POST: 2023-02-14T09:40:27+05:30

பண்புடையாளர் தொடர்பு.

என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நினைவில் வாழும் கனியரசு ஆண்டோ பீட்டரின் உற்ற தோழர் தேனியில் புகழொடு இருக்கும் தமிழாசிரியர் பீட்டர் தன்னுடைய அடர்த்தியான அன்பை என்னிடமும் சுருளி அருவியைப் போல பொழிவார்

.8.2.23 அன்று இரவு கம்பத்தில் என்னை சந்தித்து தன் உயிரனைய நண்பர்களான

தொழிலதிபர் அன்பழகன்,

நிலக்கிழார் மக்கள் அன்பன்,

பல்துறை வித்தகர் ஜாய்,

தமிழாசிரியர் வில்லியம்சு

ஆகியோரை என் நட்பு வலையில் சிக்கென பிடிக்க வாய்ப்பு நல்கினார்.

இன்முகத்திலகங்கள் ஐவரும்

தமிழ் மொழியின் மீது தீராக்காதலொடு நூல்கள் வெளியிடுதல், பதிப்பித்தல், அலொசியசு பள்ளியில் நூலகம் நிறுவதல்,
திருமண மன்றத்தில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துதல், காணக்கிடைக்காத தமிழ்,ஆங்கில நூல்களைப் படித்து திறனாய்தல்,
வளரும் தலைமுறைக்கு அறிவு விருந்து படைத்தல்,
நகைச்சுவை மன்னர் என் எசு கிருஷ்ணன் நினைவாக மன்றம் நடத்துதல்

என்று தங்கள் தொழிலும் ஆழ்ந்த பற்றுக்கொண்டு இத்தனையும் அமைதியாக விரிவாக செய்து வருவதை காணும் பொழுது உவகையாக உள்ளது.

நண்பர்களை சந்தித்து சென்னை வந்த பிறகு திருவள்ளுவர் உரைத்த நவில்தொறும் நூல் நயம் போல குறள் (Good books are like good friends A perpetual delight)நினைவில் அலை அலையாக நுரைப்பூக்களின் நறுமணம் கமழச் செய்தன..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *