided form seemed to lack the energy and particularly the poetic energy required to reproduce / invite new Shakespeare’s in Tamil.

At this point, a new phenomenon appeared.

When teachers fished the originals through editions and transferred them to the best schools, a second generation of scholar performers emerged.

But editions as pure printed text were seditions when they were handed over to the Tamil natives.

————

சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு

பகுதி – 7

ஒளவையவர்கள் எழுதியுள்ள சிலப்பதிகாரச் சுருக்கம் மற்றும் சிலப்பதிகார ஆராய்ச்சியிலும், மணிமேகலைச் சுருக்கம் மற்றும் மணிமேகலை ஆராய்ச்சியிலும் அரிய ஆய்வுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன.

அவற்றில் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

“வனசாரினி யான்; மயக்கம் செய்தேன்;

புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்

என் திறம் உரையாது ஏகுக”

என்ற பாடலுக்குக் குறிப்பெழுதும்போது,

“வனசாரிணி – வனத்தில் திரியும் இயக்கி. தவத்திலும் கற்பு சிறந்தது; அதனால் கண்ணகியை முற்கூறிப் புண்ணிய முதல்வியைப் பின்னர்க் கூறினார்” எனக் கண்ணகிக்குச் சிறப்புச் செய்கிறார் ஒளவை.

மேலும், “மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்” என்ற வனசாரினியின் கூற்றுக்கு, “மேலோர் – முனிவர்; நூலோர் – கற்றோர்; பால்வகை தெரிந்த பகுதியோர் – நூல்களைக் கல்லாது இயல்பாகவே நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்தறிந்து ஒழுகும் மதிநுட்பமுடையவர்”

என ஒளவை தந்துள்ள தெளிவுரையும் கருதத்தக்கதாகும்.

‘ஊர்காண் காதை’யில், “காவலில் சிறந்த அடல் வாள் யவனர்க்கு” என வரும் தொடருக்கு,

“இளங்கோவடிகள் காலத்தும், அவருக்கு முன்னும் இவ்விடத்தே காவல் தொழிற்கு யவனர்களே பெரிதும் ஆளப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு வரலாற்று முடிவு.

அதனால் அவர் பயிற்சி மிகவுடையராய்ச் சிறந்திருந்தனர் என்றற்குக் காத்தல் தொழிலில் மேம்பட்ட (யவனர்) என்றார்” எனத் தமிழ்நாட்டு வரலாற்றுக்குப் பொருந்துமாறு ஒளவை குறிப்பெழுதியுள்ளார்.

“மழை பிணித்து ஆண்ட மன்னவன்” என்று வரும் தொடருக்கு, ஔவை எழுதியுள்ள விளக்கம், மிகவும் சிறப்புடையதாகும்.

“மழை பெய்யாது ஒழிந்த முகிலினத்தைப் பற்றி நீங்காதவாறு விலங்கிட்டு மழை பெய்வித்துக் கொண்டவனாகிய பாண்டியன்” எனச் செயற்கை மழையைக் குறிப்புணர்த்தி எழுதுவதுடன் மட்டும் அமையாமல், “இச்செயல்கள் திருவிளையாடற்புராணத்து விரியக் காணப்படுகின்றன” எனத் தொடர்புடைய பிற இலக்கியக் குறிப்பைக் காட்டுவதிலும் ஒளவைக்கு நிகர் ஒளவையே எனலாம்.

இதேபோல் வேறோரிடத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் மேற்கோள் காட்டி ஒளவை விளக்கியுள்ளார்.

“இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி, ஓர் செம்மையில் நிற்பதும்” என்ற மாடல மறையோனின் கூற்றில் வரும் “செம்மையில் நிற்பது” என்பதற்கு, “அந்தமில் இன்பத்து அழிவில் வீடு” என்ற நம்மாழ்வாரின் தொடரைப் பொருத்திக் காட்டுகிறார் ஒளவை.

வேனிற் காதையில், “அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கட்செல்வனும் செவ்வியன் அல்லன்” என்ற தொடர் வருகிறது.

இதற்கு ஒளவை வரையும் பின்வரும் தெளிவுரையைப் பாருங்கள்.

“அந்திப் போதகம் – அந்தி மாலையாகிய யானை; அரும்பிடர் – ஏறுதற்கரிய கழுத்தின் மேல்; செவ்வியன் அல்லன் – நேர்மையின்றி உடலாலும் கோணியிருப்பவன்; அதனால் இன்பம் செய்யான்” என்றெழுதுகிறார்.

கதைப்போக்கில் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஔவையின் உரைக் குறிப்புகள் அமைவதற்குப் பின்வரும் விளக்கத்தைச் சான்றாகக் காட்டலாம்.

“இச்சிலம்பை முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு (கண்ணகியைக் கோவலன்) அழைக்கின்றான்.

இவ்வாறு தன் மனைவியையும் உடன் அழைத்தது இவன் வரலாற்றில் தான் புதுமையாய்க் காணப்படுகிறது.

அக்கண்ணகியாரும் அவன் சொற்படியே புறப்பட்டு விடுகின்றார்” எனப் பாமரருக்கும் புரியும் வகையில் சிலப்பதிகாரத்தின் நூதனத் தன்மையை ஔவை விளக்கிவிடுகிறார்.

சில இடங்களில், புலவர் கூறியதற்குத் தமக்குக் காரணம் தெரியாதபோது, “தெரியவில்லை” என்பதைத் தெளிவாகப் பதிவுசெய்வதிலும் ஒளவை தயங்காதவர் எனலாம்.

“இளங்கோவடிகள் கண்ணகி, கோவலன் என்ற இருவர் பிறப்புக் கூறியவர் மாதவியின் பிறப்புக் கூறாராயினார்.

மாதவியின் குணம், செயல்கள் கற்புடை நன்னெறியவாதலின், அந்நெறி வழாது பிறந்த மணிமேகலையின் பிறப்புக் கூறாமைக்குக் காரணம் தெரிந்திலது” என நேர்மையுடன் குறிப்பெழுதுகிறார் ஒளவை.

இங்கே இளங்கோவடிகளைக் குற்றஞ்சாட்டாமல், ஆனால் தம் கருத்தையும் தெரியப்படுத்திக் குறிப்பெழுதும் ஒளவையின் உரை நயத்தை வியந்து நாம் கற்க வேண்டும்.

இதேபோல் பிற ஆய்வறிஞர்களின் கருத்தை மறுக்குமிடத்திலும், நயத்தகு நாகரிகத்துடனேயே மறுப்பது ஔவையின் இயல்பாகும்.

“வஞ்சி நகரம் என்பது இப்போது கோயமுத்தூர் சில்லாவிலுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக்களம் என்பாரும் பல திறத்தர் ஆராய்ச்சியாளர்.

வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சி நகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை” என்கிறார் ஒளவை.

‘கானல் வரி’யில், மாதவி கூற்றாக இடம்பெறும், “நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்தவழி, சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்! ஊர்ந்தவழி சிதைய, ஊர்ந்தாய்மற்று எம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம்!” என்ற அழகிய பாடலுக்கு, “தீர்ந்தாய்போல் தீர்ந்திலை – உறவுபோல் இருந்து உறவாய் இல்லை; காரியத்தில் வேறுபடுகின்றாய்” என மாதவியின் ஆழ்மனம் அறிந்து நயமாகக் குறிப்பெழுதுகிறார் ஒளவை.

இரட்டைக் காப்பியங்களில் எடுத்தாளப்படும் அருந்தமிழ்ச் சொற்களுக்கு மிகவும் ஆழமாக விளக்கமளிப்பதில் ஒளவையவர்கள் தனித்திறனுடையவராவார். ”

பற்றா மாக்கள்” என்பதற்கு, “அன்பில்லாதவர்” எனப் பொருளுரைத்துள்ளார். ”

ஆருயிர் ஓம்பும் ஒருபெரும் பூட்கை” என்பதற்கு, “நிறைந்த உயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோள் (துணிவு)” எனப் பொருளுரைத்துள்ளார்.

வீழ்துயர் – மிக்க துயரம் என்றும்;

விழுமக் கிளவி – துயரத்தைப் புலப்படுத்தும் சொல் என்றும்;

துணிபொருள் – மெய்ப்பொருள் என்றும்;

பராவரும் மரபு – வழிபடும் முறைமை என்றும்;

அறச்செவி – அறத்தைக் கேட்டற்குரிய காது என்றும்;

மறச்செவி – பாவத்தைக் கேட்கும் காது என்றும்; உணர்வு பாழாகி – அறிவு கெட்டு என்றும்;

ஆருயிர் மருந்து – சோறு, துறக்கம் என்றும் ஒளவை நுண்ணுரை கண்டுள்ளார்.

கற்போருக்குச் சொற்கள் விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஒளவை உரை செய்துள்ளார்.

‘அறவிலை பகர்வோர்’ என்பதற்குப் ‘பயன் நோக்கி உதவி செய்வோர்’ என்று எழுதும்போது, எளிதாக நமக்குப் பொருள் புலப்பட்டு விடுகிறதல்லவா! ”

மண்திணி ஞாலம்” – “அணுக்கள் செறிந்த நில உலகம்” என்றும்;

“விடுநிலம்” – மேய்ச்சலுக்காக அரசினால் விடப்பட்ட புல்வெளி” என்றும்; ”

படுபுல்” – தானே முளைத்துச் செழித்த புல் என்றும்;

“பேணுநர் இல்லோர்” – அகதிகள் (அனாதைகள்) என்றும்;

“திருந்து முகம்” – உவகையால் மலர்ந்த முகம் என்றும்; ”

குமரி மூத்த பாத்திரம்” – வறிதே நெடுநாள் கிடந்த கலம் என்றும்:

“வெவ்வுரை” – இன்னாச்சொல் என்றும் இன்றைய வாசிப்பாளர்களுக்குப் புரியும்

வகையில் ஒளவை குறிப்பெழுதுவது கவனிக்கத்தக்கதாகும்.

பழைய இலக்கியங்களைப் பொருள் தெரிந்து படிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியதில் ஒளவையின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதற்காகத்தான் இவற்றைக் குறிப்பிடுகிறேன்.

தத்துவ நுட்பமுடைய சொற்களுக்குக் குறிப்பெழுதும் போதும் ஆகப்பெரும் தெளிவுடனேயே ஒளவை செயல்பட்டுள்ளார்.

“உயர்நிலையுலகம்” என்பதற்கு – “நிருவாணம்” என்றும்;

“பெரும் பேறு” என்பதற்கு – “பரி நிருவாணம்” என்றும்;

“தணியா வேட்கை” என்பதற்கு – “மாற்ற முடியாத ஆர்வம்” என்றும் நயம்படப் பொருள் விளக்கம் எழுதியுள்ளார் ஒளவை.

“ஊரீரேயே” என்ற தொடருக்கு, ‘ஊரில் உள்ளவர்களே’ என்றெழுதிவிடாமல், “ஊரில் உள்ள சான்றோர்களே! (உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே!)” எனத் தொல்காப்பிய மரபுப்படி குறிப்பெழுதும் புலமைத் திறமுடையவர் நம் ஒளவை.

“துயரெஞ்சு கிளவி” என்பதற்கு, “நல்ல வார்த்தை” என்றும்; ”

மாயப் பொய்” என்பதற்கு, “வியக்கத்தகுந்த பொய்” என்றும் நுட்பமாகக் குறிப்பெழுதியுள்ளார்.

‘ஆதிரை பிச்சையிட்ட காதை’யில் வரும் “அரும்பெறல் மரபு” என்ற தொடருக்குப் “பெறுதற்கரிய முறைமை” (கற்பு) எனப் பொருளெழுதியுள்ளார் ஒளவை.

இன்னுமோர் உதாரணம் காண்போம்.

“உடம்போடு என்றன் உள்ளம் புகுந்து, என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சகக் கள்வி” என்பதற்குத்

“தன் நெஞ்சினை அவள் கவர்ந்தேகியதனைத் தான் அறியாமையின் ‘வஞ்சகக் கள்வி’ என்றான்” எனத் தம் மேதைமை தோன்றக் குறிப்பெழுதியுள்ளார்.

அகப்பொருள் விளக்கங்களில் மட்டுமல்லாமல், பல்சமயத் தத்துவ நுட்பங்களிலும் கைதேர்ந்தவர் ஒளவை என்பதற்குப் பின்வரும் சான்றுகளைக் காட்டலாம்.

‘கந்திற்பாவை வருவது உரைத்த காதை’யில் இடம்பெறும் “தலைவன் காக்கும் தம் பொருட்டாகிய அவல வெவ்வினை என்போர் அறியார்” என்ற தொடருக்கு, “அவல வெவ்வினை – மெலிவை உண்டு பண்ணும் கொடிய வினை.

வினையினின்றும் தம்மைத் தலைவனாகிய கடவுள் காப்பன் என்போர் அறியாதார் என்க.

இது ‘இறைவனொருவனுண்மை’ துணிந்து, வினைத்துயர் நீங்க அன்பு நெறியில் வழிபடும் சைவர் முதலாயினாருக்கு மறுப்பு” எனத் தாமே சைவராயினும் (இது அதற்கு எதிராகப் பேசுவதாயினும்), சீத்தலைச்சாத்தனாரின் ‘வினைக்கே முதன்மையளிக்கும்’ பெளத்தக் கருத்தினைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே உரைக் குறிப்பாகத் தந்துள்ள ஔவையின் புலமை மாண்பு போற்றத்தக்கதாகும்.

துறக்கமா? நிருவாணமா? எது உயர்ந்தது என்று கேட்டால், பெளத்தர்களுக்கு நிருவாணமே உயர்ந்ததாகும்.

இதை நன்கறிந்தவர் ஔவை என்பதனால் தான், “வேண்டாத் தொல்லோய்” என்ற தொடருக்குக் குறிப்பெழுதும்போது, “அழிவில்லாத நிருவாணத்தை விரும்புதலால், அழியும் இயல்பினதான துறக்கம் வேண்டப்படாததாயிற்று” என்றெழுதுகிறார் ஒளவை.

இதேபோல், ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’யில் இடம்பெறும் “ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு” என்ற தொடருக்குக் குறிப்பெழுதும்போதும்,

“ஆரியன் – அரியவனாகிய புத்தன். ஆரியன் என்பது அருமையென்னும் சொல்லடியாகப் பிறந்த செந்தமிழ்ச் சொல்” எனப் பலருக்கும் வியப்பளிக்கும் வகையில், ‘ஆரியனை’ச் செந்தமிழ்ச் சொல்லாகக் கண்டு மிகவும் நுண்ணியதோர் விளக்கமளித்துள்ளார் ஒளவை.

வளரும் . . . .

– முனைவர் ஔவை அருள்

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *