POST: 2023-02-17T09:57:44+05:30

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சென்னையில்,
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
கவிஞர் மருதகாசி
ஆகியோரை நினைவுகூரும் வண்ணம் 03.02.2023 வெள்ளிக்கிழமையன்று
எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்கள் 21 பேரும்
(மாணவிகள் – 16 பேர், மாணவர்கள்- 5 பேர்)
கல்லூரி மாணவர்கள் 26 பேரும் (மாணவிகள் – 18 பேர், மாணவர்கள் – 8 பேர்) கலந்து கொண்டனர்.

பள்ளிப் பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்
மொழிபெயர்ப்பாளர் திரு. சீனி இராஜகோபாலன்,
வழக்கறிஞர் திரு. பால. சீனிவாசன், திறனாய்வாளர் மஸ்கட் திரு. இராஜ்குமார்
ஆகியோரையும்

கல்லூரி பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்
எத்திராஜ் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திருமதி அரங்க. மல்லிகா,
பேராசிரியர் திருமதி கௌரி, தியாகராயர் கல்லூரி பேராசிரியர் திரு. மகாதேவன்

ஆகியோரையும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அறிமுகம் செய்யும் வாய்ப்பு அமையப்பெற்றது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *