POST: 2023-03-02T10:12:06+05:30

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

உள்ளம் உகக்கும்
உலகத் தாய்மொழி நாள்

உவகைப் பெருவிழா
அழைப்பிதழ்

21.02.2023 செவ்வாய்க்கிழமை

நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி
தேனாம்பேட்டை

பெருந்தகையீர் !
வணக்கம்.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில்.

யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு ஆண்டுதொறும்

” உலகத் தாய்மொழி நாளை தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாகக் கொண்டாடி வருகிறது.

சிந்தை மணக்கும் இச்செந்தமிழ்ப் பெருவிழாவில் என்றுமுள தென்றமிழின் இணையில்லாப் பெருமையினை இளந்தலைமுறையினர் அறிந்து பயன்கொள்ளும் வகையில்

பன்னருங் கலைதெரி பட்டிமன்றமும்.

காவில் ஆடும் களிமயிலாய்ப் பாவில் ஆடும் பாட்டரங்கமும்.

ஏழிசைத் தமிழேத்தும் இளையோர் அரங்கமும்,

கண்கள் குளிர்விக்கும் கவினார்ந்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

உள்ளொளி பெருக்கும் உலகத் தாய்மொழி நாள் உற்சாகத் திருவிழா சிறக்க அனைவரும் வருகை புரியுமாறு கனிவன்புடன் வேண்டுகிறேன்.

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

காலை 9.30 – 10.30 : தமிழ்த்தாய் வாழ்த்து

கலை நிகழ்ச்சி : நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி மாணவியர் அணி

வரவேற்புரை : ஒளவை அருள்

முன்னிலை : பத்மபூஷன் திரு. மூசா ராசா
தலைவர். நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி

வாழ்த்துரை : திரு. பைசூர் ரஹ்மான் சயீத்
செயலர், தென்னிந்திய அறக்கட்டளை. தாளாளர்
நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி

முனைவர் அம்துல் அஜீஸ்
முதல்வர். நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி

பட்டிமன்றம்

காலை 10:30 – 12 :00

தலைமை : கலைமாமணி நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ. லியோனி

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு துணை நிற்பவை

இதழ்களே ! : மரு. ஜெயராஜமூர்த்தி

தொலைக்காட்சியே ! : பேராசிரியர் விஜயக்குமார்

திரைப்படங்களே ! : கவிஞர் இனியவன்

பாட்டரங்கம்

நண்பகல் 12.00 – 1.00

தலைமை

நண்பகல் 2.00 – 3.30 தலைமை கவிவேந்தர் மு.மேத்தா

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

திருவள்ளுவரின் அறத்தமிழ் – கவிஞர் இரா. இளையராஜா

ஒளவையாரின் மறத்தமிழ் –
கவிஞர் கங்கை மணிமாறன்

பாரதியாரின் எழுச்சித் தமிழ் – கவிஞர் தஞ்சை இனியன்

பாவேந்தரின் புரட்சித் தமிழ் –
கவிஞர் ஜான் தன்ராஜ்

கலைஞரின் முத்தமிழ் –
கவிஞர் நெல்லை ஜெயந்தா

இளையோர் அரங்கம்

நண்பகல் 2:00 – 3:30

தலைமை : வழக்கறிஞர்
திரு.மா.ப. நாதன்

நற்றமிழ் தடம்பதித்து நிமிர்ந்து நிற்பது

படைப்புகளில் : ஆசிரியர் சரவணன்

திரைப்படங்களில் :
செல்வி சா. ஆசிகா ஃபாத்திமா

வலைதளங்களில் : திரு. மோகநிதி

மேடைகளில் : செல்வி ஆயிஷா

நிறைவு விழா

நண்பகல் 3.30

வரவேற்புரை : ஒளவை அருள்

தாய்மொழி நாள் தகவுரை : பேராசிரியர் முனைவர்
பர்வீன் சுல்தானா

வாழ்த்துரை : முனைவர் இரா. சந்திரசேகரன்
இயக்குநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான
அரசாணைகளையும்.

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்களுக்கான பரிசுத்தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி விழாப் பேருரை

: மரு. இரா. செல்வராசு அரசு செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

நன்றியுரை : திருமதி தே.ஜெயஜோதி
உதவி இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *