தினசெய்தி – 5 2 2023
பக்கம் எண் :4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 147
வினைப்பயன் விடாது வந்து பற்றும் !
முனைவர் ஔவை அருள்
தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு:
From a historicist point of view, this could not be long possible.
Professors and men like
T.P. Meenakshi Sundaram and
T.N. Seshachalam were that sure of Shakespeare hunt and for survival and uniqueness, Shakespeare slid down the thread of refugee of variegated criticism continental, for dear life.
It all seems today that the great Bard has become a wary of syllabus and never given in to the superior appetite of a few in Tamil land.
To yield to translation is no ultimate gallantry and to translate one like Shakespeare is no ultimate reproductive function.
The head is of little use in tumor.
Is it not because of this fact that great professors of Shakespeare seldom translated him.
Well at that time, a ‘manipravala’ Tamil housed two languages in the same frame.
All that was necessary for the invention of Shakespeare through a core – Tamil was a variation in which the language Tamil was updated, capable of producing only one of the generative elements.
English usurped the dyadic nature of the ‘manipravala’ gradually and Shakespeare hastened the novel separation of form and language into parthenogenetic transcreations.
This was possible owing to the fertilized Tamil psyches transmission to the subsequent Englishless generations: of these there is as yet no certainty.
But the actual possibility of dispensing with the Shakespeare original has been demonstrated n many celluloidal creations.
The separation of form and language inside Tamil and the separation of the core Tamil and Sanskritic predecessor made it possible to unite in the translation the inherent capacities of two distinct lines of ancestry.
Thus translation as a mode of transition in Tamil land amounted to cross fertilization of Shakespeare – genius which Tamil psyche.
The translation of a translation is not a redrafting in the literary sense but an incest which socio – literary and psycho literary factors in the Tamil land promoted and not prohibited.
But English loving Tamil scholars of T.N. Seshachalam’s make attacked Shakespeare exogamously and it was the highest form of drive toward cross fertilization of Shakespeare reproduction which became possible, due to the precedence of Swami Vibulananda’s wisdom.
His was a poetic of differentiation and a conglomerate of two antiquities classical Tamil and Sanskritic cemented by the illustrative new classic universals of Shakespeare.
There is a classical profusion of material that conceded in the psyches translation urge.
The abundance of Tamil is not a waste, but it provides the material our of which a selection weeds the weaker efforts and encourages the stronger, it is not to honour too much our psyche and the Tamil psyche and the Tamil psyche is not so English prone as one doubts and it is from their mother tongue the Tamils doubtless inherit their resourceful disinclinations to other languages and purism to the point of austerity.
The Pammal method brought Shakespeare to pit to lay his dramaturgy and submit it to the care of Tamils.
The adaptations embraced Shakespeare just until they watched something that passed for Shakespeare.
So bit by bit, the love of English replaced and atoned for Tamil’s romantic waste in the area of Shakespeare transfigurations.
Thus from 1900 onwards,, markedly the obsolescent (4 centuries of Shakespeare scholarship) tended to become adolescent which depended largely on the period of education rising to loftier levels than before.
So, from the view point of the vitalist approach, the problem of Shakespeare phenomenon in Tamil land assumes that Tamil and English in Shakespeare scholarship each of the two when separated is but the indenture of a Homo – Shakespearean.
Hence what is Shakespeare – epiphenomenon in Tamil land assumes a philosophic consciousness in the loneliest adoption or seizure of Shakespeare cheating the theorists and disciplinarians with a vicarious continuance.
Perhaps that is the road by which Shakespeare came to Tamils.
————
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு
பகுதி – 9
மணிமேகலையின் ஆசிரியரான மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குறித்துச் சிறப்பாக நமது ஒளவையவர்கள் ஆராய்ந்துள்ளார்கள்.
“இவரது பிறந்த ஊர் சீத்தலை என்பதும், வாணிகம் செய்தல் பொருட்டு மதுரையில் இருந்தவர் என்பதும் அறியப்படும்.
சீத்தலை என்னும் இவ்வூர், இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லா பெரம்பலூர்த் தாலுக்காவில் உளது என்பர்.
கூலமாவது நெல், வரகு, தினை, சாமை முதலிய பதினொரு வகைப் பொருள்களின் பொதுப்பெயர்” என்கிறார் ஒளவை.
மேலும், சீத்தலை என்பதை ஊர்ப் பெயராகக் கொள்ளாது ஒரு காரணம் பற்றி வந்த பெயராகக் காலஞ்சென்ற டாக்டர் உ.வே. சாமிநாதையர் கொண்டதையும்,
நற்றிணை உரைகாரரான பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர்,
“சீத்தலை என்பது ஓர் ஊர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவைபோல. பெருஞ்சாத்தன், பேரிசாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவர் இயற்பெயர் ஊர்ப் பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டது” என்று பொருள் கொண்டதையும் எடுத்துக்காட்டி, இவ்விருவரின் கூற்றுகளில் நற்றிணை உரைகாரர் கூறுவதே இயற்கையில் பொருந்துவதாகத் தோன்றுகிறது என்கிறார் ஒளவை.
எனினும், ஓர் ஆய்வறிஞருக்கே உரிய அடக்கவொடுக்கத்துடன், “எதிர்காலத்தே அறிஞர் ஆராய்ந்து உண்மை துலங்குங்காறும், சீத்தலையென்பதை ஊர்ப் பெயராகக் கோடலே சிறப்பு என்க.
இதனைத் திரு. உ.வே. சாமிநாதையரும் ஒருவாறு உடன்பட்டுச் சீத்தலையென்னும் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனார் என்பது இவரது இயற்பெயரென்று ஒருசாரார் கூறுவர்” என்றுரைத்துள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார் ஒளவை.
சங்க இலக்கியத்தில் பத்துப் பாடல்கள் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டனவாகக் கருதப்படுகின்றன.
இவர் பாலை, குறிஞ்சி, நெய்தல் என்ற மூன்று நிலத்துக் கருப்பொருளையே மிகுதியாகப் பாடும் பான்மையுடையவர்.
அகநானூற்றில் முல்லைத் திணையிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் (அகம் : 134).
ஆனால், “இவர் முல்லை ஒழிய ஏனை நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார்” என்று பின்னத்தூரார் கூறியுள்ளார்.
ஒருகால் அவர், சீத்தலைச் சாத்தனாரின் முல்லைப் பாட்டினைக் காணாது போயினார் போலும்; கண்டிருப்பின் இவ்வாறு கூறாரன்றே!” என நயமாகப் பின்னத்தூராரை ஒளவை மறுத்தெழுதியுள்ளார்.
சீத்தலைச் சாத்தனாருக்குத் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன் எனச் சிலப்பதிகாரத்தில் மூன்று பெயர்கள் இளங்கோவடிகளால் சுட்டப்படுகின்றன.
“இவற்றை நோக்கின், இவர் அடிகட்கு ஒருகால் தமிழாசிரியராக இருந்திருக்கலாமோ என்று நினைத்தற்கும் இடமுண்டாகிறது” என்கிறார் ஒளவை.
இவ்வாறு ஒரு நூலுக்கு உரைக் குறிப்பெழுதும்போது, நூலாசிரியரின் பெயர், அவர் பிறந்த ஊர், அவர் பாடிய நிலங்கள், அவரது பாடல்களின் கருப்பொருள் எனப் பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தம் ஆய்வுக் கருத்துகளைப் பதிவுசெய்யும் பாணி ஒளவையின் தனித்துவமாகும்.
நூலாசிரியரைப் பற்றி மட்டுமல்லாமல், நூலின் நடை, யாப்பு, காலம், நூலினுள் காணப்படும் வடசொற் பயன்பாடு, நூலாசிரியர் வரலாறு எனப் பலவற்றையும் பற்றிய நுண்ணிய கருத்துகளைத் தேடித் தொகுத்து தருவதிலும் ஒளவை சிறந்திருந்தார்.
“இந்நூல் நடை சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்யுள் நடையின் வேறுபட்டிருத்தலாலும், சங்கச் செய்யுளில் காணப்படாத வழக்காறு சில இந்நூலில் காணப்படுதலாலும், இந்நூலுட் காணப்படும் அரசர் வரலாறுகள் சில வரலாற்று நெறிக்கண் நோக்கியவழி மயக்கந் தருதலாலும் இந்நூலை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாரது வரலாறு ஆராய்தற்குரியதாகிறது.
சிலப்பதிகாரம் இந்நூலாசிரியரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்காது, வறிதே சாத்தன் என்றே கூறுகிறது.
இந்நூற் பதிகம் மட்டில், ‘மதுரைக் கூலவாணிகள் சாத்தன்’ என்று கூறுகிறது.
தொல்காப்பிய உரைகாரர்களும், இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்கின்றனரேயன்றி, ‘மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார்’ என்று கூறவில்லை.
ஆகவே, இச்செய்தி மிக ஆர அமர இருந்து ஆராய்தற்குரியது என்பது விளங்கும்” என்கிறார் ஒளவை.
தகுந்த சான்றுகள் கிடைக்கும் வரையில், எது பற்றியும் முடிவுரைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்ற ஔவையின் கருத்து,
இன்றைய ஆய்வாளர்களும் இனி வரும் ஆய்வாளர்களும் மதித்துப் பின்பற்ற வேண்டிய உயர்ந்த கருத்தாகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையை மிகுந்த தனித்தன்மை கொண்ட காப்பியமாகவும், நடையின் நின்றுயர் காப்பியமாகவும் ஒளவையார் மதிப்பிடுகின்றார்.
“அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது;
ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுள்களை – நூல்களை நோக்க, அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது” என்று மணிமேகலையின் தனிச்சிறப்புகளை மதிப்பிட்டுரைக்கிறார் ஒளவை.
மேலும், மணிமேகலையின் காலம் குறித்துத் தகுந்த தரவுகளின்றித் தீர்மானகரமாக முடிவுசெய்ய முடியாத நிலை ஆய்வுலகில் நிலவுவதையும் ஒளவை சுட்டிக்காட்டுகிறார்.
“திருமணக் காலத்தில் ‘மாமுது பார்ப்பான் மறைவழி’ காட்டலும், ‘தீவலம் செய்தலும்’ சங்க இலக்கிய காலத்தில் இல்லை.
இந்நூலுட் கூறப்படும் தருக்க முடிவுகள் நான்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகத் தோன்றுகின்றன.
இன்னோரன்னவற்றைக் கொண்டு ஆராயும் அறிஞர், அடிகள் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு என்பர்.
இக்கூற்று மெய்ப்பிக்கப்படுமாயின், அடிகள் காலத்தோடு சாத்தனார் காலமும் தெளிவாகிவிடும்” என்கிறார் ஒளவை.
அதாவது, இளங்கோவடிகளின் காலமும் சீத்தலைச் சாத்தனாரின் காலமும் குறித்து மேலும் நுணுகி ஆராய வேண்டிய நிலையே தமிழ் ஆய்வுலகில் உள்ளதென்கிறார் ஒளவை.
மணிமேகலையில் கிளைக் கதைகள் பல காணப்படுவது பற்றி, “மலையடியில் தோன்றும் ஆறொன்று இடையிடையே தோன்றி வரும் சிற்றாறுகளின் சேர்க்கையால் பெருகித் தங்குதடையின்றி ஏகும் காட்சியை நினைவில் தோற்றுவிக்கின்றது – காப்பிய நிகழ்ச்சியுடன் கிளைக் கதைகள் வந்து இயைந்து செல்லும் செலவு” என்கிறார் ஒளவை.
மேலும் அவர், “பதினைந்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சியோடு விரவியொழுகிய போதும் காப்பியப் பொது நிகழ்ச்சி சிறிதும் சிக்குண்டு தெளிவுபடும் திறம் பெறவே இல்லை.
இவை யாவும் காரண காரிய முறையிலும் எடுத்துக்காட்டு வகையிலும் வந்து இயைவதால், படிப்போர்க்குக் காப்பிய நிகழ்ச்சியைப் பின்பற்றிச் செல்லுதற்குச் சிறிதும் அருமை தோன்றுவது கிடையாது.
ஒரு நிகழ்ச்சியைக் கண்டபின் இதன் விளைவு என்னவோ எனப் படிப்போரை திகைப்பித்துத் தெளிவிக்கும் புலமைத் திறம் இக்காப்பியக் காலத்தில் இல்லை.
அத்திறம் இதன்கண் அமைந்திருப்பின், இதனிற் சிறந்த இலக்கியம் வேறே இல்லையென்றே துணிந்து கூறிவிடலாம்” என்றும், மணிமேகலையின் நூதனத் தன்மையை விளக்கியுரைக்கிறார் ஒளவை.
மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரின் நோக்கம் யாது?
எதை வலியுறுத்துவதற்காகச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார்?
இக்கேள்விகளுக்குப் பின்வருமாறு விடையளிக்கிறார் ஒளவை. ‘
பிறப்புப் பல மாறினும், வினைப்பயன் விடாது வந்து பற்றும்’ என்ற ஒன்றை வற்புறுத்துதலையே இவர் நோக்கமாக உடையவர் என்பது தோன்றுகிறது.
இவ்வகையில் இவர் நோக்கமும் இளங்கோவடிகள் நோக்கமும் ஒன்றாதல் விளங்கும்.
ஏனைச் சமயக் கணக்கர் தம் சமயப் பொருள் காட்டிப் புத்த சமயத்தின் கருப்பொருளை உணர்த்தல் வேண்டும் என்பது இரண்டாவதேயாகும்” என்று மிகவும் நுண்ணிய முறையில் ஆசிரியரின் நோக்கம் பற்றித் தெளிவுறுத்தியுள்ளார் ஒளவை.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment