POST: 2023-02-26T10:31:35+05:30

தினசெய்தி – 26 2 2023
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 150

முனைந்து தேடிய ஆய்வு !

முனைவர் ஔவை அருள்

தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக சுருக்க ஆய்வுக் குறிப்பினை வழங்கிய பிறகு அங்கிருந்த பன்மொழிப் பேராசிரியர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து ஆய்வு நோக்கமாக ஆய்வேடு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

காரணம், நான் எழுதிய சுருக்க ஆய்வினைப் படித்து ஒரு சில பேராசிரியர்கள் ஆங்கில வளமையைக் கண்டு மலைத்துப் போனாலும் ஆய்வேடுகளுக்கென்று ஒரு தனி நடை உள்ளதைச் சுட்டிக்காட்டி எக்காரணம் கொண்டும் மிகுதியாக எழுதிக் காட்டுவதோ, புகழுரைகளை வண்ணமயமாகத் தீட்டிக் காட்டியோ, அடுக்குத் தொடர்களை இணைத்து எழுதிக் காட்டுவதையோ தவிர்க்க வேண்டும் என்று என் ஆய்வு நெறியாளர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் மூன்று நாள் பாடமாகத் தன் இல்லத்திலேயே அமர்த்திக் கொண்டு சொன்னவைகள் இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.

ஆய்வுப் போக்கில் பல மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி எழுதினாலும் யார்? எங்கே? எப்போது சொன்னது? என்பதை மறக்காமல் பதிவிடுவது ஆய்வாளர்களின் பெரும் கடமையாகும்.

அவ்வண்ணமே, யாரோ சொன்னார்கள்; எப்போதோ படித்தேன்; எங்கேயோ கேட்டேன் என்றெல்லாம் நினைத்த மாதிரி ஆய்வுக் கட்டுரைகள் அமையக் கூடாது என்று வகுத்துக் கொண்டு ஆய்வு மேம்பாட்டிற்கு உரிய பொருண்மைகளோடு என்னுடைய நிறைவு ஆய்வினை 1994ஆம் ஆண்டு வழங்கி, தில்லிப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் 1995இல் வழங்கியபொழுது என்னை விட, என் பேராசிரியரை விட டில்லியில் கரோல்பாக் இல்லத்தில் அன்னமிட்ட பேராசிரியரின் துணைவியார் கண்களில் நீர் பணித்தன.

என்னை வாழ்த்தி வாழ்வாங்கு வாழ்வாய் இன்னும் பல ஆய்வுக் கட்டுரைகளை நீ எழுத வேண்டும் என்று வாழ்த்திய அம்மையாரை நான் பெரிதும் நன்றியுடன் நினைந்து பார்க்கிறேன்.

ஆய்வுக் கட்டுரை வருமாறு:

Ever since the advent of Shakespeare’s classics in India, he has been a constant stimulus to literature in various Indian languages in general and Tamil Nadu, in particular. If ‘wiving goes by destiny’, it was truly said of my father and mother, who played and continue to play the roles of Bassanio and Portia that must have instilled in me, a lifelong enthusiasm for Shakespeare right from my childhood.

I still distinctly remember how I played the role of Portia in – Rosary Nursery School in Royapettah, Chennai, some twenty five years back and that is the strength of early seeding.

Years later, I chose for my M.Phil Thesis, the topic ‘Foreign words in Tamil’ and I could not but think of works and epigrammatic utterances of Shakespeare, and proverbs, that we have appropriated in our every day life.

I had by then arrived at the conclusion that one’s knowledge expands through acquaintance with the great works embodying universal truths on art and life, reflected in the languages other than one’s own.

After Shakespeare slowly started capturing the mind space among the literary circles in India, the syllabus in our schools and colleges introduced Shakespeare in the Form of Lamb’s Tales, Historical tales, Scenes from Shakespeare and full texts as well.

The constant impact of Shakespeare that attracted the attention of scholars and translators and researchers, led to the creation of dissertations on translations.

I have made an exhaustive study of the translations, and the pioneering influences and I also wish to indicate that further research work could be taken up to complete the unfinished work of Othello, by the great bilingual scholar T.N.Seshachalam, which I have attached in the Appendix.

I have also safeguarded myself against over or under estimating the impact of Shakespeare.

Being a Tamil, I feel that the classical inheritance of the Tamils has stimulated translation studies in Shakespeare or look for Shakespearean parallels and thus I have adopted the methodology of a translator and a comparatist.

The thesis is bilingual wherever the translated passages occur, though I have not followed transliteration.

I am deeply grateful to my guide Dr. P.Balasubramanian who, besides suggesting this interesting area of research, directed me in the right direction in procuring material for my research.

His illuminating comments and critical observations were a source of great inspiration for me.

I record with joy the pleasant hours spent with Dr.S.Thiyagaraja Sarma, Retired Professor and Head of the Department of English,Sri Pushpam College, Poondi, Thanjavur.

His interpretations and critical remarks created in me a kind of enthusiasm that made me further my research.

No less is my sense of gratitude to Prof. C.S.Kamalapathy, veteran Shakespearean actor-scholar, who obliged me with an interview and provided me with useful material for my work.

I am extremely grateful to Prof. Jagadeesan, Retired Professorof English, Presidency College, Chennai, for his invaluable help and guidance in revising the Thesis and getting it to this form and for having diligently read through the proof.

In procuring my source material, most of which are rare and out of print, appended in my thesis, I had to go through old periodicals and publications and explore the stacks of various libraries in India.

Even though I have been able to procure some rare translations of Shakespeare’s texts by A.Madhavaya, A.K.Aditar, T.Lakshmana Pillai and G.Sundaram, I have not been able to include them for want of space.

I have been greatly benefited by the thesis of
Dr. Palany Arangaswamy, a pioneer and path-finder in this field.

My indebtedness to him is beyond words.

With his ideas as a background, I felt more than enthused to pursue the study.

It is needless to say that fresh, multi-faceted and prolific studies of Shakespeare are around the corner, for the up-coming research scholars with an enthusiasm for Shakespeare.

I am grateful to all the librarians.

Literary research is an ongoing process and one has to take into account the various aspects of the language such as semantics, syntax, and grammar.

I have tried my best to show how, Tamil, a language with a rich cultural heritage and a capacity to absorb influences, has welcomed Shakespeare with open arms to appropriate the Bard into its own literary base.

I record with gratitude the Herculean task undertaken by my guide to sit with me and go through the revised thesis.

He acted as a great stimulus for my revision and spared no pains to go through my manuscripts once again.

It was a labour of love to do this research work on Shakespeare.

I am conscious of my own limitations and inadequacy for the task.

But my love for the Bard is great.

A chance discussion (we have many discussions on culture and literature were some turn into debates) with my childhood friend S Saiseshan on Tamil and Shakespeare turned into one where we started exploring the possibility of a book from my thesis.

He is a man of varied interests and literature is one of those.

His proficiency in both, Tamil and English. and his knowledge of Tamil culture and history gave me the confidence that we can actually make a book out of this.

Thus, began our journey where we discussed various aspects of translations, adaptations and interpretations.

The result of such discussions is the book that you now have in your hand.

We hope you will like this as much as we did in authoring it.

“My love is strengthened, though more weak

In seeming I love not less, though less.”

——————-

சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு

பகுதி – 12

‘சைவ இலக்கிய வரலாறை’த் திருஞானசம்பந்தரின் வரலாற்றிலிருந்து ஒளவையவர்கள் தொடங்குகிறார்கள்.

‘திருஞானசம்பந்தர்’ பற்றிய சைவ மரபுக் கதைகள் யாவற்றையும் அவர் வரலாற்றில் ஒளவை தொகுத்துரைக்கிறார்.

ஓரிடத்தில், திருஞானசம்பந்தர் சீர்காழிக்கு வந்தபோது, அவரைக் காணத் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியான மதங்க சூளாமணியாரும் வந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

அப்போது அவர், “திருக்கொள்ளம்பூதூர்க் கோயிற் கல்வெட்டொன்றால் இந்நீலகண்டப் பாணனார் திருவுருவத்தையும் இவர் மனைவியார் திருவுருவத்தையும் கோயிலில் எழுந்தருளிவித்து நாளும் வழிபாடு செய்யப் பெற்றமை (A.R.No.254 of 1917) தெரிகிறது.

இவர் மனைவியார் “(சிவ) சூடாமணியென இக்கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார்” என்றெழுதுவதிலிருந்து, வெறும் விளக்க உரை மட்டுமெழுதும் உரையாசிரியர் இல்லை ஒளவை என்பதும், தேவைப்படும் இடங்களில் கல்வெட்டுச் சான்று காட்டித் தம் கருத்தை நிறுவ வல்லவர் என்பதும் அறியப்படுகிறதெனலாம்.

திருஞானசம்பந்தர் வரலாற்றை ஒளவை எழுதும்போது, உமை அவருக்குப் பாலூட்டியது, அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தின் மூலம் சம்பந்தர் சமணரையும் பௌத்தரையும் வென்றது, வேந்தனுக்கு உண்டான வெப்பு நோயைப் போக்கியது, பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை என்ற பெண்ணை மீள எழுப்பியது, ஞானசம்பந்தருக்கு இறுதியில் மணம் நிகழ்ந்தது எனச் சேக்கிழாரை அப்படியே தழுவி ஒளவை எழுதியுள்ளார்.

ஐதீகச் செய்திகளை விமர்சனமின்றி அப்படியே ஏற்று ஔவை எழுதியுள்ளதாகக் கூறலாம்.

ஓர் உதாரணம் பார்க்கலாம். “திருவோத்தூரில் ஓரன்பர், திருக்கோயில் ஆற்றங்கரையில் இருத்தலின் அதற்கு அடைகரையாகப் பனைமரங்களை வைத்து வளர்த்து வந்தார்.

அவை யாவும் ஆண் பனைகளாய்க் காயாதொழியவே, அவ்வூர்க்கருகில்வாழ்ந்த சமணர்களுட் சிலர் அவரை எள்ளி நகையாடினர்.

அக்காலை ஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளவும் அவ்வன்பர் உண்மையைப் பிள்ளையாரிடம் அறிவித்துக் கொண்டார்.

பிள்ளையார் திருவோத்தூர் இறைவனைப் பாடிப் பரவிய திருப்பதியத்தில் இக்குறிப்பினை வைத்துப் பாடியருளினர்.

அதன் பின் பனைகள் பூத்துக் காய்க்கத் தொடங்கின” என்கிறார் ஒளவை.

இதேபோல்தான், திருஞானசம்பந்தரின் திருமணம் பற்றிச் சேக்கிழார் கூறுவதையும், அப்படியே ஒளவை ஏற்றெழுதுகிறார்.

“திருமண முடிவில் மணமக்களும் மணத்திற்கு வந்திருந்த உறவினர், சான்றோர் முதல் அனைவரும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவன் திருமுன் நின்றனர்.

ஞானசம்பந்தப் பிள்ளையார் இனிய அழகிய திருப்பதியத்தால் இறைவனைப் பாடிப் பரவினார்.

உடனே ஒரு பேரொளி தோன்றி ஒரு வாயிலும் காட்டி நின்றது.

யாவரும் அதனுட் சென்றனர்.

எல்லாரும் சென்ற பின் ஞானசம்பந்தப் பிள்ளையார் மணமகளின் கையைப் பற்றிக்கொண்டு அதனுட் “புக்கு ஒன்றி உடனானார்” என்றெழுதுகிறார் ஒளவை.

சைவ மரபின் மீது ஒளவையவர்களுக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பை, ஐதீகங்களை அப்படியே வழிமொழியும் ஒளவையின் இத்தகைய எழுத்துகளால் அறிகிறோம்.

எனினும், இவ்வாறு எழுதும்போதும்கூட, ஔவைக்குள் ஓர் ஆய்வறிஞரும் இருக்கவே செய்கிறார். ”

(திருஞானசம்பந்தரின்) மணமகளின் பெயர் இன்னதெனச் சேக்கிழாரால் குறிக்கப்படவில்லை.

ஆயினும், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சபுரம்) கோயிற் கல்வெட்டொன்றால் (A.A.No.527 of 1918), அவர் பெயர் சொக்கியாரெனத் தெரிகிறதெனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை கூறுகிறது (A.R. for 1919, para 3)” என்றெழுதுகிறார் ஒளவை.

எனவே, தாமெழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும், கூடுதல் ஆதாரங்களை முனைந்து தேடிப் பதிவுசெய்யும் இயல்புடையவர் ஒளவை என்பது வெளிப்படையாகும்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தைத் தழுவியெழுதுவதுடன் மட்டும் அமையாமல், ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியையும் ஞானசம்பந்தரின் வரலாற்றுக்குத் தேவைப்படும் இடங்களில் மேற்கோள் காட்டவும் ஒளவை தவறுவதில்லை.

பிற அடியார்களுடன் ஞானசம்பந்தரை ஒப்பிட்டுரைக்கும் திறத்திலும் ஒளவை தலைசிறந்தவராயுள்ளார்.

திருநாவுக்கரசர் மட்டுமல்லாமல், “திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், பாண்டி வேந்தனான நெடுமாறனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் முதலியோர் ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவராவார்” என்றெழுதுகிறார் ஒளவை.

மேலும் அவர், எவ்வளவு ஊன்றிக் கவனித்துத் திருஞானசம்பந்தரின் வரலாற்றை எழுதுகிறார் என்பதற்குப் பின்வரும் பகுதியையும் சான்று காட்டலாம்.

“திருஞானசம்பந்தருடைய திருப்பதியங்களில் அவரால் குறிக்கப் பெற்றிருக்கும் சண்டேசுரனார், கண்ணப்பர், நமிநந்தியடிகள், கோச்செங்கட் சோழன், முருக நாயனார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், பாண்டி மாதேவியாரான மங்கையர்க்கரசி யார், குலச்சிறையார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் என்ற பன்னிருவருள், மேலே கூறிய திருநீலநக்கர் முதலிய எழுவர் நீங்கலாக எஞ்சும் ஐந்து பேர்களும் திருஞானசம்பந்தர்க்குக் காலத்தால் முற்பட்டோராவர்” எனத் தெளிவாகக் காலக் குறிப்புடனெழுதுகிறார் ஒளவை.

திருஞானசம்பந்தரின் காலம் எது என்பது குறித்துத் தமிழிலக்கிய ஆய்வாளர்கள் பலரிடமும் காணப்படும் பல்வேறு கருத்துகளை ஒளவை எடுத்துக்காட்டுகிறார்.

சைமன் காசி செட்டியார் – ஐந்தாம் நூற்றாண்டு;

சி.வை. தாமோதரம் பிள்ளை – 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்;

கொழும்பு திரு. ஆனரபிள் P. குமாரசாமியவர்கள் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு;

அறிஞர் ஹூல்ஸ் – கரிகால் சோழனின் காலத்தவர்;

மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை – கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்;

தஞ்சை ராவ்சாகிபு திரு. கே.எஸ். சீனிவாசப்பிள்ளை – கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி;

பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை – கி.பி. 609 – கி.பி.642க்கு இடைப்பட்ட 16 ஆண்டுக் காலம் எனப் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக்காட்டியுள்ளார் ஒளவை.

இவற்றுள், மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையவர்களின் கருத்தோடு பெரிதும் ஔவை ஒத்துப்போவதாகக் கருதலாம்.

வளரும் . . . .

– முனைவர் ஔவை அருள்

தொடர்புக்கு : dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *